From harikris@... Tue Jan 08 06:09:55 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 14:09:53 -0000
Received: (qmail 37847 invoked from network); 8 Jan 2002 14:09:53 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 14:09:53 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 14:09:54 -0000
Received: from harikris ([203.199.240.73]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GPMI0F03.E2W for ; Tue, 8 Jan 2002 19:39:51 +0530
Message-ID: <006f01c1984e$3c095480$49f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
References: <20020108072107.9435.qmail@...>
Subject: Re: [agathiyar] Maari worship
Date: Tue, 8 Jan 2002 19:39:18 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Message-Num: 14634

அன்புள்ள முருகன்,

அப்படித்தான் இருக்கும் போலிருக்கிறது.எல்லிஸ் ரோடில் ஒரு எல்லம்மன் ஆலயம் உண்டு. கிட்டத்தட்ட ஆற்காட்டு நவாபின் மசூதிக்குப் பின்னால் வரும். எந்தக் காலத்திலோ அது எல்லை அம்மனாக இருந்திருக்கும் போலிருக்கிறது.

எனக்குத் தெரிந்தே நகரத்தின் கோலாகலம் தற்போதைய LICக்கு அப்பால் மாலை ஆறு மணிக்குப் பிறகு அடங்கிவிடும். வெலிங்டனுக்கு அருகே இருக்கும் தர்காவிலிருந்து இரவு வேளைகளில் அந்தப் பக்கம் போகிறவர்களைப் பிசாசு வந்து பிடித்துக் கொள்ளும் என்றெல்லாம் சொல்வார்கள். காசினோ தியேட்டரைத் தாண்டிப் போவதற்கே பயமாக இருக்கும். எல்லைசியைத் தாண்டினால் மஹா இருட்டு. நட்சத்திரங்கள் பளிச்சென்று தெரியும். (எல்லிஸ்ரோடின் பக்கவாட்டுச் சந்தில் மின்சாரம் வந்த முதல் வீடு எங்கள் வீடுதான் - அதுவும் எனக்குத் தெரிந்துதான் - என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.)

தற்போதைய SIET கல்லூரி கட்டப் பட்டுக் கொண்டிருந்த போது இளைத்துப் போய் சோகையாக, மண்சாலையாக, ஒரு தெரு அருகில் ஓடிக் கொண்டிருந்தது. ஆழ்வார்ப்பேட்டையில் எங்கள் உறவினர் ஒருவருடைய வீடு இருந்தது. அங்கே ஏழெட்டு வயதில் போயிருந்தபோது கட்டப்பட்டுக் கொண்டிருந்த SIET கல்லூரி அருகில் உறவுக்காரப் பெண்ணோடு போனதும் - அவளுக்கும் என் வயதுதான் - இ'து என்ன ரோடுடி' என்று கேட்டதும், 'மண்ரோடுடா' என்று அவள் சொன்னதும் பசுமையாக மனத்தில் இருக்கிறது. அவள் சொன்னது மவுன்ட் ரோடு! இப்போதைய அண்ணா சாலை. தென்னந்தோப்பும் நெல் வயலுமாக நான் பார்த்த இடம். வாகனப் புகையொழுக்கால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கிறது.

எல்லைகளெல்லாம் நகர மையங்களாக மாறிவிடும் போது எல்லையம்மன் நகருவதில்லையே! பெயர் மட்டும் நசுங்கி உரு 'மாறி' விடுமோ! (ஆகாகா.... 'சிலேட்டைக்கு' என்ன அருமையான இடம்!) காரணம் புரியாமலும், திரும்பத்திரும்ப சொ(மெ)ல்லுவதாலும் எல்லம்மனாகி விடுவாளோ?

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.

----- Original Message -----
From: "Shaboo"
To:
Sent: Tuesday, January 08, 2002 12:51 PM
Subject: RE: [agathiyar] Maari worship


|
| --- "era.murugan_achwin" wrote:
| > Dear Dr.Ganesan,
| >
| > Does 'Ellammaa' originate in 'ellaiamma'?
| >
| > anbudan,
| > EraMurukan
| >