From ramaninaidu@... Tue Jan 08 08:33:54 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 16:33:54 -0000
Received: (qmail 80579 invoked from network); 8 Jan 2002 16:33:50 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 16:33:50 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 16:33:50 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.163) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 8 Jan 2002 16:33:47 -0000
Message-ID: <006e01c19862$48083940$a3eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppavai 25 tamil
Date: Tue, 8 Jan 2002 21:53:32 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14636
திருப்பாவை - நாள் இருபத்தைந்து - பாடல் இருபத்தைந்து
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தருக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோரெம்பாவாய்.
இருபத்தைந்தாவது பாடலும் வைஷ்ணவ மரபிலான வேண்டுதலாக அமைந்திருக்கிறது.
பாடலின் முதற்பகுதி மீண்டும் கண்ணனின் இளமைப் பருவத்தைப் பற்றியும் கண்ணனைக் கொல்லக் கம்சனின்
பலனில்லாத முயற்சிகள் பற்றியும் பேசுகிறது. கம்சனின் சகோதரியான தேவகியின் மகனாகச் சிறையில்
பிறந்தவன் கண்ணன். இரவோடு இரவாக யசோதையின் மகனாக வளரக் கோகுலத்துக்குப் போய்ச் சேர்ந்தவன்.
தேவகியையும் யசோதையையும் ஒருத்தி என்ற ஒரே சொல்லில் குறித்தாலும் ஒருத்தி, இன்னொருத்தி என்ற
பொருளில் வழங்குவது தெளிவு.
சம்பிரதாயமான விளக்கமோ தனிச்சிறப்பு வாய்ந்தவள் என்ற பொருளில் ஒருத்தி என்ற வார்த்தை
பயன்படுவதாகச் சொல்லும். கண்ணனை மகனாகப் பெற்றெடுத்த தனிச்சிறப்பு ஒருத்திக்கு. இன்னொருத்திக்குக்
கண்ணனை மகனாக வளர்த்த தனிச்சிறப்பு.
இங்கே முக்கியமாகப் படும் வார்த்தை ஒளித்து என்ற வார்த்தையாகும். ஓரெழுத்தை மாற்றினால் பொருள் மாறிப்
போகும் - ஒளித்து என்பதற்குப் பதிலாக ஒளிந்து என்று சொல்லிப் பாருங்கள். தன் அவதாரத்திலும் இறைவன்
ஒளிந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கண்ணனின் வளர்ப்புத் தாய்தந்தையருக்கு கண்ணனின் அவதார
மேன்மை தெரியாதல்லவா?
வழக்கமாகவே குழந்தையைப் பொத்திப் பொத்தி வளர்ப்பது இந்தியத் தாய்மையின் சிறப்பு. ஏதாவது
நேர்ந்துவிடுமோ என்று ஆநிரை மேய்க்க மற்றவரோடு கண்ணனை அனுப்பாமல் வைத்திருந்தார்களாம். கைக்
குழந்தையை அந்தி சந்தி நேரத்தில் வெளியே எடுத்துச் செல்ல மாட்டார்கள். அந்த நேரத்தில்தான் தேவ அசுர
கணங்கள் உலாவும் நேரமாம். எனவே குழந்தை எந்தத் தீங்குக்கும் ஆட்படக் கூடாது என்று அந்தி சந்தி நேரத்தில்
வெளியே எடுத்துச் செல்ல மாட்டார்கள். இப்படியாகத் தாய்மையின் கரிசனத்தோடு வளர்ந்தவன் கண்ணன்.
தன்னை அழிக்கப் பிறந்தவன் வளர்ந்து கொண்டிருப்பது கண்டு பொறுக்க முடியவில்லை கம்சனுக்கு. எனவே பல
அசுரர்களை அவனைக் கொல்ல அனுப்பினான். அப்படியும் கண்ணனை அவனால் அழிக்க முடியவில்லை. நெருப்பென்ன
நின்ற நெடுமாலே என்ற வரியின் அழகைப் பாருங்கள். அழிக்க முடியாமல் கண்ணன் வளர்கிறானே என்ற எண்ணமே
நெருப்பாகக் கம்சனின் நெஞ்சில் ஓங்கி நின்றதாம். வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருத்தல் என்று
சொல்லும் வழக்கத்தை நினைத்துப் பாருங்கள்.
சம்பிரதாயமான விளக்கம் இன்னமும் சுவாரசியமானதாக இருக்கிறது. கண்ணனைப் பிரிந்து வேதனையில் வாழும்
கன்னியரின் வருத்தமேல்லாம் ஒன்று சேர்ந்து கம்சனை வருத்தும் கவலையாக மாறியது என்பார்கள். மேலும்
தேவகியின் வயிற்றில் வரமாக வந்த கண்ணன் கம்சனின் வயிற்றில் நெருப்பாக ஆனான் என்றும் சொல்வார்கள்.
சற்றே நீட்டித்த விளக்கம் என்றாலும் வைஷ்ணவ மரபில் வந்தவர்களுக்கு எளிதில் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக
அமைகிறது இந்தச் சம்பிரதாயமான விளக்கம்.
அதைவிட முக்கியமாகப் பாடலில் வெளிப்படும் செய்தி திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி என்ற
வரியில் இருப்பதாகக் கொள்ள வேண்டும். அப்படிப் பாடும்போது வருத்தமும் தீர்ந்துவிடுமாம். வருத்தம் என்ற
வார்த்தைக்கு சோகம், சிரமம், வலி, ஆயாசம் என்று பல பொருள் காணலாம். என்றாலும் ஆயாசம் என்ற
பொருள் கொள்ளுவது பொருத்தமாகத் தோன்றுகிறது. அடுத்து வரும் வார்த்தை மகிழ்வு. என்றாலும் வருத்தத்துக்கு
ஆயாசம் என்று பொருள் கொள்வதற்குக் காரணம் இருக்கிறது. வருத்தம் நீங்கும் போது மகிழ்ச்சி வந்தே
ஆகவேண்டும் என்று கருத்தில்லை. இறைவனோடான தொடர்பை இழந்துவிட்ட ஆயாசம் தீர வேண்டும் என்பதுதான்
வேண்டுதல் ஆகிறது என்று கொண்டு பாருங்கள். இறைவனோடான இடையீடற்ற தொடர்பின் மகிழ்வைத்தான்
மகிழ்ச்சி என்று கொள்ள வேண்டும்.
பாடல் தொடர்ச்சியைக் காணும்போதும் இந்த விளக்கம் ஏற்புடையதாகத் தெரிகிறது. இருபத்து நான்காவது
பாடலில் வேண்டிக் கொண்டபடி இறைவன் தன் பிரமாதம் முழுக்கத் தோன்ற ஆயர் சிறுமியரிடையே வந்து சீரிய
சிங்காதனத்து இருந்தான். எனவே இருபத்தைந்தாம் பாடல் அப்படி வந்து சேர்ந்த இறைவனிடம்
சரணடைவதாக இருபத்தைந்தாம் பாடலின் கருத்து அமைகிறது என்க. பாடலின் வேண்டுதல் என்னவென்றால் இப்போது
தோன்றி மறுபடி மறைந்து போகாமல் என்றென்றும் எப்போதும் உன்னோடு நாங்கள் இருக்க நீ அருள் புரிய
வேண்டும் என்பதாகும். இதுவே பாவை நோன்பின் பறை, பரிசு, வரம் ஆகிறது. முன் வந்த பாடல்களில்
தம்மை இறைவனுக்கு ஒப்புக் கொடுத்துவிடுவதைத் தீர்மானமாகவே பாவையர் வெளிப்படுத்தியிருந்தனர். கடைசிப்
பாடலுக்கு முந்தைய பாடலிலும் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் என்று தமது
கடப்பாட்டை உறுதி செய்கின்றனர். எனவே இந்தப் பாடலில் இறைவனோடு இடையீடற்ற தொடர்பு வேண்டிப்
பாடுவது தெளிவாகத் தொனிக்கிறது என்றுதான் கொள்ள வேண்டும்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com