From ramaninaidu@... Tue Jan 08 08:34:54 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 8 Jan 2002 16:34:54 -0000
Received: (qmail 77700 invoked from network); 8 Jan 2002 16:34:49 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 8 Jan 2002 16:34:49 -0000
Received: from unknown (HELO smtp018.mail.yahoo.com) (216.136.174.115) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 8 Jan 2002 16:34:49 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.163) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 8 Jan 2002 16:34:46 -0000
Message-ID: <007001c19862$6b29c100$a3eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppalliyelucci 5 tamil
Date: Tue, 8 Jan 2002 21:55:09 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14638

நாள் இருபத்தைந்து - திருப்பள்ளியெழுச்சி - பாடல் ஐந்து

பூதங்கள் தோறும் நின்றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் என நினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறியோம் உனைக் கண்டறிவாரை
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக்கும் அரியாய் எங்கள் முன்வந்து
எதங்கள் அறுத்து எம்மை ஆண்டு அருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

இறை இயல்பில் ஏறக்குறைய அனைத்து மதங்களும் சிறப்புச் செய்வது மூன்று கூறுகளாகும். ஒன்று அனைத்தையும் கடந்து
நித்தியமாக இருப்பது. இரண்டு அனைத்தினுள்ளும் பரவியிருப்பது. மூன்றாவது அடியார்க்கு எளியனாயிருப்பது.
திருப்பள்ளியெழுச்சியில் ஐந்தாம் பாடலும் இவ்விறை இயல்புகளைக் கொண்டாடி மாந்தரைப் பாதுகாக்கப் கோரும்
வகையில் அமைகிறது.

பூதங்கள்தோறும் நின்றவன் என்று தொடங்குகிறது பாடல். திருவெம்பாவையின் பதினெட்டாவது பாடலில்

பெண்ணாகி ஆணாகி அலியாய்ப் பிறங்கு ஒளி சேர்
விண்ணாகி மண்ணாகி

என்று குறித்தலைக் காண்க.

போக்கிலன் வரவிலன் என்று சொல்லித் திருவெம்பாவையின் ஒன்பதாவது பாடலில் சொன்னதை உணர்த்துகிறார்.

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே.

அத்தகைய இறைவனைப் பாடித் துதித்து உணர்ந்து ஆடுதலன்றிக் கண்டறிந்து கொள்ளும் விதமில்லை என்கிறார்.
மனம், மொழி, மெய், வாக்கு, காயம் ஆகியவற்றால் உணரப்படாதவன் என்பது பொருளென்க.

நம்மாழ்வாரும்

யாவையும் எவரும் தானாய் அவரவர் சமயந்தோறும்
தோய்விலன் புலனைந்துக்கும் சொலப்படான் உணர்வின் மூர்த்தி

என்பார்.

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுளன் எங்கள் சோதி
என்பதையும் பாருங்கள்.

அப்படியே
வேத சிகையும் விரிகலையும் மெய்யன்பர்
போதமும் போய்த் தீண்டாப் பூரணமே
என்பதையும் பாருங்கள்.

மனோன்மணீயத்தில் சிவகாமியின் உரையாக

கண்டவரைக் கேட்டவரைக் காசினியில் தேடி
கண்டிடச் சென்றே அலைந்து கட்டமெனத் தென்க
உண்டெனத்தம் யூகநெறி உரைப்பவரே அல்லால்
உள்ளபடி கண்டறிந்தோர் ஒருவரையும் காணேன்

என்று வருவதையும் காண்க.

எனவே இறைவனை உணர்தல் அவன் அருளன்றிச் சாத்தியமாவதில்லை. அவனாக எளிவந்து தன்னை உணர்த்தினாலன்றி
உணரும் வகையில்லை என்பது தெளிவு. இப்பாடலின் கோரிக்கையும் அதுதான். நீயாக எங்கள் முன்வரவேண்டும்
என்கிறார். அப்படி வந்து எமது ஏதங்கள் அறுக்க வேண்டும் என்கிறார்.

ஏதங்கள் என்ற வார்த்தை கவனத்துக்குரியது. பொதுவாகத் துயரங்கள் என்று பொருள் கொள்ளாது வினைப் பீடிப்பு
என்றே பொருள் கொள்ள வேண்டும்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி முதற்பாடல் ஈற்றடி துயரறு சுடரடி தொழுதெழென் மனனே என்பதாகும். இங்கே
துயரம் என்பது வறுமை, பிணி, மூப்பு போன்ற துன்பங்களன்றி இவை அனைத்துக்கும் அடியாகிப் போன பிறவிக்கு
ஆதியான கர்ம வினைப் பயன்கள் என்று கொள்ள வேண்டும். அவை அறுபட்டுப் போகப் பிறவாப் பேரின்பம்
வேண்டும் என்று வேண்டுவதாகக் கொண்டால் அப்பிறவாப் பேரின்ப நிலையே இறைவன் அருள வேண்டும்
என்பது இப்பாடலின் வேண்டுதல் என்க.

|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com