From philipae@... Wed Jan 09 07:59:05 2002
Return-Path:
X-Sender: philipae@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 15:59:05 -0000
Received: (qmail 65725 invoked from network); 9 Jan 2002 15:59:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 15:59:02 -0000
Received: from unknown (HELO imsm030.netvigator.com) (208.167.231.148) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 15:59:01 -0000
Received: (qmail 12812 invoked from network); 9 Jan 2002 15:58:59 -0000
Received: from yckam007167.netvigator.com (HELO netvigator.com) (218.102.24.167) by imsm030.netvigator.com with SMTP; 9 Jan 2002 15:58:59 -0000
Message-ID: <3C3C6A01.C6D30230@...>
Date: Thu, 10 Jan 2002 00:04:17 +0800
Organization: HOME
X-Mailer: Mozilla 4.75 [en] (Win98; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Re: Panchali Sabatham - Kavithai Natakam - ArangERRam
References:
Content-Type: text/plain; charset=x-user-defined
Content-Transfer-Encoding: 8bit
From: PHILIP AE
Reply-To: philipae@...
X-Yahoo-Group-Post: member; u=23647508
X-Yahoo-Profile: philipae2001
X-Yahoo-Message-Num: 14656

அகத்தியர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

perichandra wrote:

>
> > ...தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டிச் ...
> பொங்கல் மட்டுமே தமிழர் திருநாளா?
> கார்த்திகை/தீபாவளி விழாவிற்குத்தான் பொங்கலைவிடச் சான்றுகள்
> சங்க இலக்கியத்தில் உண்டு.
> கார்த்திகைத்தீபம் மிகப் பழைய தமிழர்பண்டிகை. அது முருகனுக்கு உரியது.
> தீபாவளி அதினின்று பிரிந்திருக்கவேண்டும். கார்த்திகைக்குத் தீபவரிசையை (தீப ஆவளியை)
> ஊர்முழுதும் நிறுவுவது சங்க இலக்கியத்தில் காணலாம்.
> எங்கும்போய்த் தொலையும் கெடும்பில்லாத பொங்கலுக்கு மிகையான தவறான "தமிழர்
> திருநாள்" என்ற பட்டத்தைச் சூட்டி நாம் கார்த்திகையைத் தொலைத்துக்கொண்டு
> இருக்கிறோம்.

உங்களுடன் முழுதும் உடன் படுகிறேன். பல தமிழ்(/திராவிட) விழாக்கள்,மரபுகள், சடங்குகள்,- ஏன் பல சொற்களை
ஆரியம் வழி வந்ததென்று கூறப்பட்டு இழந்து நிற்கிறோம். என் பள்ளி தமிழ் ஆசிரியர் ஒருவர் கூறுவார். முதற் இரண்டாம்
கழக காலத்து நூற்கள் அனைத்தும் அப்படியே கிடைகாமல் அழிந்து போவதற்கு வாய்ப்பே யில்லை. அவைகள் முதல் சில
நூற்றாண்டுகளில் இங்கு ஆரியபாடை வள்ளுனர்களால் அம்மொழியில் மாற்றப்பட்டு , தமிழ் நூல்கள் அழிக்கப் பட்டுவிட்டன.
அவ்வாறு நூல்களை அழிக்கும் முயற்சிகளில் ஒன்றே ஆடிப்பெருக்கில் ஓலைச் சுவடிகளை விடுதல். அதனால் தான் சங்கத் தமிழில்
அறிவியல், கணிதம் மருத்துவம் போன்ற துறைகளில் நூற்கள் கிடைக்காதற்கு காரணம். இதில் எவ்வளவு உண்மையென்று
அறியேன் நான். களப் பிரளர் காலமென்று நான்கைந்து நூற்றாண்டுகள் இருட்டடிப்பு செய்யப் பட்டிருப்பதாலும், அந்த சமயத்தில்
தமிழகம் ஆரியம் கற்பதற்குத் தலைமையிடமாக இருந்ததையும் பார்க்கும் பொழுது அதில் ஓரளவாவது உண்மை யிருக்குமென்றே
தோன்றுகிறது. இதை இக்குழுவின் பெரியவர்கள் செயபாரதி, நா. கனேசன் போன்ற அறிஞர்கள் விளக்குதல் தகும்.

அதனால் நீங்கள் கூறுவது போன்று கார்த்திகை, தீபஒளி இன்னும் பல தமிழகத் திருவிழாக்கள் தமிழர்களின்
திருவிழாக்காளாக இருக்க வாய்ப்புண்டு. அவைகளைத் தக்க சான்றுகளுடன் நிலை நிறுத்துதல் தமிழறிந்தோர் கடமையாகும்.
ஆனால் அதற்கும் பொங்கல் திருநாளைத் தமிழர் விழாவென்று கூறுவதற்கும் என்ன முரண்பாடு. . பல தமிழறிஞர்களும்
இவ்விழ்ழாவைத் தமிழர் நாளாக கொண்டாடுவதற்கு உடன் படுகிறார்கள். அறுவடை காலம் உலக மக்கள் அனைவராலும்
கொண்டாடப்படுகிறது. தெற்கு ஆசிய நாடுகளனைத்தும் ஏறக் குறைய இதேசமயத்தில் புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.
அது மட்டுமன்று. பொங்கள் விழா சமையங்களைக் கடந்து ஒரு விழாவாக இப்பொழுது தமிழ் நாட்டில் ஒத்துக் கொள்ளப் பட்டு
வருகிறது. மதப் பூசல் , சாதிப் பூசல் இவைகளைக் கடந்த விழா ஒன்று இன்று இருக்கின்றதென்றால் அது இந்த விழாத்தான்.
இது எளிதில் கிடைத்த ஒன்றன்று. பலகாலம் பலரின் அறிய முயற்சியால் கிடைத்தது. இதை அப்படியே விட்டுவிட்டு
வேரொன்றை த் தேடிப் போவதென்பது இருப்பதை விட்டு பறப்பதைப் பிடித்தலுக்குச் சமம். கார்த்திகை தீபத்தை தமிழர்
விழாவென்று நிலைனாட்டுதலில் மகிழ்ச்சியே அதற்காக இதுகாறும் கொண்டாடி வரும் தமிழர் திரு நாளாகிய பொங்கல்
திரு நாளை புறக்கணிக்க வேண்டுவதில்லை யென்பது என் தாழ்மையான எண்ணம்.

>
> இதற்குக் காரணம் வேறொன்றுமில்லை:
> யாராவது தமிழரின் பண்பாட்டுக் கூற்றை எடுத்துத்
> தமக்கு உரியதுபோல் காட்டினால் அல்லது தமக்கும் விழுமியதென்று காட்டி
> ஏதும் கதை கட்டுதல் போன்றவற்றைச் செய்தால் இக்காலத்து அரைவேக்காட்டு
> இயக்கங்கள் அந்தப் பண்பாட்டுக் கூற்றை உடனே கைவிடுவதைக் கோட்பாடாகக் கொண்டுள்ளன.
> எதைப் பற்றியாவது பெரியாருக்குப்பிடிக்காதமாதிரி ஏதாவது கதையிருந்தால் அது தமிழர்
> பண்பாடு அன்று என்று ஒதுக்குவது இன்றைய வழக்கம். இப்படித்தானே தெய்விக
> இலக்கியங்களினின்று இன்று நாம் தொலைந்து நிற்கிறோம். திருவாசகம் தேவாரம் திவ்வியம்
> பெரியபுராணம் எல்லாம் பெரியார் நோக்கிற் செயல்பட்டதால் எங்கோ நிற்கின்றன.
> கடைசியில் அந்தவெறுமையில் வடமொழி மரபுகளும் தோத்திரங்களும் நிரம்புகின்றன.
> முதலுக்கே மோசம்!

எதற்கெடுத்தாலும் பெரியாரைக் குறை கூறுதல் இன்று சிலருக்கு வழக்கமாகிவருகிறது. பெரியார் வழி தமிழன்
நின்றிருந்தால் இன்று இழிபட்டு, சீர்குலைந்து, திக்கற்ற நிலையில் இருந்திருக்கமாட்டான். ஏதோ தமிழர்கள் அனைவரும்
போட்டிப் போட்டுக் கொண்டு மற்ற தமிழ் இலக்கியங்களைக் கற்றுவிட்டு பெரியாரின் போதனையால் பக்தி இலக்கியங்களைக்
கற்க மறுத்துவிட்டது போலல்லவா விருக்கிறது உங்கள் கூற்று. ஏன் இன்று தமிழைத் துளைத்துவிட்டு டமிலைப் பிடித்துத்துக்
கொண்டிருப்பதற்கும் பெரியார்தான் காரணமென்பீர்போலிருக்கிறது. இறைவன் ' சன்னதியிலிருந்து' தமிழைக் நீச
பாshai என்று கூறி கழுத்தைப் பிடித்து கண்காணாததூரம் தள்ளியதற்கும், தமிழ்த் திருத்தலப் பெயர்களை இறைவனுக்கு
உகந்ததாக மாற்றுவதாகக் கூறி கோணல் எழுத்துப் பெயர்களாக மாற்றப் பட்டதற்கும், சண்டால சாதிப் பேதங்களுக்கும்
பெரியார்தான் பொறுப்பென்று கூறினாலும் வியப்பதற்கில்லை.
இன்று திராவிடர் இயக்கங்கள் சிதறி, சீரழிந்திருக்கலாம். ஆனால் தமிழ் இயக்கங்களும், பெரியாரும், திராவிட
இயக்கங்களும் அப்பொழுது தோன்றியதால்தான் இன்று ஒரு சிலருக்காவது தமிழனென்ற எண்ணமும், தமிழ்ப் பற்றுமிருக்கிறது.
இன்றேல் தமிழும், தமிழனும் இன்னேரம் மண்ணோடு மண்ணாகியிருந்தாலும் வியப்பதற்கில்லை. பெரியாரையும், தமிழ்
இயக்கங்களையும் மீண்டும் குறை கூறுமுன் அவர்கள் செய்ததில் ஆயிரத்தில் ஒரு பங்காவது தமிழனுக்கோ தமிழுக்கோ நம்மால்
செய்ய முடிந்ததாவென்று நினைத்துப் பார்த்துவிட்டு பகன்றால் நலமாகும்.


>
>
> சில கூறுகள் கடைச் சங்கக் காலமுன்பே இந்தியாமுழுதும் இருந்த திராவிட/இந்தியப்
> பண்பாடுகள்; அவை எல்லாருக்கும் (அத்தாவது இன்றைய தமிழர் என்னும் சமுதாயத்திற்கு
> மட்டுமன்றித் தொல்தமிழரினின்று கிளைத்த மற்ற திராவிட
> மொழியினர்/வடமொழிச்சமுதாயத்தோடு கலந்துவிட்டவர் அனைவருக்கும்) உரியன.
>
> இன்றைய தமிழரல்லார் அவற்றை வடமொழி
> வழியாகப் பேணுவது உடனே தமிழ்மை அல்லதென்று பொருள்படாது.
> அவ்வாறு கருதி அக்கூறுகளை
> இழப்பதைப் போல் மிகப்பெரிய மடமை ஏதும் இல்லை. ஏனெனில் அக்கூறுகள்
> அவற்றின் பரவலினாலேயே தம் தொன்மையைக் காட்டுகின்றன. அத்தொன்மையில்
> தமிழருக்கும் முதற்பங்குண்டு.
> நாம் இதுபோல் மொழியமைப்புகள், சொற்கள், யோகநெறி, கணிதம், கலைநெறிகள்
> ஆகியவற்றைப் படிப்படியாகத் தொலைத்துள்ளோம். பலசமயங்களில் வடமொழி நூல்களே
> நம் பழைய பண்பாட்டுக்கூறுகளை மீட்கும் மூலமாகிவிட்டது. அந்நூல்களில் நம் கருவான
> பண்பாட்டிற்கு மாறுபட்டவற்றை ஆய்ந்து விலக்கி மிஞ்சுவதை மரியாதையோடு ஏற்பதுதவிர
> வேறுவழியில்லாத நிலைக்கு உள்ளோம்.

முற்றிலும் உண்மை.


>
>
> நாம் இந்தத் தனித்தமிழ்/திராவிட இயக்கத்தின் முழு ஆதிக்கத்திற்கு ஆளாகித்
> தமிழர்மட்டுமே பேணும் கூறுகளை மட்டுமே பேணுவோம் என்று செல்வது கேட்டில்
> விடும் புல்லறிவாகும்.

இந்த இயக்கங்கள் தமிழனை தமிழனாக் நினைக்கத் தூண்டிய தூண்டுகோள்களாகத்தான் கொள்ளவேண்டும். அவர்கள் கூறுவதை நாம்
அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டுவதில்லை. அதை அவைகளும் எதிர்ப்பார்க்கவில்லை. வேண்டுவதை எடுத்து, வேண்டாதை விடுப்பது
'பகுத்தறிவு' டையோரது உடைமையும், கடமையுமாகும்.


>
>
> இந்தத் தமிழ்ச்சங்கங்களும் மற்ற தமிழறிஞர் பெயர்வழிகளும் கார்த்திகைத் தீபத்தைக்
> காக்கும் வழியை நடத்துவது நலமாகும். தீபாவளி விழா என்னும் தலைப்புத் தொடரில்
> கார்த்திகைத் தீபம் என்னும் தொடரையும் தொடுக்கும் மரபை முதலில் கொணரலாமே.

நீங்களே இதை தொடக்கி வைக்களாமே.
வாழ்த்துகள்

அன்புடன்,
பிலிப்
ஆங் காங்.


>
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்.
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/