From ramaninaidu@... Wed Jan 09 08:13:02 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 16:13:02 -0000
Received: (qmail 55378 invoked from network); 9 Jan 2002 16:13:02 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 16:13:02 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 16:13:02 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.248) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 9 Jan 2002 16:13:00 -0000
Message-ID: <008601c19928$87d1cde0$f8eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppalliyelucci 6 tamil
Date: Wed, 9 Jan 2002 21:32:55 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14660
நாள் இருபத்தாறு - திருப்பள்ளியெழுச்சி - பாடல் ஆறு
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார்
பந்தனை வந்தறுத்தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத்தியல்பின்
வணங்குகின்றார் அணங்கின் மணவாளா
செப்புறு கமலங்கள் மலரும் தண் வயல்சூழ்
திருப்பெருந்துறை யுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டு அருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
உமையின் மணவாளனே. தாமரைகள் மலரும் திருப்பெருந்துறைப் பெருமானே. ஞானியரும் துறவியரும்
நாயகியாகத் தம்மைக் கருதி உன்னை அடைய வணங்குகின்றனர். இப்பிறப்பை நீக்கி எம்மையும் ஆண்டு அருள்
புரிய, எம்பெருமானே, எழுந்தருள்க. என்று வேண்டுவது திருப்பள்ளியெழுச்சியின் ஆறாம் பாடல்.
பப்பற வீட்டிருந்து உணரும் நின் அடியார் என்போர் சமநிலை கொண்ட மெய்ஞ்ஞானியரின் பெருநிலை
பெற்றோர். உலக இயல்பில் ஈடுபாடு கொள்ளாது பெருவியப்புக்குரியதாகத் தோன்றும் எதையும் புதுமையென்று
பாராதவர். எல்லாப் பரபரப்பையும் விட்டு விடுதலையாகிப் பரம்பொருளை உணர்ந்த ஞானியர்.
கன்ஃப்யூஸியஸுக்கு முன் சீனாவில் இருந்த பெருந்தகை லாவோட் சூ. நிறை ஞானி. அவர் இயற்றிய நூல் தெள
த ஜிங் என்பது. தெள என்றும் தாவோ என்றும் அறியப்படும் தத்துவத்துக்கு அடிப்படையாக அமைந்தது. அதில்
ஓரிடத்தில்
உலகில் சேற்றில் கலங்கல்தான்.
சும்மாயிருந்து பார் தெளிந்துவிடும்.
நிம்மதியை யார் நிலைக்க வைப்பவர்?
செயல் ஒன்று போதுமே அதைக் குலைக்க.
என்று எழுதுவார். சும்மாயிருப்பது சுலபமில்லை. சும்மாயிருக்கவும் முயற்சி தேவைப்படுகிறது. அப்படிச்
சும்மாயிருக்கச் செய்யும் முயல்வையும் சும்மாயிருக்கச் செய்து விட்டவரே பப்பற வீட்டிருந்து உணரும் ஞானியர்
என்க.
அடுத்த நிலையில் பற்றறுத்த பெருமக்களைப் பற்றிப் பாடல் பேசுகிறது. ஏற்கெனவே இப்பற்றறுத்த நிலை
பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். சொர்க்க போகமாகிய கைவல்ய நவநீதமும் வேண்டாம் என்ற பற்றற்ற
நிலையினர். இதையே
பச்சை மாமலை போல் மேனிப்
பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய்
இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று ஆழ்வார் சொல்லிப் போவார்.
அத்தகைய மெய்ஞ்ஞானியரும் தம் இயல்பை விடுத்து மானுட இயல்பைக் கைக்கொண்டு மையெழுதிய கண்ணினராகத்
தம்மைக் கொண்டு இறைவனை வணங்குகிறார்கள் என்கிறார்.
வைராக்கியமே நிலை குலைந்து வணங்குதலாகிப் போன போது மயக்கமும் அறியாமையும்
அடிப்பிறந்த இப்பிறப்பில் தனுகரண புவன போகச் சுழற்சியில் தியங்கி நிற்கும் தம்மை ஆட்கொள்ள வேண்டும்
என்பது வேண்டுதல்.
இதற்குக் காரணமான பிறவித்தளையை அறுத்தெறிய வேண்டும் என்பதே வேண்டுதல்.
அதற்கேதுவாக வடிவழகு பொருந்திய தாமரை மலரும் வயல் சூழ்ந்த திருப்பெருந்துறையில் வந்து எழுந்தருளி அருள்
புரிய வேண்டுகிறார்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com