From perichandra@... Wed Jan 09 10:25:42 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 18:25:41 -0000
Received: (qmail 11389 invoked from network); 9 Jan 2002 18:25:40 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 18:25:40 -0000
Received: from unknown (HELO n9.groups.yahoo.com) (216.115.96.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 18:25:40 -0000
Received: from [216.115.96.170] by n9.groups.yahoo.com with NNFMP; 09 Jan 2002 18:25:38 -0000
Date: Wed, 09 Jan 2002 18:25:35 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Pongkal, kArttikai vizA etc.
Message-ID: In-Reply-To: <3C3C6A01.C6D30230@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 6417
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14663
--- In agathiyar@y..., PHILIP AE wrote:
> அகத்தியர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.
>
> perichandra wrote:
>
> >
> > > ...தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவையொட்டிச் ...
> > பொங்கல் மட்டுமே தமிழர் திருநாளா?
> > கார்த்திகை/தீபாவளி விழாவிற்குத்தான் பொங்கலைவிடச் சான்றுகள்
> > சங்க இலக்கியத்தில் உண்டு.
> > கார்த்திகைத்தீபம் மிகப் பழைய தமிழர்பண்டிகை. அது முருகனுக்கு உரியது.
> > தீபாவளி அதினின்று பிரிந்திருக்கவேண்டும். கார்த்திகைக்குத் தீபவரிசையை (தீப
ஆவளியை)
> > ஊர்முழுதும் நிறுவுவது சங்க இலக்கியத்தில் காணலாம்.
> > எங்கும்போய்த் தொலையும் கெடும்பில்லாத பொங்கலுக்கு மிகையான தவறான "தமிழர்
> > திருநாள்" என்ற பட்டத்தைச் சூட்டி நாம் கார்த்திகையைத் தொலைத்துக்கொண்டு
> > இருக்கிறோம்.
>
> ..
> அதனால் நீங்கள் கூறுவது போன்று கார்த்திகை, தீபஒளி இன்னும் பல தமிழகத்
>திருவிழாக்கள் தமிழர்களின்
> திருவிழாக்காளாக இருக்க வாய்ப்புண்டு.
வாய்ப்புண்டு என்ற யூகநிலையில் கார்த்திகை இல்லை.
கார்த்திகை விழா சங்க இலக்கியங்களில் பரக்கக்காண்கிறது.
அறுமீனாகிய கார்த்திகைவிழாவில் விளக்குச் சுடரின் நெடிய வரிசையைப் போல் கோங்க
மரங்களின் செம்பூக்கள் காட்டில் திகழ்வதை நற்றிணைப் பாடல் 202 "அறுமீன் பயந்த அறஞ்செய்
திங்கள் செல்சுடர் நெடுங்கொடி போலப் பல்பூங்கோங்கம் அணிந்த காடே" எனச் சித்திரிக்கிறது.
மற்றபடி அகநானூறு 185-ஆம் பாடலும் கார்த்திகைவிழாவைக் குறிக்கிறது.
>அவைகளைத் தக்க சான்றுகளுடன் நிலை
> நிறுத்துதல் தமிழறிந்தோர் கடமையாகும்.
மேலே உள்ளது இன்னும் மேலும் சான்றுகளைக் காண்க.
மேலும் கார்த்திகை என்னும் அறுமீன் வேதகாலத்திலிருந்தே சிறப்புடையது.
> ஆனால் அதற்கும் பொங்கல் திருநாளைத் தமிழர் விழாவென்று கூறுவதற்கும் என்ன
>முரண்பாடு. . பல தமிழறிஞர்களும்
> இவ்விழ்ழாவைத் தமிழர் நாளாக கொண்டாடுவதற்கு உடன் படுகிறார்கள்.
பொங்கலை மட்டும் தமிழர் திருநாள் என்று சொல்ல ஒரு அடிப்படையும் கிடையாது.
சங்க இலக்கியம் பயில்வோருக்குப் பொதுவாகவே இது தெரிந்ததானாலும்
விழாக்களை ஆய்ந்து எழுதும் அறிஞர்களும் அவ்வாறே சொல்கின்றனர்:
தக்கிணாமூர்த்தி, பரமசிவானந்தம் என்ற இருவர் கட்டுரையில் சங்க இலக்கியத்தில்
பொங்கலுக்குச் சான்றில்லை என்று ஒருமித்துக் கூறுகின்றனர்.
கணேசன் முன்பொருநாள் சொன்னதுபோல் பொங்கல் என்ற சொல் பொங்குசோற்றுக்கு
நெடுநாளாக இலக்கியத்திற் காணோம். சங்கத்தில் இல்லை.
பொங்கல் வெண்மழை என்றுதான் உள்ளது.
தூய தமிழ்-திராவிடச் சமூகப் போராட்டம் என்று கிளம்பிய மக்கள் வடமொழிமரபில்
நம்பண்பாட்டின் ஏதொரு கூற்றையும் தொடுத்துவிட்டால் உடனே அதைக்
கைவிட்டு இன்னொன்றைப் பெரிதுபடுத்துவது வழக்கம் என்று நாம் அறிகிறோம்.
எனவே பொங்கலைத் தமிழர் திருநாள் என்று தொன்மைச் சான்றே இல்லாதபோது
ஒருதனித் தகுதி அளிப்பது தொன்மைச் சான்றுள்ள மற்ற பண்டிகைகளுக்குக்
கேடு தரும் பொறுப்பற்ற செயலாகும்.
>அறுவடை காலம் உலக மக்கள் அனைவராலும்
> கொண்டாடப்படுகிறது. தெற்கு ஆசிய நாடுகளனைத்தும் ஏறக் குறைய இதேசமயத்தில்
>புத்தாண்டு கொண்டாடுகிறார்கள்.
> அது மட்டுமன்று. பொங்கள் விழா சமையங்களைக் கடந்து ஒரு விழாவாக இப்பொழுது தமிழ்
>நாட்டில் ஒத்துக் கொள்ளப் பட்டு
> வருகிறது. மதப் பூசல் , சாதிப் பூசல் இவைகளைக் கடந்த விழா ஒன்று இன்று
>இருக்கின்றதென்றால் அது இந்த விழாத்தான்.
மதச்சார்பில்லாத கூறுகளைப் போற்றுவோம் என்று சொல்லித் தமிழ்ப்பண்பாட்டையே படிப்படியாக
அரித்துச் சிதைப்பதே இப்போது தொழுவாடு.
மகாவித்துவான் மீனாக்கி சுந்தரம்பிள்ளையிடம் புது மாணவர்களுக்குப் பாடம்கற்பிக்கும்
சட்டாம்பிள்ளை சவேரிநாதப்பிள்ளை. அவர் கற்பிப்பது நைடதம்.
இது 150 ஆண்டுகள் முன்பு; அதுவும் சைவ ஆதீன மடத்தின் அவைப் புலவரின் கல்லூரியில்.
அப்புலவருக்குச் சைவந் தவிர வேறேதும் குறியில்லை.
அவர்களுக்குத் தெரியாத மதச்சார்பின்மை இவர்கள் கற்றுக் கொடுக்கிறார்களா?
இந்தச் சமயச்சார்பின்மை வேண்டுமென்று சொல்லி அமெரிக்காவில் குழந்தைகளின்
வாரக்கடைத் தமிழ்ப்பள்ளிகளில் வகுப்புத் தொடக்கத்தில் "பாலும் தெளிதேனும்...
சங்கத் தமிழ்மூன்றுந் தா" என்ற எண்ணரிய பாடலை ஓதுவதை விட்டுத் தேவே உன்னைப்
போற்றிடுவேன் என்று ஏதோவொரு பாடலைப் பாடுவது வழக்காகிவிட்டது.
இரண்டும் இணையாகாது.
மதச்சார்பின்மை என்று சொல்லி தன்மதமறுப்பைவிட அயன்மதப்பொறையை வளர்ப்பதுதான்
முக்கியம். அதுதான் உண்மையான முயற்சி.
இந்த மதச்சார்பின்மை ஏமாற்றலால் தமிழன் தன் மிகப் பழம் பண்பாட்டுக்கூறுகளை
இழந்துகொண்டிருக்கிறான். இவ்வாறு இழப்பது இந்து மதம் என்ற சூழலில்
வளரும் தமிழன்மட்டுந்தான்.
இப்படி மதச்சார்பின்மை பேசிக் கார்த்திகையை மறந்து பொங்கலை ஆதரவின்றித்
தூக்குவதுதான் சிறந்ததென்றால் மற்ற மதத் தமிழர்களும் பொங்கலை மட்டுமே
தம்முடைய ஒருதனிப்பண்டிகையாகக் கொண்டாடவேண்டும். ....அது நியாயமா இல்லையா?
....
எனவே சிறந்த வழி உ.வே.சாவின் குரு காட்டியவழிதான்.
>
> இது எளிதில் கிடைத்த ஒன்றன்று. பலகாலம் பலரின் அறிய முயற்சியால் கிடைத்தது. இதை
அப்படியே விட்டுவிட்டு
> வேரொன்றை த் தேடிப் போவதென்பது இருப்பதை விட்டு பறப்பதைப் பிடித்தலுக்குச் சமம்.
நான் சொல்லவேண்டிய வார்த்தையை நீங்கள் எனக்குச் சொல்கிறீர்களே!
கார்த்திகை விழா மூவாயிரம் நாலாயிரம் ஆண்டுகள் தொல்லியது.
அதுபோல் கிட்டுவது கடினம். அதைவிட்டு வேறொன்றுக்குத் தாவுவது தகாது.
>கார்த்திகை தீபத்தை தமிழர் விழாவென்று நிலைனாட்டுதலில் மகிழ்ச்சியே அதற்காக >
இதுகாறும் கொண்டாடி வரும் தமிழர்
>திரு நாளாகிய பொங்கல்
> திரு நாளை புறக்கணிக்க வேண்டுவதில்லை யென்பது என் தாழ்மையான எண்ணம்.
மீண்டும் *நான்* சொல்லவேண்டிய சொற்கள்: :-)
பொங்கலைத் தமிழர் திருநாள் என்று நாட்ட முயல்வது மிக்க மகிழ்ச்சியே.
ஆனால் கார்த்திகையை மெதுவாகப் புறக்கணிப்பது பொருந்தாது.
......
> >
> > இந்தத் தமிழ்ச்சங்கங்களும் மற்ற தமிழறிஞர் பெயர்வழிகளும் கார்த்திகைத் தீபத்தைக்
> > காக்கும் வழியை நடத்துவது நலமாகும். தீபாவளி விழா என்னும் தலைப்புத் தொடரில்
> > கார்த்திகைத் தீபம் என்னும் தொடரையும் தொடுக்கும் மரபை முதலில் கொணரலாமே.
>
> நீங்களே இதை தொடக்கி வைக்களாமே.
இந்த நீங்கள் என்பதில்தான் நம் தலைவலியே.
தமிழ்ப்பண்பாடு அவரவர் குடும்பப் பொறுப்பு. இந்தச் சங்கம் மன்றம் கட்சி யெல்லாம்
இரண்டாம் படிதான்.
இது ஒரு பண்டிகை....அவரவர் வீட்டில் நிகழவேண்டியது.
அவரவர்கள் அடுத்தமுறை கார்த்திகைத் தீபம் வரும்போது அதற்குத் தக்க
மரியாதையோடு தீபாவளி அளவாவது கொண்டாடுவதுதான் வழி...