From lskumar@... Wed Jan 09 11:07:09 2002
Return-Path: X-Sender: tolsk@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 9 Jan 2002 19:07:08 -0000
Received: (qmail 24196 invoked from network); 9 Jan 2002 19:07:08 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 9 Jan 2002 19:07:08 -0000
Received: from unknown (HELO hotmail.com) (216.33.148.125) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 9 Jan 2002 19:07:08 -0000
Received: from mail pickup service by hotmail.com with Microsoft SMTPSVC; Wed, 9 Jan 2002 11:07:08 -0800
To: Subject: plight of tamilians in kuwait
Date: Wed, 9 Jan 2002 14:07:04 -0500
Organization: http://www.lskumar.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
Message-ID: X-OriginalArrivalTime: 09 Jan 2002 19:07:08.0459 (UTC) FILETIME=[D5A7DFB0:01C19940]
X-eGroups-From: "L. Suresh Kumar-LSK" From: "L. Suresh Kumar-LSK" Reply-To: "L. Suresh Kumar-LSK" X-Originating-IP: [64.229.147.93]
X-Yahoo-Group-Post: member; u=24300722
X-Yahoo-Profile: lskumar
X-Yahoo-Message-Num: 14664
The Indian Ambassador to Kuwait is Mr Prabhu Dayal
His email id is given below.
PrabhuDayal
=====================================================
from kumudam reporter section
அவர்கள் மொத்தமாக 1500 பேர் தேறுவார்கள். கிட்டத்தட்ட
எட்டு மாதங்களாக வேலையில்லாமல்... சரியான சாப்பாடு இல்லாமல்
குடும்பத்தைப் பிரிந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்.
இந்தக் கொடுமை நடந்து கொண்டிருப்பது
குவைத்தில். லோக்கல் போலி ஏஜென்ஸிகளின்
ஆசை வார்த்தைகளில் மயங்கி அறுபது,
எழுபதாயிரம் ரூபாய் பணம் கட்டி வந்து
சேர்ந்தவர்கள் இவர்கள். வேலை தருவார்கள் என்று
எதிர்பார்த்து வந்து, இங்கு வாழ்வா சாவா என தவித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் பாதிப்பேர் குற்றம் சாட்டுவது சென்னையில் இருக்கும் அமா
டிராவல்ஸைத்தான். இந்த நிறுவனம் குவைத்தில் இருக்கும் ஆயில்
நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்தது.
அறுபதாயிரத்திலிருந்து எண்பதாயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு குவைத்துக்கு
ஆட்களை அனுப்பி வைத்தது. இங்கே வந்தவுடன் சில நாட்களுக்கு மட்டுமே
இவர்களுக்கு வேலை கிடைத்தது. பிறகு ஒருகட்டத்தில் யாருக்குமே வேலை
இல்லை. சாப்பிடவும் வழி இல்லை. மாங்கஃப் என்ற ஒரு இடத்தில் அவ்வளவு
பேரும் அடைந்து கிடக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேரும் வெறுமனே
விசிட் விசாக்களுடன்தான் வந்திருக்கிறார்கள். வேலை பார்ப்பதற்கான விசா
இல்லை என்பதால் குவைத் சமூக நலத்துறை அமைச்சகம் இவர்களைத்
திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.
இந்தியத் தூதரகத்தை அணுகினார்கள்... எந்தப் பயனும் இல்லை. பலமுறை
விடியற்காலை மூன்று மணிக்கே எழுந்து, நடந்தே இந்தியத் தூதரகம்
போவோம். அங்கே போய்க் காத்திருந்தால் எந்தப் பதிலும் சொல்லாமல்
திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்றார் ஒரு தமிழர்.
இந்தக் களேபரத்தில் ஒருவரின் மனைவிதமிழகத்தில் தற்கொலை
செய்துகொண்டார்... இன்னொருவரின் தந்தை இறந்துவிட்டார். இதற்கெல்லாம்
ஊருக்குத் திரும்ப வேண்டுமானால் டிக்கெட்டுக்குக் கூட பணமில்லாத நிலை...!
இதில் சிலரை மட்டும் இந்தியத் தூதரகம் குவைத்துக்குத் திருப்பி
அனுப்பியிருக்கிறது. இன்னும் பாதிப்பேர் திரும்பிப் போக வழியில்லாமல்
தவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இரண்டுவருட காண்ட்ராக்ட் ரிட்டர்ன் டிக்கெட்டுடன் மூன்று மாத
லீவ், நாற்பது நாள் சம்பளம், கம்பெனி சாப்பாடு, எட்டு மணி நேர வேலை
ஆகிய உத்தரவாதங்களுடன்தான் இவர்கள் குவைத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
இப்போது டிராவல் விசாதான்... அங்கே போன பதினைந்து நாளில்
எம்ப்ளாய்மெண்ட் விசா கிடைக்கும் என்று அமா டிராவல்ஸின் உரிமையாளர்
காஜாமொய்தீன் சொல்லி அனுப்பியிருக்கிறார். மொத்தமாக 1500 தமிழர்கள்
வந்திருக்கிறார்கள்.
இப்படி வேலையில்லையே... சரி, திரும்பவும் ஊருக்குப் போய்விடலாம் என்று
தாங்கள் வேலை செய்ய வந்த குவைத் நிறுவன உரிமையாளரிடம்
பேசியிருக்கிறார்கள். அவர் முதலில் 60பேரை இந்தியாவுக்கு அனுப்பி
வைத்தார். அப்படி அவர்களை அனுப்பியவுடன் சென்னையிலிருந்து அமா
டிராவல்ஸ் உரிமையாளர் மகன் ஹனீப், குவைத் வந்திருக்கிறார்.
வந்தவர், உங்கள் எல்லோருக்கும் வேலை கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்
என்று தேனொழுகப் பேசியிருக்கிறார்.அடுத்து அவர் செய்ததுதான்
பச்சைத்துரோகம்! அந்த குவைத் முதலாளியிடம் போய் இவர்களை ஊருக்குத்
திருப்பி அனுப்பாதே. வந்தால் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்பார்கள்
என்று சண்டை போட்டிருக்கிறார். இதனால் இந்தியா திரும்ப இருந்த
ஒருவழியும் அடைபட்டுப் போய்விட்டது.
பின்குறிப்பு:
சென்னையிலிருக்கும் அமா டிராவல்ஸுக்கு இந்தப் பிரச்னை தொடர்பாக
விளக்கம் கேட்டு இமிக்ரேஷன் ஆபீஸர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அத்துடன் இந்த நிறுவனம் கேட்டிருக்கும் விசாக்களும் நிறுத்தி
வைக்கப்பட்டிருக்கின்றன.
வெளிநாடு மோகத்தில் படித்த இளைஞர்கள் ஏமாறாமல் இருக்க இது ஓர்
எச்சரிக்கை!
Copyright Kumudam Publications Pvt.Ltd.
All rights reserved.
Best view under 800 X 600 Resolution with
Netscape 4.x or IE 4.x and above version