From ramaninaidu@... Thu Jan 10 09:07:25 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 10 Jan 2002 17:07:25 -0000
Received: (qmail 95231 invoked from network); 10 Jan 2002 17:07:25 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 10 Jan 2002 17:07:25 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 10 Jan 2002 17:07:25 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.83) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 10 Jan 2002 17:07:23 -0000
Message-ID: <002001c199f9$44766200$53eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppalliyelucci 7 tamil
Date: Thu, 10 Jan 2002 21:53:39 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14680

திருப்பள்ளியெழுச்சி - நாள் இருபத்தேழு -
பாடல் ஏழு

அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்
இதுஅவன் திருவுரு இவன்அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கு எழுந்தருளும்
மதுவளர் பொழில் திருவுத்தரகோச
மங்கையுள்ளாய் திருப்பெருந்துறை மன்னா
எது எமைப் பணிகொளும் ஆறு அது கேட்போம்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

தேன் துளும்பும் மலர்ப்பொழில் நிறைந்த திருவுத்தரகோசமங்கையில் உள்ளான். திருப்பெருந்துறைத் தலைவன்.
பழத்திற் சுவையென உலகில் இரண்டறக் கலந்தவன். பிறவிப் பிணிக்கு மருந்து. அறிவு முனைப்புக்கு அரியன்.
அன்பின் பிணிப்புக்கு அளியன். அவன் இன்னவன் அல்லது அன்னவன் என்று தேவர்களும் அறிந்திலர். எமக்கெதுக்கு
அந்த விசாரமெல்லாம்? எம்மை ஆட்கொள்ளும் நெறி எது என்று தெரிந்து கொள்ள விண்ணப்பிக்கிறோம்.
தெளிவுறுத்திட எம்பெருமானே எழுந்தருளாய். என்பது திருப்பள்ளியெழுச்சியின் ஏழாம் பாடல்.
பரம்பொருள் அறிதற்கு அரியது என்பதைத் திரும்பத் திரும்ப சைவ வைணவ இலக்கியங்கள் வலியுறுத்திக் கூறி
அதே வலியுறுத்தலோடு அவன் அன்புக்கினியான் என்பதைக் கூறுகின்றன.

பூதங்களல்ல பொறியல்ல வேறு புலனல்ல உள்ளம் மதியின்
பேதங்களல்ல இவையன்றி நின்ற பிறிதல்ல என்று பெருநூல்
வேதங்கிடந்து தடுமாறும் வஞ்ச வெளியென்ப கூடல்மறுகில்
பாதங்கள் நோவ வளை இந்தனாதி பகர்வாரை ஆயுமவரே.

என்ற திருவிளையாடற் புராணத்துப் பாடலில் வெகு எளிதாக வேதங்கிடந்து தடுமாறும் என்று சொல்லிப்
போயிருப்பதைக் காண்க. வேதமே அவனை இனங்காண முடியாது தடுமாறித் தவிக்கும் போது அவன் மதுரைத்
தெருக்களில் வளையலும் விறகும் விற்றானாம்.

மணிவாசகரும்
தன்னை யாவரும் அறிவதற்கரியவன்
எளியவன் அடியார்க்கு
என்பார். மேலும்

அரிக்கும் பிரமற்கும் அல்லாத தேவர்கட்கும்
தெரிக்கும் படிக்கன்றி நின்றசிவம் வந்து நம்மை
உருக்கும் பணிகொள்ளும் என்பது கேட்டு உலகமெல்லாம்
சிரிக்கும் திறம்பாடித் தெள்ளேனம் கெட்டோமோ

என்பார். தெள்ளேனம் கொட்டோமோ என்பதில் கொண்டாட்டத்தைப் பாருங்கள். தொல்காப்பியம்

எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது
தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்

என்று சொல்கிறது. இன்பத்துள் எல்லாம் இன்பத்தைத் தருவது இறைநெறி. சுந்தரர்,

இம்மையே தரும் சோறும் கூறையும்
ஏத்தலாம் இடர் கெடலுமாம்
அம்மையே சிவ லோகம் ஆள்வதற்கு
யாதும் ஐயுறவு இல்லையே

என்பார். இம்மை மறுமை இரண்டிலுமே இன்பம் தரவல்லது இறைநெறி என்பதையே திருப்பள்ளியெழுச்சியின் ஏழாவது
பாடல் உறுதி செய்கிறது. பழத்தின் சுவை இன்பம் காட்சிப் பிரமாணம். சுய அனுபவம். அமுதத்தின் பயன்
அனுமானப் பிரமாணம். ஆகமப் பிரமாணம். எனவே இப்பாடலின் பழச்சுவை இம்மை இன்பத்தின் குறியீடாகவும்
அமுதச் சுவை மறுமை இன்பத்தின் குறியீடாகவும் அமைகின்றன.

மேலும் நெறியுணர்த்தினாலன்றி நெறியுணரும் வகை இல்லை என்பதாலும் அந்நெறியுணர்த்தலும் அவன் அருளாலேயே
என்பதாலும் எம்பெருமானையே எது எமைப் பணி கொளும் ஆறு என்று கேட்கிறோம் என்கிறார்கள் என்க.


|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com