From ganapathi s@... Thu Jan 10 11:18:21 2002
Return-Path:
X-Sender: ganapathi s@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 10 Jan 2002 19:18:22 -0000
Received: (qmail 65531 invoked from network); 10 Jan 2002 19:18:21 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 10 Jan 2002 19:18:21 -0000
Received: from unknown (HELO mailweb34.rediffmail.com) (203.199.83.32) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 10 Jan 2002 19:18:19 -0000
Received: (qmail 27784 invoked by uid 510); 10 Jan 2002 19:17:11 -0000
Date: 10 Jan 2002 19:17:11 -0000
Message-ID: <20020110191711.27783.qmail@...>
Received: from unknown (12.235.67.33) by rediffmail.com via HTTP; 10 Jan 2002 19:17:11 -0000
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar]Ramana Maharishi
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
Content-Disposition: inline
From: "Ganapathi S"
Reply-To: "Ganapathi S"
X-Yahoo-Group-Post: member; u=83645613
X-Yahoo-Message-Num: 14682


தூல iதயம் iடது பக்கத்திலிருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் நான் பேசுகிற iதயம் வலப்பக்கத்தில் iருக்கிறது. iது எனது அனுபவம். iதற்கு வேறு சான்று தேவையில்லை. iருப்பினும் மலையாள நூல் அஷ்டாங்க ஹ்ருதயத்திலும், சீதா உபநிஷத்திலும் iது உறுதிப்படக் கூறியிருப்பதைக் காணலாம்.

.......

மூச்சு குதிரையாகவும், மனம் அதில் சவாரி செய்பவனாகவும் அமைகின்றன. பிராணாயாமம் என்பது அந்தக் குதிரையை அடக்குதல் ஆகும். அவ்வாறு செய்யும்போது சவாரி செய்பவர் அடக்கப்படுகிறார்.

----பகவான் ரமணர்.


ரமண மஹரிஷி - 5
---------------

தலையை முண்டனம் செய்துகொண்டு, வேட்டியைக் கிழித்துக் கோவணமாகத் தரித்துக்கொண்டு, மீதமிருந்த காசைக் குளத்தில் விட்டெறிந்துவிட்டுத் தந்தை அருணாச்சலத்தை தரிசிக்கப்போனார் ரமணர்."iந்தக் கட்டைக்குக் குளியல் எதற்கு" என்று ரமணர் உதாசீனப் படுத்தியபோதும் ஒருகுளிர்மேகம் அவரைக் குளிப்பாட்டிவிட்டதை ஹரிகிருஷ்ணன் நினைவுபடுத்தினார். பின்பு தரைமட்டத்துக்கும் கீழே iருளடைந்து கிடந்த பாதாளலிங்கத்தினருகே புழுபூச்சிகளுக்கும் கரையானுக்கும் விருந்தாக மோனத்தில் அமர்ந்தார் ரமணர்.

ரத்னம்மாள் என்ற பக்தை அவருக்குத் துணி கொண்டுவந்து கொடுத்தார். "iந்த நரகத்திலிருந்து துன்பப்பட வேண்டாம், என் வீட்டுக்கு வந்துவிடுங்கள்" என்று சொன்னார். ரமணர் துணியையும் தொடவில்லை, அவரது வார்த்தையையும் செவிமடுக்கவில்லை. மோனத்தின் முழுக்களிப்பிலே மூழ்கிக்கிடந்தது அந்த ஞானக்கொழுந்து.

அந்த iடத்தில் அவரைத் துன்புறுத்தியது எறும்பும் கரையான்களும் மட்டுமல்ல, சில குறும்புச் சிறுவர்களும் சேர்ந்துகொண்டனர்.கற்களையும் உடைந்த சில்லுகளையும் வெளியிலிருந்தபடியே ரமணரின் மீது விட்டெறிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். ஒருநாள் மதியம் வேதாசல முதலி என்பவர் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து இவர்கள் கோவிலுக்குள் செய்யும் அட்டூழியம் பொறுக்காமல் ஒரு கம்பை எடுத்து அவர்களைத் துரத்தினார். துரத்திவிட்டுத் திரும்பிவருகையில் iருண்ட பாதாளலிங்கக் குகையிலிருந்து சேஷாத்திரி சுவாமிகள் வெளியே வருவதைப் பார்த்தார். (திருவண்ணாமலைக்குச் சிறப்புச் சேர்த்த சித்தர்களில் சேஷாத்திரி சுவாமிகளும் மிக முக்கியமானவர். iவர் செய்த அற்புதங்கள் கணக்கில. கிரிவலம் வருகையில் ரமணாSரமத்திற்குச் சற்று முன்பு iவருடைய சமாதியைப் பார்க்கலாம்.)

அதிர்ச்சியடைந்த வேதாசல முதலியார் "தங்களுக்குக் காயம்பட்டதா?" என்று கேட்டார்.

"iல்லை, உள்ளே போய் சின்னச் சுவாமியைப் பாருங்கள்" என்றார் சேஷாத்திரி சுவாமிகள்.

முதலியார் உள்ளே iறங்கினார். முதலில் iருட்டில் கண் தெரியவில்லை. சற்றே பழகியதும் சிறிதும் சலனமின்றி சமாதியில் மூழ்கிக் கிடந்த ரமணரைப் பார்க்கமுடிந்தது. சில பக்தர்களின் உதவியோடு அங்கு சென்றார். iளைய முனி யாரையும் பார்க்கவோ பேசவோ iல்லை. அவரை அப்படியே குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டுபோனதும் அவருக்குத் தெரியவில்லை.

மேலும் தொடருவோம்....

அன்புடன்

மதுரபாரதி