From ramaninaidu@... Fri Jan 11 09:12:40 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 11 Jan 2002 17:12:40 -0000
Received: (qmail 98627 invoked from network); 11 Jan 2002 17:12:39 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 11 Jan 2002 17:12:39 -0000
Received: from unknown (HELO smtp015.mail.yahoo.com) (216.136.173.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Jan 2002 17:12:39 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.80) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 11 Jan 2002 17:12:37 -0000
Message-ID: <004901c19ac3$278c7060$50eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: thiruppavai 28 tamil
Date: Fri, 11 Jan 2002 22:31:23 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14690

திருப்பாவை - நாள் இருபத்தெட்டு - பாடல் இருபத்தெட்டு

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவிப் பெருந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

திருப்பாவையின் இருபத்தெட்டாம் பாடல் ஆன்மாவின் இயல்பு, ஆன்மாவுக்கு இறைவனோடான தொடர்பு, உடலெடுத்த
ஆன்மா இறைவனை நோக்கிய வாழ்வில் கைக்கொள்ள வேண்டிய சரியான மனப்பாங்கு ஆகியவை பற்றிய
சிறப்பான செய்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.

இறைவனைக் குறைவொன்றுமில்லாத கோவிந்தா என்கிறார். ஆன்மா தன்னுடைய இறைத் தொடர்பை உணரத் தவறிய
போதும் இறைவனுக்கு ஏதும் குறையில்லை என்று கொள்ள வேண்டும். தன்னளவில் பரிபூரணமானவர் கடவுள்.
ஆன்மாவுக்கும் தன்னளவில் ஒரு சிறப்பு உண்டு. உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
எனும்போது இறைவனோடான தொடர்பு முடிவில்லாதது என்று பொருள் கொள்ளலாம். இதையே அந்த உறவைப்
புரிந்து கொள்ளும் வரை வாழ்வோடான பிணைப்பை அறுக்க முடியாது என்றும் பொருள் கொள்ளலாம். எனவே
ஆன்ம இறைத் தொடர்பை ஆன்மா உணராமல் இருப்பதாலோ மறுத்துவிடுவதாலோ துணித்துவிடுவதாலோ
அது இல்லாமல் போய்விடுவது இல்லை என்பதாகிறது.

ஆய்ப்பாடிப் பெண்டிரின் வாழ்வு கறவைக் கணங்களைச் சார்ந்தது. வாழ்வியலின் தேவைகளைக்
கவனித்திருப்பதில் இறைவனை அவர்கள் மறந்து விட்டிருக்கலாம். அல்லது இறைவனை உணரும் அளவுக்கு உணர்வு,
அறிவுக் கூர்மையற்றவர்களாக இருக்கலாம். அவர்கள் மத்தியில் தோன்றி வந்திருப்பது இறைவனின் அளப்பரிய
கருணையே.

தமது அறியாமையால் அவர்கள் இறைவனைப் புரிந்து கொள்ளாமல் பெயர்களோடோ செயல்களோடோ
தொடர்புபடுத்தி இறைவனை இனம் காணலாம். பாடலின் வேண்டுதல் என்னவென்றால் அவ்வாறான தமது அறியாமை
அன்றியும் இறைவன் அவர்கள் மேல் தன் கருணை மழையைப் பெய்விக்க வேண்டும் என்பதாகும்.

சம்பிரதாயமான விளக்கத்தில் இப்பாடல் ஒரு நெறியை உபதேசிப்பதாகச் சொல்வார்கள். அவன் அருளால் தாம்
உய்ய வேண்டும் என்பதே வேண்டுதல். கடவுளின் கருணையே ஈடேற்றத்துக்கு ஓர் உத்திரவாதம் என்றாலும் மனித
வாழ்வில் அதைப் பெற ஏதேனும் செய்ய வேண்டியதில்லையா என்ன? இந்தக் கேள்வியோடு பாடலைப் பார்க்கும்
போது பாடல் தெளிவு பெறுகிறது.

பதில் உடன்மறைப் பொருளில்தான் இருக்கிறது. ஆனால் அதற்காக இது அது என்று குறிப்பிட்ட எந்தக்
காரியத்தையும் ஆன்மா சாதிக்க வேண்டியதில்லை. துறவுநிலை கொள்ள வேண்டும் என்பது கூட இல்லை.
ஈடேற்றத்தை நோக்கிய ஆன்ம காரியம் செயல்வயப்பட்டதே அல்ல. அது ஒரு பாவனை வயப்பட்டது. ஆன்மாவின்
எல்லைகள் இவை என்பது தெரிந்திருப்பது. உலகியல் வாழ்நெறி ஆன்மா தன்னை உணரவிடாது திசைதிருப்பிக்
கொண்டே இருப்பது. இறைவனோடான தன் தொடர்பை அனுபவ உண்மையாகத் தெரிந்து கொள்ள விடுவதில்லை.
எனவேதான் முதல் அடியிலேயே தமது தொழிலைச் சொல்லி - கறவைகள் சென்று கானம்
சர்ந்துண்போம் - இத்தகைய திசைதிருப்பல் தமக்கு உள்ளது என்பதைச் சொல்லிவிடுகிறார்கள்.

உடலெடுத்த வாழ்வே அறியாமைக்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. அவதாரங்களில் தன்னை மானுடச் சூழலில்
வெளிப்படுத்துவது இறைவனின் மிகப் பெரிய கருணைக்கு அடையாளமாகிறது. அதனால்தான் அறிவொன்றுமில்லாத
ஆய்க்குலத்தில் இறைவனைப் பெற்றிருப்பதைச் சிறப்பிக்கின்றனர்.

ஆன்மாவுக்கு இறைவன் தேவை. இறைவனுக்கு ஆன்மா தேவைதானா? குறைவொன்றுமில்லாத கோவிந்தா எனும்
போது இக்கேள்விக்கு எதிர்மறையில் பதில் தந்துவிடுகிறார்கள்.

என்றாலும் இறைவனோடான ஆன்மாவின்தொடர்பு தவிர்க்கவியலாத ஒன்றாகும். அதனால்தான் உன்தன்னோடு உறவேல்
நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்கிறார்கள்.

ஆன்மாவின் மிகச் சிறந்த ஞானத்தாலும் இறைவனை அறிந்து கொள்ள முடியாது என்ற அளவில் மிகச்
சிறந்த இறை இயல்பாக மனித அறிவு கொள்வதற்கும் உயர்ந்த சிறப்புகளை எல்லாம் உடையவன் இறைவன்.
ஆயினும் தன் கருணையைத் தம்மேல் பொழிய வேண்டும் என்பது இப்பாடலின் வேண்டுதலாகிறது. இறைவன் உயர்வைச்
சொல்லிக் கருணையை வேண்டலாம் என்றால் தாம் சொல்லும் மிகு உயர்வுக்கு மிக்கது அவன் உயர்வு என்றாகிப்
போவதால் வேறென்ன செய்ய முடியும்?

அனைத்தையும் பொருத்திப் பார்க்கும் போது ஆன்மா இவ்வுலக பந்தங்களால் அலைக்கழிக்கப்படுகிறது.
என்றாலும் இறைவன் எப்போதும் ஆன்மாவுக்கு அருகிலேயே இருக்கிறான். ஆயினும் இறைவனை அறிந்து கொள்ளும்
அளவுக்கு ஆற்றல் அற்றவனாகவே ஆன்மா இருக்கிறது. எனவே என்னதான் செய்து எப்படித்தான் இருந்தாலும் தன்
ஈடேற்றத்தை ஆன்மா தன் காரியங்கள், பாவனைகள் மூலம் சாதித்துக் கொள்ள முடியாது. எனவே ஈடேற்றத்துக்கான
ஒரே வழி தன் எல்லைகளை அறிந்து இறைவனிடம் முழுக்கச் சரணடைந்துவிடுவதே என்பது இப்பாடலின் செய்தியாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com