From ramaninaidu@... Fri Jan 11 09:13:46 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 11 Jan 2002 17:13:44 -0000
Received: (qmail 10627 invoked from network); 11 Jan 2002 17:13:44 -0000
Received: from unknown (216.115.97.171) by m10.grp.snv.yahoo.com with QMQP; 11 Jan 2002 17:13:44 -0000
Received: from unknown (HELO smtp015.mail.yahoo.com) (216.136.173.59) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 11 Jan 2002 17:13:45 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.80) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 11 Jan 2002 17:13:42 -0000
Message-ID: <004d01c19ac3$4e925e40$50eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppalliyelucci 8 tamil
Date: Fri, 11 Jan 2002 22:32:47 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14692
நாள் இருபத்தெட்டு - திருப்பள்ளியெழுச்சி - பாடல் எட்டு
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின் அடியார்
பழங்குடில்தொறும் எழுந்தருளிய பரனே
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறை யுறை கோயிலும் காட்டி
அந்தணனாவதும் காட்டி வந்து ஆண்டாய்
ஆரமுதே பள்ளி எழுந்தருளாயே.
திருப்பள்ளியெழுச்சியின் எட்டாவது பாடல் மூன்று வகைகளில் சிறப்புப் பெற்ற பாடலாக அமைந்துள்ளது. இறைக்
கொள்கை, பக்தியின் பயன், கிரியை நெறி விளக்கம் என்பவையே அம்மூவகைகளாகின்றன.
படைத்தல், காத்தல், நீக்கல் என்ற முவ்வகைச் செயல்களுக்கும் ஆதியாகிய பிரமன், திருமால், அரன் என்ற
மும்மூர்த்திகளுக்கு மேலானது பரம்பொருள். பரம்பொருளின் முவ்வகைச் செயல் வடிவ விளக்கமே
மும்மூர்த்திகள். இதனையே இப்பாடலின் முதலிரண்டு அடிகள் குறிக்கின்றன. எல்லாவற்றுக்கும் ஆதியாகித் தனக்கு
ஓர் ஆதியில்லாத அநாதியே பரம்பொருள். கம்பனும் பரம்பொருளுக்கும் முதல்வன், என்றும் மூன்று கவடாய்
முளைத்து எழுந்த மூலம் என்றும் குறித்தலைக் காண்க.
படைத்தல் ஓர் உதிரிக் காட்சி. காத்தலும் நீக்கலும் அவ்வாறே உதிரிக் காட்சிகள். உதிரிக் காட்சிகள்
முழுக்காட்சிக்குச் சாட்சியாக முடியாதல்லவா? எனவே அவை மூன்றும் ஒன்றில் இருந்து கொண்டு முழுமையைக் காண
முடியாது என்பதும் தோன்றவே பாடலின் முதலிரண்டு அடிகள் அமைகின்றன. இறைக் கொள்கைக்கு
விளக்கமாகின்றன.
இதையே
தோற்றம் துடியதனில் தோயும் திதியமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் ஊற்றமா
ஊன்று மலர்ப்பாதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு
என்று உண்மை விளக்கம் கூறும். டமருகம் ஏந்திய திருக்கரம் படைக்க அமைந்த திருக்கரம் காக்க அக்கினி
ஏந்திய திருக்கரம் நீக்கல் தொழில் புரிய உறுதியாக ஊன்றிய திருப்பாதம் மறைத்திருக்க தூக்கிய பாதம்
அருள பரம்பொருள் ஐவகைத் தொழிலையும் செய்வதாகச் சொல்வது இப்பாடல்.
அந்த அருமையாளன் ஆட்கொண்ட அடியவர் குடில்தோறும் எளிவரும் கருணையாளன். அதுவும் அம்மையப்பனாகப் பந்தணை
விரலியோடு எழுந்தருள்கிறவன். இதையே
நானும் என் சிந்தையும் நாயகனுக்கு எவ்விடத்தோம்
தானும் தன் தையலும் தாழ் சடையேன் ஆண்டிலனேல்
என்பார் மணிவாசகர். மேலும்
நான்ஆர் என் உள்ளம் ஆர் ஞானங்கள் ஆர்
என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்
என்றும் சொல்வார்.
எது எம்மைப் பணிகொளும் ஆறு? என்று மேற்பாட்டில் கேட்ட கேள்விக்குப் பதிலாக அமைகிறது எட்டாம் பாடல்
எனலாம். அவன் அருளால் அவன் தாள் வணங்குதல் என்பதே அந்நெறியென்க. இப்படி கிரியை நெறிக்கு இப்பாடல்
விளக்கமாக அமைவது எப்படி என்பதையும் காண வேண்டியிருக்கிறது.
இறைவன் ஆட்கொண்ட அடியவர் பெருமானின் திருக்காட்சியைப் பெறுவார் என்று கொண்டால் அக்காட்சி
எப்படியிருக்கும் என்பதை எழுந்தருளிய கோலமாக பாடல் விளக்குகிறது. திருக்கோயிலைக் குறிப்பிடுவது
அதற்காகத்தான். அவனருளால் அவன் தாள் வணங்கும் பேறு பெற்றவர்கள் உருவத் திருமேனியுடைய அவனைக் கொண்டு
திருக்கோயில் வழிபாடு செய்வதற்கு உரியவர்கள் ஆகிறார்கள்.பள்ளியெழுச்சியில் விழிப்புறும்
நிலையினர்க்குரிய வழியாகத் திருப்பள்ளியெழுச்சி குறிப்பிடுகிறது என்று கொள்ள வேண்டும்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com