From eramurug@... Fri Jan 11 19:39:59 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 03:40:01 -0000
Received: (qmail 75374 invoked from network); 12 Jan 2002 03:40:00 -0000
Received: from unknown (216.115.97.172) by m11.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 03:40:00 -0000
Received: from unknown (HELO web14810.mail.yahoo.com) (216.136.224.231) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 03:39:59 -0000
Message-ID: <20020112033958.22902.qmail@...>
Received: from [210.214.130.79] by web14810.mail.yahoo.com via HTTP; Fri, 11 Jan 2002 19:39:58 PST
Date: Fri, 11 Jan 2002 19:39:58 -0800 (PST)
Subject: AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <004a01c19ac3$315f1660$50eac7cb@ramani>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14694
சேஷாசலம் என்ற கவிஞரின் 'ஆகாசம்பட்டு' என்ற கவிதைத் தொகுப்பு படிக்கக்
கிடைத்தது.
அத்தனையும் வெண்பா. இன்னொரு தடவை சொல்லலாம். வெண்பா.
எழுதியவர், அவர் வார்த்தையில், "நான் புலவனில்லை. முழு நேர
விவசாயி".
"ஆகாசம்பாடு, எங்கள் கிராமத்தின் பெயர். நான் பழகிய மனிதர்களை
வார்த்தையில் படம் பிடித்திருக்கிறேன். மனிதர்களை விட, உசத்தியான ஒரு
பாடு பொருள் உலகத்தில் இருக்கிறதா என்ன?!" என்கிறார் கவிஞர் தன்
முன்னுரையில்.
'கரிசல் தமிழ்த் தாத்தா' கி.ராஜநாராயணன் தன் பாராட்டுரையில்
சொல்கிறார் -
" நம் காலத்தில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை அவர்கள் வெண்பாவில்
வல்லாள கண்டனாகத் திகழ்ந்தார் (இரா.முருகனின் இடைச் செறுகல் - 'தேவே
உன்னைப் போற்றிடுவேன் தினமும் என்னைக் காத்திடுவாய்" என்று
அய்யாசாமியின் மகள் ஆநந்தவல்லியும், செபஸ்தியான் பெர்னாந்து மகன்
செபஸ்தியான் பெர்னாந்து ஜுனியரும், உதுமான் கனி ராவுத்தரின் மகள்
ஆமினா பேகமும் அவரவர்கள் வீட்டில் பயிலும் பழக்க வழக்கங்களின்
அடிப்படையில் பரம்பொருளைத் தும்பிக்கையோடோ, தொழுங்கையோடோ,
மனதில் குரிசு வரைந்தோ தொழ சர்வமதப் பிரார்த்தனை தீட்டியவர் இவர்).
புதுமைப்பித்தன் இதில் வித்தியாசமான சோதனைகளைச் செய்து
பார்த்திருக்கிறார். மக்கள் நாவில் தான் சரஸ்வதிதேவி வாசம் பண்ணுகிறாள்
என்பதை சேஷாசலத்தின் கவிதைகள் அழகாகச் சொல்லிக் காட்டுகின்றன"