From eramurug@... Sat Jan 12 07:46:10 2002
Return-Path:
X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 15:46:09 -0000
Received: (qmail 67595 invoked from network); 12 Jan 2002 15:46:07 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 15:46:07 -0000
Received: from unknown (HELO web14801.mail.yahoo.com) (216.136.224.217) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 15:46:06 -0000
Message-ID: <20020112154606.65335.qmail@...>
Received: from [210.214.128.75] by web14801.mail.yahoo.com via HTTP; Sat, 12 Jan 2002 07:46:06 PST
Date: Sat, 12 Jan 2002 07:46:06 -0800 (PST)
Subject: Re: [agathiyar] Re: AkAsampattu, seshAchalam, ki.Ra, venpA...sar'thAn pOppa
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14702



> ஒருவேளை, வேதநாயகம்பிள்ளை பற்றிப் பேசுகிறீர்களா?
> அவர் சர்வசமயப் பிரார்த்தனைக் கீர்த்தனை பாடினவர்.

நன்றி முனைவர் கணேசன் அவர்களே.

தேசிக வினாயகம் பிள்ளை பாடலாகத்தான் படித்த நினைவு. ஏடு தேட
வேண்டும்...

முன்சீப் வேதநாயகம் பிள்ளையின் சமரச சன்மார்க்க கீர்த்தனைகளிலும் சில
படித்திருக்கிறேன். அவர் பாடல்கள், அவர் வாழ்ந்த காலத்திலேயே
பிரபலமாக இருந்ததற்குச் சான்று, தமிழில் முதல் நாவல்களில் ஒன்றான
கமலாம்பாள் சரித்திரத்தின் நாவல் தொடங்கும் முதல் பக்கத்தில், பகலில்
தூங்கி எழுந்த சிறுகுளம் முத்துசாமி அய்யர் "துரை மகளானாலும் பாரி
உரியவனுக்கவள் ஊழியக்காரி" என்று பாடத் தொடங்க, அவர் மனைவி
கமலாம்பாள் பதில் சொல்வது - "உங்களைப்போல அவன் ஒரு புருஷன்
தானே..வேதநாயகம் பிள்ளையாம்..கரியாவான்.." .

பாவம், முதல் தமிழ் நாவல் எழுதிய பாவத்துக்காக வேதநாயகம் பிள்ளைக்கு
என்ன திட்டு கிடைக்கிறது பாருங்கள். தற்காலத் தமிழ்ப் படைப்பாளிகளைத்
தூற்றி அப்போது ஆரம்பித்த வசவுத் தூறல் நின்னு போச்சு என்று இப்போதும்
சொல்ல முடியவில்லை.

முன்சீப் வேதநாயகம் பிள்ளை சைவ மடாலயமான திருவாவடுதுறை ஆதினத்துடன்
நெருங்கிய நட்புறவு பூண்டிருந்தார். தமிழ்த்தாத்தாவின் 'என் சரித்திரம்'
இவரைப் பற்றி நிறையச் சொல்கிறது.

முன்சீப் வேதநாயகம் பிள்ளை வேதநாயகம் பிள்ளையாகவே இருந்திருக்கிறார்.
சாதாரணக் குடும்பத்தில் பிறந்து மடத்தில் தமிழ் படிக்கப் புகுந்த
சவேரிநாதப் பிள்ளைதான் சிவகுருநாதப் பிள்ளையாகி விட்டார் (என்
சரித்திரம் - பக்கம் 353 - ஒரு பக்கம் முழுக்க அரங்கேறும் கதை அது).


>
> சேசாசலத்தின் வெண்பாக்கள் அருமை. அறிமுகம் செய்தமைக்கு
> நன்றி.
>
> தமிழில் இன்னுமோர் சேசாசலம் வாழ்ந்தார். சொந்த சொத்தை
> செலவழித்துச் சென்னையில் கம்பனை வளர்த்தவர்.
> 'கலாநிலையம்' என்ற பத்திரிகை நடத்திய
> T. N. சேஷாசலம். அவர் மகன் ஸ்ரீதர் (பரணீதரன்).
> TNS-ன் மைத்துனர் மக்கள் ராசிபுரம் R. K. நாராயணன், லக்ஷ்மணன்
> (உலகப் பிரக்யாதி பெற்றவர்கள்).

ஆமாம். நினைவு படுத்தியதற்கு நன்றி. இவரைப் பற்றி ஆர்.கே.நாராயண் தன்
'Dateless Diary'-இல் எழுதியிருக்கிறார்.

அன்புடன்,
இரா.முருகன்


>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>


__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/