From eramurug@... Sat Jan 12 08:05:53 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 16:05:53 -0000
Received: (qmail 66159 invoked from network); 12 Jan 2002 16:05:53 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 16:05:53 -0000
Received: from unknown (HELO web14802.mail.yahoo.com) (216.136.224.218) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 16:05:53 -0000
Message-ID: <20020112160553.52414.qmail@...>
Received: from [210.214.131.69] by web14802.mail.yahoo.com via HTTP; Sat, 12 Jan 2002 08:05:53 PST
Date: Sat, 12 Jan 2002 08:05:53 -0800 (PST)
Subject: ezhuththukkArar - 2
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020112154606.65335.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 14704
எழுத்துக்காரர் - தொடர்ச்சி
12) பகல் நேரத்தில் எங்களுக்குத் தனியஞ்சல் - கூரியர் - மூலம் வரும்
கடிதங்களைக் கிரமமாக வாங்கி வைப்பதும் எழுத்துக் காரரின் பணிகளில்
அடக்கம். இந்தத் தனியஞ்சல்களில் கிரடிட் கார்ட், இன்ஷ்யூரன்ஸ் பாலிசி,
டீமேட் ஆக்கப் படாத கம்பெனி பங்குப் பத்திரங்கள் என்று பலவும் வரும்.
தனியஞ்சல் நிறுவனங்கள் எங்களைப் போல் வீட்டைப் பூட்டிக் கொண்டு வேலைக்குப்
போகிற நிர்ப்பந்தம் உள்ளவர்களைப் பற்றிக் கவலைப் படுவதே இல்லை.
மதியத்தில் வந்து பார்த்து விட்டு, வீடு பூட்டி இருக்கிறதென்று குறிப்பு எழுதி
கடிதத்தைத் திருப்பி அனுப்புகிற பொறுப்பு இல்லாத் தனம் இவர்கள்
எல்லோரிடமும் உண்டு. (இரவிலும் கூரியர் தபால் பட்டுவாடா செய்யும்
சேவையை நீங்கள் ஆரம்பித்தால் என் போன்றவர்களின் ஆதரவு நிறையக்
கிடைக்கும்).
13) வரவேற்பு அறையில் இருக்கும் தொலைபேசியில் எங்களுக்கு எப்போதாவது
அழைப்பு வரலாம். வீட்டில் இல்லை. அலுவலகம் போயிருக்கிறார்கள். இரவில்
வீடு திரும்புவார்கள் என்ற செய்தியை மட்டும் தெரிவித்து விட்டு, ஏதாவது
தகவல் என்றால் அழைத்தவர் பெயர், தொலைபேசி எண், அழைப்பு வந்த நேரம்
போன்ற தகவல்களோடு தொலைபேசிக்கு அருகில் உள்ள நோட்டுப் புத்தகத்தில்
குறித்து வைக்க வேண்டும். நான்கு முறை அழைப்பு மணி எழுந்தும்
தொலைபேசியை எடுக்காவிட்டால் அது ஒலிப்பதிவான பதில் சொல்லும்
தானியங்கி நிலைக்குப் போய்விடும் என்பதால் முதல் அழைப்பு மணி
ஒலித்ததுமே எடுப்பது நல்லது. உடல் குறை பற்றிக் குறிப்பிட்டதை இங்கு
மறுமுறை நினைவு படுத்துகிறேன்.
14) தொலைபேசியை சொந்த உபயோகத்துக்கு எழுத்துக்காரர் உபயோகிக்கக்
கூடாது.
15) எந்த வேலையும் பாக்கி இல்லாத பட்சத்தில் அவர் தான் கொண்டு வந்த
புத்தகம் எதையும் படித்துக் கொண்டிருக்கலாம் - இவை ஆன்மீகம், யோகம்
தொடர்பானதாக இருந்தால் நல்லது. வார, மாதப் பத்திரிகைகள், மாத
நாவல்கள், சினிமா சஞ்சிகைகள் போன்றவை படிக்க அனுமதி இல்லை. வேலை
நேரத்தில் யாராவது பார்த்தால் கௌரவமாகத் தோன்ற உதவி செய்யும்
புத்தகங்கள் சிறந்தவை.
16) எழுத்துக்காரருக்காக ஒரு நாற்காலி கம்ப்யூட்டர் மேசைக்கு அருகே
வரவேற்பறையில் வைக்கப் படும். நாற்காலியை சுவர்ப் பக்கம் நகர்த்தி,
சுவரில் பின் தலை பட உட்கார்வதோ, மேசையில் கவிழ்ந்து படுத்து
உறங்குவதோ, தரையில் படுத்து உறங்குவதோ கூடாது.
17) வீட்டுக்குத் தேடி வரும் அறிமுகமில்லாத எவருடனும் பேசவோ, அவர்களை
உள்ளே அழைக்கவோ எழுத்துக் காரருக்கு அனுமதி இல்லை. சவுக்காரம் விற்க
வரும் விற்பனைப் பெண்கள், வாக்குவம் கிளீனர் உபயோகித்துக் காட்டி விற்க
வரும் பிரதிநிதிகள் போன்றவர்கள் இதில் அடங்குவர். மக்கள் தொகைக்
கணிப்புக்கு வருகிறவர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்க்க வருகிறவர்கள்
என்றால் தகுந்த அடையாளங்களைச் சரிபார்த்து உறுதி படுத்திக் கொண்டு, அறை
வாசலில் பிரம்பு நாற்காலியில் உட்காரச் சொல்லி விட்டு, எங்களில்
யாரையாவது தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். வந்தவர் கேட்டால்
அவருக்குத் தண்ணீர் வழங்கலாம்.
18) குடியிருப்பு காவல்காரர்களோடும் குடியிருப்பு நிர்வாக அலுவலக
ஊழியர்களோடோ, பக்கத்து எதிர் வீட்டு முதியவர்கள், இளையவர்கள்
இவர்களோடோ வீட்டின் உள்ளோ, வாசலிலோ வைத்துத் தேவையில்லாமல்
பேசிக் கொண்டிருக்கக் கூடாது. சந்திக்கும் போது ஒரு புன்னகையை மட்டும்
வழங்கி உள்ளே வந்து பணியைத் தொடரலாம்.
19) எங்களுக்கு வரும் கடிதங்களை எக்காரணத்தைக் கொண்டும் எழுத்துக் காரர்
பிரித்துப் பார்க்கக் கூடாது. வெளிநாட்டு, உள்நாட்டுக் கடிதங்களில் ஒட்டிய
தபால்தலைகளைப் பிய்த்து எடுத்துக் கொண்டு போவது கடுமையாகத் தடை செய்யப்
படுகிறது.
20) காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை எழுத்துக்காரர்
பணியில் இருக்க வேண்டும். மதியத்தில் சாப்பிட அரை மணி நேரம் எடுத்துக்
கொள்ளலாம். சாப்பாட்டை வரவேற்பறையிலேயே வைத்துக் கொள்ளலாம்.
சிந்தாமல் சிதறாமல் சாப்பிட்டு விட்டு இடத்தைத் தூய்மையாக வைத்துக்
கொள்வது முக்கியம். சாப்பாட்டு நெடி எதுவும் அறையில் தங்கியிருக்கக்
கூடாது. கூடிய மட்டும் எளிய, வாடை இல்லாத உணவுவகைகளையே மதியச்
சாப்பாட்டுக்கு எடுத்து வருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவற்றில் எண்ணெய்
குறைவாக இருப்பது முக்கியம். தரையிலும், சுவரிலும் தவறிப் பட்டு எண்ணெய்ப்
பண்டங்கள் கறை ஏற்படுத்தி விட வாய்ப்பு இருக்கிறது.
21) எங்கள் மகன் - இரண்டாவது வகுப்புப் படிப்பதாக எழுதியிருந்தேனே -
சனிக் கிழமைகளில் பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருப்பான். அப்போது
வீடு பூட்டப் பட்டுச் சாவி கீழே குடியிருப்பு நிர்வாக அலுவலகத்தில்
கொடுக்கப் படமாட்டாது. எழுத்துக்காரர் நேரடியாக வீட்டுக்கு வரலாம். ஆனால்
வரவேற்பறையைக் கடந்து எந்த நேரத்திலும் அவர் உள்ளே போக அனுமதி
இல்லை.
22) சனிக்கிழமைகளின் எங்கள் மகனிடம் பேசுவதைக் கூடிய மட்டும்
எழுத்துக்காரர் தவிர்க்க வேண்டும். அவனுக்குக் கதை கேட்பதில் விருப்பம்
அதிகம். அவனுக்கு இதற்காகவே ஏராளமான புராண, இதிகாச, புதிய கதைகள்
அடங்கிய கார்ட்டூன் குறுந்தகடுகளையும் புத்தகங்களையும் வாங்கிக்
கொடுத்திருக்கிறோம். அவனோடு பழகி அவனுக்குக் கதை சொல்வது, அன்பாகப்
பேசுவது, மிட்டாய் வாங்கி வந்து தருவது என்று எதையும் எழுத்துக் காரர்
செய்யக் கூடாது. இரண்டு மாதம் முன் என் கணவரின் தந்தை எங்களோடு
தங்கியிருந்தபோது அவனுக்குச் சொன்ன ஒரு கதை பாதியில் நிற்க,
மார்வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிர் துறந்தார். மேலே
சொன்ன பணிகளில் பல அவர் செய்து வந்தவை. எங்கள் மகனுக்குக் கதை சொல்ல
ஒரு தாத்தாவையோ அல்லது பாட்டியை நாங்கள் தேடவில்லை. எங்களுக்கு ஒரு
எழுத்துக் காரரைத் தேடுகிறோம். அவ்வளவே.
இந்த நிபந்தனைகளுக்குக் கட்டுப்படும் பட்சத்தில் உங்கள் சேவை நிறுவனம்
மூலமாக எங்களுக்கு ஒரு எழுத்துக் காரரை ஏற்பாடு செய்து தரமுடியுமானால்
நன்றியுள்ளவளாக இருப்பேன். உங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகை,
எழுத்துக்காரருக்கு மாதச் சம்பளம் போன்றவை குறித்து உங்கள் பதில் கண்டு
மேற்கொண்டு தொடர்பு கொள்கிறேன். பணம் ஒரு பிரச்சனையே இல்லை என்பதை
நான் சொல்ல வேண்டியதில்லை.
கடிதம் நீண்டு விட்டது. பொறுமையுடன் படித்ததற்கு நன்றி. உங்கள் விரிவான
பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
அன்போடு
நந்தினி - பரணன்
__________________________________________________
Do You Yahoo!?
Send FREE video emails in Yahoo! Mail!
http://promo.yahoo.com/videomail/