From ramaninaidu@... Sat Jan 12 09:51:38 2002
Return-Path:
X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 17:51:27 -0000
Received: (qmail 45411 invoked from network); 12 Jan 2002 17:51:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 17:51:27 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 17:51:27 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.134) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 12 Jan 2002 17:50:46 -0000
Message-ID: <015f01c19b91$9a9b0b60$86eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , ,
Subject: THIRUPPAVAI 29 TAMIL
Date: Sat, 12 Jan 2002 22:52:41 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu"
X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14705

திருப்பாவை - நாள் இருபத்தொன்பது - பாடல் இருபத்தொன்பது

சிற்றஞ்சிறு காலே வந்துன்னைச் சேவித்துன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

திருப்பாவைப் பாடல்களுக்கு முத்தாய்ப்பாக அமைவது இருபத்தொன்பதாம் பாடலாகும். பாவை நோன்பின்
குறிக்கோளை வெளிப்படையாக அறிவித்தல் இப்பாடலில் நிகழ்கிறது.

இதுவரைக்கும் பறை கேட்டனர் ஆய்ப்பாடிப் பெண்கள். வழக்கமான விளக்கத்தின்படி அப்பறை அல்லது பரிசில் வளம்
தரும் மழையாகவும் ஏற்ற கணவன்மார் அமைதலும் ஆகும். பார்க்கப் போனால் பாவை நோன்பின் வேண்டுதல் மழை
என்று கருதுவதே காலந்தப்பிப் போன வேண்டுதலாக அமைந்துவிடும் என்றுதான் தோன்றுகிறது. கார்த்திகை
முதலிலேயே பருவ மழைக் காலம் தீர்ந்துவிடுகிறது.

மார்கழி மாதம் குளிர்காலம். தைமாதம் அறுவடைக் காலம். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள். எனவே
பாவை நோன்பை செழிப்பான அறுவடைக்கான பிரார்த்தனையாகக் கொள்வதே சரியாகத் தோன்றுகிறது. சமூகம்
செழிப்பை வேண்ட தனிப்பட்ட முறையில் மணவாழ்வு வேண்டுவதாகப் பாவை நோன்பு அமைகிறது என்று கொள்வது
சரியானதாகத் தெரிகிறது. அறுவடையும் திருமணமும் வளத்தைக் குறிப்பிடுகின்றன.

திருப்பாவையின் திரு என்ற அடைமொழியைக் கருத்தில் கொண்டால் அறுவடையும் நல்வாழ்வும் தாண்டிப் புனிதமான
ஒன்றைக் வேண்டுவதாக அமைய வேண்டும். மழை என்ற இடத்து கடவுளின் கருணை மழை என்று
கொள்ளலாம். இறைவனோடு இணைந்துவிடுதல் மணம் என்று கொள்ளலாம்.

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று முதல் பாட்டு பறை பெறுதலை அறுதியிட்டது.
உய்யுமாறு எண்ணி என்று சொல்லி இரண்டாம் பாடல் பாவை நோன்பின் நோக்கத்தைத் தெளிவுபடுத்தியது.
மூன்றாவது பாடல் மழை, செழிப்பு, செல்வம் பற்றிப் பேசியது.
நான்காவது பாடல் மழை வேண்டிப் பாடியது. மழை இறைக் கருணையாதல் விளக்கம் பெறுகிறது.
ஐந்தாம் பாடல் வினைப் பயனைக் கழித்துவிடுதல் பற்றிப் பேசியது.

ஆறு முதல் பதினைந்து வரையிலான பாடல்கள் பாவையர் நோன்புக்கெனத் திரண்டு வருவதற்கான நாடக
விளக்கமான அமைந்தன. இன்னமும் வந்து சேராத ஒருத்தியை வந்து சேருமாறு அழைப்பதாக அமைகின்றன என்று
கொண்டால் ஒவ்வொரு பாடலிலும் அவளை ஆழ்வார்களோடு ஒப்புவமைப்படுத்தித் தந்த சம்பிரதாய
விளக்கத்தின்படி குருவாக அமைகிறாள். அவள் வந்து சேரும் வரை பாவை நோன்பைத் தாம் மட்டுமே நிறைவேற்ற
முடியாது என்ற தொனியைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
பதினேழாம் பாடல் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதைக் காட்டுகிறது.
பதினெட்டு முதல் இருபத்து மூன்றாம் பாடல் வரை பாவையரின் பக்தியை இறைவன் ஏற்றுக் கொண்ட படிநிலைகளைக்
கூறுவதாக அமைகின்றன. அதனால்தான் இருபத்து நான்காம் பாடல் இறைவன் தோன்றியருளிய நிலையைக்
கொண்டாட வருகிறது.
இருபத்து நான்கு முதல் இருபத்து எட்டு வரையிலான பாடல்கள் பாவையர் பெறும் பறையைக் கொண்டாடின. பறை
கொள்வோம் என்பது இருபத்து நான்காம் பாடல். பறை தருதியேல் என்பது இருபத்து ஐந்தாம் பாடல்.
வேண்டுவன சாலப் பெரும் பறையே என்பது இருபத்து ஆறாம் பாடல். பாடிப் பறை கொண்டு என்பது இருபத்து
ஏழாம் பாடல். தாராய் பறை என்பது இருபத்து எட்டாம் பாடல்.

இருபத்து ஒன்பதாம் பாடலில் தொனி மாறிவிடுகிறது. இறைவன் பறை தரப் பாவையர் பெற்றுக் கொண்டனரோ?
அதனால்தான் இற்றைப் பறை கொள்வான் என்கின்றனர். எனவே இன்னும் சிறந்ததோர் பறையைக் கேட்கின்றனர்.
எற்றைக்கும் எழேழ் பிறவிக்கும் அவனோடு உற்றவராக இருக்கும் பறை.

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் என்ற கடைசி அடியில் பெரியதொரு நிலைமாற்றம் நிகழ்கிறது. வேறு
வகை ஆசைகள் அனைத்திலிருந்தும் எம்மை விடுவிக்க வேண்டும் என்கிறார்கள்.

முன்பே குறிப்பிட்டபடி இருபத்து ஒன்பதாம் பாடல் முத்தாய்ப்பாக அமைகிறது. சமய இலக்கியம் மூவகைப்படும்
என்பர். இறைவனை ஏத்திப் பாடுதல் ஒரு வகை. இறைவனை வேண்டிப் பாடுதல் இன்னொரு வகை. பற்றுகள் எல்லாமும்
அறுத்துவிட்டு இறைவனே சதம் என்று கொண்டு பாடும் பாடல்கள் மூன்றாவது வகை.

நான்காவது வகை சமய இலக்கியம் ஒன்றும் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அதை புனிதப்படுத்தும் இலக்கியம்
என்று கொள்ளலாம். துறத்தலைக் கொண்டாடும் இலக்கியத்தைப் போல் எதிர்மறை இலக்கியமன்று. வேண்டுதல்களை
முறையிடும் இலக்கியம் போலச் சுயநலம் நாடும் இலக்கியம் அல்ல. இறை இயல்புகளைப் பற்றிய தத்துவ
விசாரங்களைத் தாண்டி இறைவனை ஆன்மாவுக்கு மிக அருகனாகக் கண்டு அவனோடு மிக நெருங்கிய சொந்தத்தை
ஏற்படுத்திக் கொள்ளும் இலக்கியமாக அமைகிறது.

இவ்வகை இலக்கியம் இறைவனோடான இடையீடற்ற தொடர்பையே ஆன்ம சாதனையின் முடிந்த பயனாகக்
காண்கிறது. எதையும் துறக்க வேண்டும் என்று கொள்ளாது எல்லாவற்றுக்கும் ஓர் உயர்நிலை மாற்றம் தந்து
விடுகிறது. எனவேதான் இருபத்து ஒன்பதாம் பாடல் மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் என்றது. எமது ஆசைகள்
அனைத்தையும் மடை மாற்றி உன்னை நோக்கித் திருப்பவிடு என்பதாகக் கொள்ள வேண்டும்.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------


_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com