From ramaninaidu@... Sat Jan 12 09:53:19 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 12 Jan 2002 17:53:19 -0000
Received: (qmail 44847 invoked from network); 12 Jan 2002 17:53:19 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 12 Jan 2002 17:53:19 -0000
Received: from unknown (HELO smtp012.mail.yahoo.com) (216.136.173.32) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 12 Jan 2002 17:53:19 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.134) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 12 Jan 2002 17:53:15 -0000
Message-ID: <016101c19b91$f2c451c0$86eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: TIRUPPALLIYELUCCI 9 TAMIL
Date: Sat, 12 Jan 2002 22:54:19 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="Windows-1252"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
X-Yahoo-Message-Num: 14707
நாள் இருபத்து ஒன்பது - திருப்பள்ளியெழுச்சி - பாடல் ஒன்பது
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே உன் தொழுப்படியோங்கள்
மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே
வண் திருப்பெருந்துறை உறையாய் வழி அடியோம்
கண்ணகத்தே நின்று களிதரு தேனே
கடலமுதே விரும் படியார்
எண்ணகத்தாய் உலகுக்குயிர் ஆனாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
தேவர்களும் நெருங்கிடாதவன். உயிர்களை உலகுக்கு அனுப்பி வாழச் செய்கிறவன். கண்ணகத்தே நிற்கும் தேன்.
சாகாவிதம் அருளும் அமுதம். எண்ணத்தே நிறைந்த நிலைமையன். உலகுக்கு உயிரானவன். துயிலெழுந்து அடியார்க்கு
அருள வேண்டும். என்பது திருப்பள்ளியெழுச்சி ஒன்பதாம் பாடல்.
பாடலில் ஓர் அறிவிப்பு இருப்பதைக் காண வேண்டும். நாங்கள் உன் தொழுப்படியோங்கள் என்கிறார். எந்தை
தந்தை தன் தந்தை மூத்தப்பர் வழி வழி தாம் அடியவர் என்று ஆழ்வார் சொன்னதைப் பாருங்கள். ஒரு பிறப்பில்
ஒரு பயன் கருதி இறைவனுக்கு அடியார்கள் ஆனவர்கள் அல்ல என்கிறார். ஆண்டாள் நாச்சியாரும் எற்றைக்கும்
ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் என்று அறிவிப்பதைக் கண்டோம் அல்லவா?
மண்ணகத்தே வந்து வாழச் செய்வது எதற்கு என்றால் ஆன்மாக்கள் மலபரிபாகம் எய்திப் பக்குவம் பெற வேண்டும்
என்பதற்காக என்று கொள்ள வேண்டும். எனவே துயருக்குக் காரணமாவதும் இறைவனோடான பந்தம்
துணிக்கப்பட்டு இருப்பதுமாகிய பிறப்பும் ஒரு பயன் கருதியதே ஆகிறது. பக்குவம் அடைவதற்கான களம் மண்ணுலக
வாழ்க்கை எனும் போது வாழ்வை நிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு செயல் புரிய ஒரு களமாக்கும் பாங்கு
வெளிப்படுகிறது.
தேன் இனியது மட்டுமன்று. மருந்து கூட. எனவேதான் அடியவர்களின் கண்ணகத்தே நின்று களிப்புத் தருவதோடு
அவர்களுடைய பிணியை நீக்கும் மருந்தும் இறைவனாகிறான். இறைவனை அமுதம் என்று குறிப்பிடுவது
ஆழ்வார்கள் இலக்கியத்தில் பல முறையும் நிகழ்கிறது. அமுதம் தேவர்களுக்கு இறவா நிலை தந்தது.
ஆன்மாக்களுக்கும் அந்த இறவா நிலை தருகிறவன் இறைவன் எனும் போது ஒரு முரண்தொடை அழகைக்
காண்கிறோம். இறப்பில்லையேல் பிறப்பில்லை. வாழ்வகை வாழ்ந்து மலபரிபாகம் நீங்கிப் பக்குவம்
அடைவதே இறப்பில்லாப் பெரு வாழ்வு வாழ்வதாகிறது.
விரும்பு அடியார் எண்ணகத்தாய் எனும் போது இறைக் கொள்கையில் முடிவாகக் கூறுவதைக் கூறிப் போகிறார்
என்க. இன்னவர் அன்னவர் என்று யாராலும் சொல்ல முடியாதவர் ஒருவற்கு என்னவராகிறார்? அவரவர் எண்ணம் சென்று
சேரும் வகை வழி ஆகிறார். அதனாலேயே எண்ணத்தில் எத்தகையவனாய்த் தோன்றுகிறானோ அத்தகையவன் என்பது
எல்லையற்றதற்கும் ஓர் எல்லை வகுத்ததாகிப் போகிறது. அவரவர் எல்லைக்குள் குறுகி வரும்
எல்லையற்றவன் இறைவன் எனும் போது அனைத்தையும் கடந்து அனைத்திலும் விரவி இருக்க வரும் இறைவன் என்ற
கொள்கை சிறப்பாக வெளிப்படுகிறது.
|------------------------
| Please visit http://www.geocities.com/ramaninaidu
| for thousands of pages of sample texts translated between tamil and
english both ways.
|---------------------------------------------------------------------------
---------------------------------------------------------------
_________________________________________________________
Do You Yahoo!?
Get your free @yahoo.com address at http://mail.yahoo.com