From perichandra@... Sat Jan 12 19:12:12 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 03:12:10 -0000
Received: (qmail 2981 invoked from network); 13 Jan 2002 03:12:10 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 03:12:10 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 03:12:11 -0000
Received: from [216.115.97.83] by n7.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 03:12:11 -0000
Date: Sun, 13 Jan 2002 03:12:09 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Pongalo Pongal
Message-ID: In-Reply-To: <001701c19bd3$a7afb700$c9768ea1@thiru>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1282
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14713
--- In agathiyar@y..., "Kr. Thiruvarasu" wrote:
> நா. கணேசன் அவர்களுக்கும்
> இணையத் தமிழர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து!
>...
>
> புத்தாண்டு
>
> நாட்கள் நடந்து மாதங்களாக
> மாதங்கள் நடந்தால் ஆண்டாகும்!
> புதிய ஆண்டாகும்! - நாட்கள்
>
> கடமைகள் நமது கடனாகும்! - அதைக்
> காலத்தில் முடிப்பது பலனாகும்!
> திடுமென வருமென நினையாது - நாம்
> தினம்தினம் முயல்வது முறையாகும்! - நாட்கள்
>
> மலர்ந்த மலரினிக் குவியாது! - அது
> மறுபடி மலர்வதும் முடியாது!
> பிறந்த நமக்கது தெரியாது - என்ற
> பேச்சுக் களால்வரும் பயனேது? - நாட்கள்
>
> முடிந்த ஓராண்டு திரும்பாது! - இன்று
> பிறந்தது மீண்டும் கிடைக்காது!
> முடிந்ததை நாளைக்கு ஒதுக்காது - இன்று
> முடித்திடு உடனே தயங்காது! - நாட்கள்
>
> கரு.திருவரசு,
> "வெல்லத் தமிழினி வெல்லும்"
>
அன்புள்ள கரு. திருவரசு அவர்களே
மிக அருமையான பாடல்!
பொருளும் நயமும் சந்தத்தோடு பொருந்திப் பொங்கல் நன்னாட்கள்
போல் மாட்டுபொங்கலுக்கு வண்ணம் தூவிய மாடுகளின் கவினுடன
சித்திரமாய்த் திகழ்கின்றது!
பாராட்டுகள்!
உங்களுக்கும் அகத்தியர் அவையாருக்கும் மற்ற
இணையத்தார் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்!
மங்கலம் பொங்கட்டும்!