From sakthia@... Sat Jan 12 22:35:58 2002
Return-Path: X-Sender: sakthia@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 06:35:58 -0000
Received: (qmail 89345 invoked from network); 13 Jan 2002 06:35:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 06:35:57 -0000
Received: from unknown (HELO mailsmart1.eth.net) (202.9.174.15) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 06:35:57 -0000
Received: from smtp.eth.net ([202.9.178.26]) by mailsmart1.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.2966); Sun, 13 Jan 2002 09:50:10 +0530
Received: from 202.9.180.146 by smtp.eth.net (InterScan E-Mail VirusWall NT); Sun, 13 Jan 2002 09:56:32 +0530
Message-ID: <008201c19be8$936d0d00$cdb509ca@sakthia>
To: Cc: "era.murugan achwin" References: <20020112160254.8392.qmail@...>
Subject: Re: [agathiyar] ezuththukkArar - 1
Date: Sun, 13 Jan 2002 09:41:36 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
Return-Path: sakthia@...
X-OriginalArrivalTime: 13 Jan 2002 04:20:10.0625 (UTC) FILETIME=[9701D710:01C19BE9]
From: "kaviyogivedham" X-Yahoo-Group-Post: member; u=76645885
X-Yahoo-Message-Num: 14716
My Dear Murugan,
Pl. accept my pongal vazththu to yu &yur family.
Read yur nice story. Is it a story? or really yu want such a ezuththukarar?
Appadiyenil ungalukku (en ponra)oru yogiyaiththaan ,yu have to employ.
Illaiyenil neer sonna 'conditions kettu moochai vittuviduvar.
en ponra moochai(moocha alla!)-atakkip pazhagum velaikkaararthan umakkuth
thevai!!!(yet yur yathartha story was interesting..)
yurs, yogiyaar
----- Original Message -----
From: era.murugan achwin To: Sent: Saturday, January 12, 2002 9:32 PM
Subject: [agathiyar] ezuththukkArar - 1
> அன்பர்களே,
>
> வரும் வாரம் என் இரண்டு புதுச் சிறுகதைத் தொகுதிகள் வெளியாகின்றன
> ('மந்திரவாதியும், தபால் அட்டைகளும்', "ஐம்பது பைசா "க்Sபியர்").
> 'தேர்', 'ஆதம்பூர்க்காரர்கள்' என்ற என் நூல்களின் மறுபதிப்பு புது
> நாவலோடு, தமிழ்ப் புத்தாண்டு சமயத்தில் வர ஏற்பாடு நடக்கிறது.
>
> நிற்க - 'மந்திரவாதியும், தபால் அட்டைகளும்' தொகுப்பில் இடம்பெற்ற ஒரு
> சிறுகதையை இங்கே பொங்கல் வாழ்த்துக்களுடன் பகிர்ந்து கொள்வதில்
> மகிழ்கிறேன்.
>
> அன்புடன்,
> இரா.முருகன்
> ------------------------------------------------------
> எழுத்துக்காரர்
>
> (இரா.முருகன் -Oct 01)
>
>
> பெறுநர் ரகு@சேவை.காம்
>
> ரகு,
>
> நான் நந்தினி. நந்தினி பரணன். இங்கே ஒரு பிரபலமான சாஃப்ட்வேர்
> நிறுவனத்தில் வர்த்தகப் பொறுப்பாளராக இருக்கிறேன். அதாவது பிசினS
> மேனேfர். பரணன் இன்னொரு பன்னாட்டு நிறுவனத்தில் உப தலைவராக - வைS
> பிரசிடெண்ட்- இருக்கிறார்.
>
> உங்கள் மின்னஞ்சல் நேற்றுக் கிடைத்தது. பொதுவாக இப்படிப் பல மின்னஞ்சல்
> முகவரிகளுக்கு ஒரே நேரத்தில் போய்ச் சேரும் விளம்பர அஞ்சல்களை வடிகட்ட
> வீட்டுக் கம்ப்யூட்டரில் வசதியுள்ளதால் அவை எங்கள் கண்ணில் படாமலேயே
> மடிந்து போகும். மேலும், மின்னஞ்சல் மூலம் கம்ப்யூட்டர் கிருமிகள் பரவ
> வாய்ப்புள்ளதால் புதிதாக யாரிடமிருந்து கடிதம் வந்தாலும் அவசரப்பட்டுத்
> திறக்க மாட்டோம்.. என்றாலும் உங்கள் கடிதத் தலைப்பில்
> "ஆதிமுலமே..அவசரம்" என்று இருந்ததாலோ என்னவோ தப்பித்து விட்டது.
>
> எந்த விதமான சேவை வேண்டுமானாலும் குறைந்த கட்டணத்தில் செய்து தருவதாக
> உங்கள் அஞ்சலில் குறிப்பிட்டிருந்தீர்கள். ஏதாவது பெரிய சைS சேவைநாழி
> வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை :-)
>
> முன்வரியில் பக்கவாட்டில் புன்சிரிப்பு முகம் வரைந்திருப்பதைப் பார்த்து
> நீங்களும் சிரித்தீர்கள் என்றால் இடியாப்பத்தைச் சேவை என்று வழங்குவது
> உங்கள் குடும்ப வழக்கமாகவும் இருக்கலாம். அது இல்லாவிட்டாலும் ஒரு கணம்
> மரியாதைக்காகப் புன்சிரித்திருந்தால் நன்றி.
>
> வி"யத்துக்கு வருகிறேன். நானும் பரணனும் முன்னால் குறிப்பிட்டபடி
> உத்தியோகத்துக்குப் போகும் கணவனும் மனைவியும் - வரிசை
> பிசகியிருக்கிறது என்று நினைக்கிறேன் - போகிறது, வி"யம் தானே
> முக்கியம்.. நாங்கள் இருவரும் வார நாட்களில் வீட்டில் இருப்பது இயலாத
> காரியமாகி இருக்கிறது. திரும்பவும் இரவு வெகு நேரம் ஆகிறது.
>
> எங்கள் ஒரே மகன் நfன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் படிக்கிறான். பகல்
> நேரங்களில் அவனும் பள்ளியில் தான். வகுப்பு முடிந்து அப்படியே டென்னிS
> பயிற்சிக்குப் போய்விட்டு அவன் திரும்ப இரவு ஏழு மணியாகி விடும்.
>
> நீங்கள் மேலே படிக்கப் பொறுமை இல்லாமல், எங்களுக்கு சமையலுக்கு ஆள்
> தேவைப்படுகிறது என்று தீர்மானம் செய்து கொண்டு இது தொடர்பாக மேலும்
> தகவல்களை எதிர்பார்த்தால் வருந்துகிறேன். மைக்ரோ அவன் வீட்டில் உண்டு -
> ஓவன் என்று பிழையான உச்சரிப்போடு எழுத மனம் வரவில்லை . அவன் என்று
> எழுதும் போது எனக்குச் சிரிக்கவே தோன்றுகிறது. நிற்க. உறைந்த உணவு
> வகைகளும் பழங்களும் வெண்ணெய், ரொட்டி இன்ன பிறவும் வீட்டில் எப்போதும்
> தாராளமாக இருப்பதால் சமையல் எப்போதுமே எங்களுக்குப் பிரச்சனையே
> இல்லை.
>
> எங்கள் பிரச்சனை எல்லாம் இதுதான். இந்த மின்னஞ்சல் யுகத்திலும் கடிதங்கள்
> எழுதுவதும் அனுப்புவதும் பெறுவதும் என்னமோ நிற்கவில்லை. பேனாவையும்
> காகிதத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு கடிதம் எழுத உட்கார்ந்தால், கம்ப்யூட்டர்
> முன்னால் உட்கார்ந்து தட்டச்சு செய்வதுபோல் கடகட வென்று ஓட மாட்டேன்
> என்கிறது. எழுதுவதில் ஏதாவது தப்பு விழுந்துவிட்டால் அதன் மேல் புதிதாக
> எழுத முடியாமல் கோடு போட்டு அடிக்கும்போது மனதில் குற்ற உணர்ச்சி
> ஏற்படுகிறது. இந்தத் தொல்லையைத் தவிர்க்கக் கம்ப்யூட்டரில் கடிதம் எழுதி
> அதை அச்சிட்டுக் கீழே கையெழுத்து மட்டும் போட்டு அனுப்பலாம் என்றால்
> எங்கோ பிசகு தெரிகிறது. அதில் ஒரு அன்னியோன்யம் தட்டுப்படுவதில்லை.
>
> எங்களுக்கு ஒரு எழுத்துக்காரர் வேண்டும். எழுத்தாளர் இல்லை. எழுத்துக்காரர்.
> நான் கம்ப்யூட்டரில் எழுதியதைத் திரும்பக் கையெழுத்தில் எழுதித் தருகிறவர்.
> இந்த வேலை குறித்த விவரங்கள் வருமாறு :
>
> 1) அறுபது வயதுக்கு மேற்பட்ட, தமிழும் ஆங்கிலமும் எழுதப் படிக்கத் தெரிந்த
> ஆணோ பெண்ணோ எழுத்துக்காரராக வரலாம். மதம், இனம் போன்றவை குறித்து
> எந்தப் பிரச்சனையும் இல்லை. மூக்குப் பொடி, வெற்றிலை, புகையிலை, பாக்கு
> மெல்லுவது, சிகரெட் பிடித்தல் போன்ற எந்த விதமான கெட்ட பழக்கங்களும்
> அவருக்கு இருக்கக் கூடாது. தினசரி குளிப்பவராக, தூய்மையான ஆடை
> அணிந்தவராக, மூக்குக் கண்ணாடி மூலமோ, அது இல்லாமலோ சராசரியான
> கண்பார்வை உள்ளவராக, கம்ப்யூட்டரை இயக்கிக் கோப்புக்களைப் படிக்கத்
> தெரிந்தவராக, ஆணாக இருப்பின் முகத்தில் இரண்டு நாள் தாடியோடு இல்லாமல்
> சிரத்தையாகச் சவரம் செய்து கொள்கிறவராக இருப்பது அவசியம். மற்றபடி,
> உடல்குறை ஒரு பொருட்டல்ல. எனினும் எங்களது இருப்பிடம் நான்காவது மாடியில்
> அமைந்த குடியிருப்பு என்பதையும், அவ்வப்போது லிப்ட் வேலை செய்யாது
> என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்.
>
> 2) இந்த வயதுக்காரர்கள் கம்ப்யூட்டரில் அறிமுக அறிவோடு யோடு கிடைப்பது
> அரிது என்று எனக்குத் தெரியும். இதற்கான கம்ப்யூட்டர் அறிமுகக் கல்வியை
> அவர் பெற்று வேலையை ஏற்றுக் கொள்ளலாம். பயிற்சிக் கட்டணத்தை நாங்கள்
> செலுத்தி விடுகிறோம்.
>
> 3) காலையில் ஒன்பது மணிக்கு நாங்கள் அலுவலகம் கிளம்பும்போது வீட்டைப்
> பூட்டி, வரவேற்பறை வரை நுழைவதற்கான சாவியை மட்டும் எங்கள் பலமாடிக்
> குடியிருப்பு நிர்வாக அலுவலகத்தில் கொடுத்து விட்டுப் போய்விடுவோம்.
> எழுத்துக்காரர் சரியாகப் பத்து மணிக்கு அந்தச் சாவியைப் பெற்றுக் கொண்டு
> எங்கள் வரவேற்பறையில் பணியைத் தொடங்கலாம்.
>
> 4) நினைவு படுத்துகிறேன். அவருக்கு வரவேற்பறைக்குள் நுழைய மட்டும்தான்
> அனுமதி. அங்கே குடிதண்ணீர் உண்டு. கட்டிடத்தின் பொதுக் கழிப்பறை
> கீழ்த்தளத்தில் உள்ளது. அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
>
> 5) நாங்கள் எழுத வேண்டிய கடிதங்களைக் கம்ப்யூட்டரில் எழுதி
> வைத்திருப்போம். அவற்றைத் திருத்தமாகக் கையெழுத்தில் வெண்தாளில் எழுத
> வேண்டும். கையெழுத்து அழகாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தெளிவாக
> இருக்க வேண்டும்.
>
> 6) சில கடிதங்களை டேப் ரிக்கார்டரிலும் பதிவு செய்திருப்போம்.
> அவற்றைக் கேட்டு அப்படியே படியெடுக்க வேண்டும். இந்த வேலை பழகியதும்,
> சொல்ல வேண்டியவற்றைச் சுருக்கமாகச் சொல்லியோ, கம்ப்யூட்டரில் பதிந்தோ
> வைத்து விடுவோம். அவற்றை விரிவாக்கி, முந்தைய கடிதங்களோடு (இவை
> அனுப்பப் பட்டவையாகவோ, பெறப்பட்டவையாகவோ இருக்கலாம்) தொடர்பு
> படுத்தி முழுக் கடிதமாக எழுத வேண்டும்.
>
> 7) வேலை நுணுக்கங்கள் கைவரப் பெற்றதும், வந்த கடிதங்களைப் படித்து
> அவற்றுக்குத் தகுந்த பதில் எழுதி நாங்கள் அதைச் சரிபார்க்க எடுத்து வைப்பதும்
> வேண்டியிருக்கும்.
>
> 8) கடிதங்களை எங்களில் யாராவது கையொப்பம் இட்ட பிறகே அனுப்ப
> வேண்டும். மாதா மாதம் தேவைப் படும் பேனா மசி, கடித உறைகள், தபால்
> தலை, கடித உறையை ஒட்டப் பசை - எச்சில் தடவி ஒட்டுவதை நாங்கள்
> விரும்புவதில்லை - எழுத வெண்மையான ஏ-4 அளவு தாள்கள், எழுதும்போது
> கீழே வைக்க அட்டை, செருகிக் கொள்ள கிளிப், Sடேப்லர் போன்றவை
> வாங்க மாதத் தொடக்கத்தில் தனியாகத் தொகை வழங்கப் படும். அதற்கான
> செலவுக்கணக்கையும் கையிருப்பையும் நாங்கள் கோரும்போது எழுத்துக்காரர்
> சமர்ப்பிக்க வேண்டும்.
>
> 9) எழுதி, சரிபார்த்து, கையொப்பமிடப்பட்டு, அனுப்பத் தயாராக உள்ள
> கடிதங்களை எழுத்துக்காரர் மாலையில் வேலை முடிந்து கிளம்பும்போது
> தெருமுனையில் உள்ள அஞ்சல் பெட்டியில் போட்டு விட்டுப் போக வேண்டும்.
> இதற்காக அவருக்குத் தனித் தொகை எதுவும் வழங்கப் படாது.
>
> 10) கடிதங்களில் எழுதப் படும் தகவல்கள், அவற்றைப் பெறுகிறவர்கள் பற்றிய
> எதையும் எழுத்துக்காரர் யாரோடும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. வேலைக்கான
> ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது இது உறுதி செய்து
> கொள்ளப்படும். மீறினால், பணியில் இருக்கும்போதோ, விலகிய பிறகோ
> சட்ட நடவடிக்கை எதிர்கொள்ள வேண்டி வரலாம் - இப்படி எல்லாம் நடக்காது
> என்றாலும் முன் கூட்டியே சொல்வதில் தவறில்லை அல்லவா?
>
> 11) கம்ப்யூட்டரையும் டேப் ரிக்கார்டரையும் எங்களுக்கான கடிதங்களை எழுதும்
> பணிக்குத் தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது.
>
> (தொடரும்)
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Send FREE video emails in Yahoo! Mail!
> http://promo.yahoo.com/videomail/
>
>
> --------------------------------------------------------------------------
-------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> --------------------------------------------------------------------------
-------
>
>
>
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>