From thiruv@... Sat Jan 12 23:02:41 2002
Return-Path: X-Sender: thiruv@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 07:02:41 -0000
Received: (qmail 27307 invoked from network); 13 Jan 2002 07:02:41 -0000
Received: from unknown (216.115.97.171) by m12.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 07:02:41 -0000
Received: from unknown (HELO smtp6.jaring.my) (61.6.32.56) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 07:02:40 -0000
Received: from thiru (j25.byb39.jaring.my [61.6.137.39]) by smtp6.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g0D72HO13176; Sun, 13 Jan 2002 15:02:18 +0800 (MYT)
Message-ID: <000601c19c00$76abfb00$2789063d@thiru>
To: Cc: Subject: Pongalo Pongal
Date: Sun, 13 Jan 2002 09:43:00 +0800
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 4.72.3110.1
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V4.72.3110.3
From: "Kr. Thiruvarasu" X-Yahoo-Group-Post: member; u=23346294
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14717
நா. கணேசன் அவர்களுக்கும்
இணையத் தமிழர் அனைவருக்கும் பொங்கல்வாழ்த்து!
எங்கள் நாட்டில் (மலேசியா) தைப்பிங் எனும் நகரத்திலுள்ள
"தமிழர் முன்னேற்றக் கழகம்" எனும் அமைப்பு இவ்வாண்டு
பொங்கல் வாழ்த்திதழை உருவாக்கி அன்பர்களுக்கு விடுத்தது.
அதில் தங்கத் திருக்குறள் நூலில் வந்த உழவுக் காட்சியோடு
1981ஆம் ஆண்டு வெளிவந்த "முதல் மலர்" எனும்
என் இசைப்பாடல் தொகுப்பிலிருந்து ஒருபாடலையும் இணைத்துள்ளது.
அதை இங்கே தருகின்றேனே!
புத்தாண்டு
நாட்கள் நடந்து மாதங்களாக
மாதங்கள் நடந்தால் ஆண்டாகும்!
புதிய ஆண்டாகும்! - நாட்கள்
கடமைகள் நமது கடனாகும்! - அதைக்
காலத்தில் முடிப்பது பலனாகும்!
திடுமென வருமென நினையாது - நாம்
தினம்தினம் முயல்வது முறையாகும்! - நாட்கள்
மலர்ந்த மலரினிக் குவியாது! - அது
மறுபடி மலர்வதும் முடியாது!
பிறந்த நமக்கது தெரியாது - என்ற
பேச்சுக் களால்வரும் பயனேது? - நாட்கள்
முடிந்த ஓராண்டு திரும்பாது! - இன்று
பிறந்தது மீண்டும் கிடைக்காது!
முடிந்ததை நாளைக்கு ஒதுக்காது - இன்று
முடித்திடு உடனே தயங்காது! - நாட்கள்
கரு.திருவரசு,
"வெல்லத் தமிழினி வெல்லும்"
[Non-text portions of this message have been removed]