From philipae@... Sat Jan 12 23:20:49 2002
Return-Path: X-Sender: philipae@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 07:20:48 -0000
Received: (qmail 53788 invoked from network); 13 Jan 2002 07:20:48 -0000
Received: from unknown (216.115.97.167) by m5.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 07:20:48 -0000
Received: from unknown (HELO imsmq06.netvigator.com) (208.167.231.42) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 07:20:48 -0000
Received: (qmail 32524 invoked from network); 13 Jan 2002 07:20:45 -0000
Received: from yckam030067.netvigator.com (HELO netvigator.com) (218.102.28.67) by imsmq06.netvigator.com with SMTP; 13 Jan 2002 07:20:45 -0000
Message-ID: <3C4135FA.33C5921E@...>
Date: Sun, 13 Jan 2002 15:23:38 +0800
Organization: HOME
X-Mailer: Mozilla 4.75 [en] (Win98; U)
X-Accept-Language: en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Pongkal, kArttikai vizA etc.
References: Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
From: PHILIP AE Reply-To: philipae@...
X-Yahoo-Group-Post: member; u=23647508
X-Yahoo-Profile: philipae2001
X-Yahoo-Message-Num: 14718
perichandra wrote:
> >
> > perichandra wrote:
> >
- வெட்டு----
>
> > ஆனால் அதற்கும் பொங்கல் திருநாளைத் தமிழர் விழாவென்று கூறுவதற்கும் என்ன
> >முரண்பாடு. . பல தமிழறிஞர்களும்
> > இவ்விழ்ழாவைத் தமிழர் நாளாக கொண்டாடுவதற்கு உடன் படுகிறார்கள்.
> பொங்கலை மட்டும் தமிழர் திருநாள் என்று சொல்ல ஒரு அடிப்படையும் கிடையாது.
> சங்க இலக்கியம் பயில்வோருக்குப் பொதுவாகவே இது தெரிந்ததானாலும்
> விழாக்களை ஆய்ந்து எழுதும் அறிஞர்களும் அவ்வாறே சொல்கின்றனர்:
> தக்கிணாமூர்த்தி, பரமசிவானந்தம் என்ற இருவர் கட்டுரையில் சங்க இலக்கியத்தில்
> பொங்கலுக்குச் சான்றில்லை என்று ஒருமித்துக் கூறுகின்றனர்.
> கணேசன் முன்பொருநாள் சொன்னதுபோல் பொங்கல் என்ற சொல் பொங்குசோற்றுக்கு
> நெடுநாளாக இலக்கியத்திற் காணோம். சங்கத்தில் இல்லை.
> பொங்கல் வெண்மழை என்றுதான் உள்ளது.
>
> தூய தமிழ்-திராவிடச் சமூகப் போராட்டம் என்று கிளம்பிய மக்கள் வடமொழிமரபில்
> நம்பண்பாட்டின் ஏதொரு கூற்றையும் தொடுத்துவிட்டால் உடனே அதைக்
> கைவிட்டு இன்னொன்றைப் பெரிதுபடுத்துவது வழக்கம் என்று நாம் அறிகிறோம்.
> எனவே பொங்கலைத் தமிழர் திருநாள் என்று தொன்மைச் சான்றே இல்லாதபோது
> ஒருதனித் தகுதி அளிப்பது தொன்மைச் சான்றுள்ள மற்ற பண்டிகைகளுக்குக்
> கேடு தரும் பொறுப்பற்ற செயலாகும்.
உங்கள் கருத்துகளுடன் பெரும் பாலும் உடன் பாடே. பண்டிகைகளை மட்டும்மல்ல
அதனுடன் தொலைத்துவிட்ட பண்பாடு, மொழி,தன் மானம் போன்றவற்றையும் மீண்டும்
நிறுவதில் எனக்கு மட்டும் மல்ல எந்த உண்மைத்தமிழனுக்கும் வேறு பட்டகருத்திருக்காது.
ஆனால் ஒரு விழாவைச் சிறப்புச் செய்வதால் எப்படி மற்ற விழாக்களுக்கு ஏன் கேடுவரும்.
அடுத்து சங்கத் தமிழில் சான்றில்லாவிட்டால் அதற்கும் தமிழருக்கும்தொடர்பில்லையென்று
கூறுவதால் வரும் கேடு பெரிதாகும். சங்க காலத்தோடு தமிழுக்கும் தமிழருக்கும் ஒரு பெரிய
முற்றுப் புள்ளியே வைத்துவிடுகிறீர்களே!!! எல்லாவற்றிற்கும் சங்க இலக்கியங்களில்
சான்று இருக்கவேண்டுமென்பது தேவையில்லை. அப்படி இருந்தாலும் அந்த இலக்கியங்கள்
மறைந்து விட்டிருக்கலாம். அல்லது சங்ககாலத்திற்குப் பின் இந்த விழா ஏற்பட்டிருக்கலாம்.
தொல் காப்பியத்தில் சிவனைப் பற்றி குறிப்பில்லை யென்பதால்
சிவனை தமிழிலிருந்து ஒதுக்கிவிடமுடியுமா?!!
கார்த்திகைத் திருனாள் மட்டுமல்ல இன்னும் தீபாவளி, பங்குனி யுத்திரம், ஆவணி அவிட்டம்
போன்ற பல விழாக்களும் தமிழர் விழாக்களேயென்று மறை மலையடிகள் 80 அல்லது
90 ஆண்டுகளூக்கு முன்னமே கூறி நிறுவியுமுள்ளார்.என்னினுமவைகள் இன்னும் அந்த
நிலையிலேயேயுள்ளன. பொங்கல் விழா இன்று இன்னிலை அடைந்திருப்பதற்குக் காரணம்
திராவிடக் கட்சிகளாகவிருக்களாம் ஆனால் மற்றவர்கள் ஏனைய விழாக்களை தமிழர்களின்
விழாக்கள் என்று நிறுவுவதற்கு யார் குறுக்கே நின்றார்கள்? இன்றும் இவைகள்
'வைதிக இந்து"களின் விழாக்ககள் என்று கூறி பட்டி தொட்டி, சந்து பொந்து,கோயில் நடுத்தெரு,
ஊடகம் நிழல் வெளியென்று எங்கும் நிறைந்து பறைசாற்றப் படுகிறது.. இவைக்களுக்களுக்கு
மாற்றாக இதுவரையில் எந்த வித முயற்சியும் யாரும் செய்வதாக தெரியவில்லை.பொங்கலை
இந்நிலைக்குக் கொண்டுவந்ததே பெரும் பாடு. நிலமையிப்படி இருக்க திராவிடக் கட்சிகளால் நிறுவப்
பட்டதென்பதற்காக பொங்கல் விழாவையும் கைவிட்டு விட்டால் இருப்பதும் போச்சுடா நொள்ளைக்
கண்ணாவென்ற நிலைதான்.
>
>
--வெட்டு--
>
> இந்தச் சமயச்சார்பின்மை வேண்டுமென்று சொல்லி அமெரிக்காவில் குழந்தைகளின்
> வாரக்கடைத் தமிழ்ப்பள்ளிகளில் வகுப்புத் தொடக்கத்தில் "பாலும் தெளிதேனும்...
> சங்கத் தமிழ்மூன்றுந் தா" என்ற எண்ணரிய பாடலை ஓதுவதை விட்டுத் தேவே உன்னைப்
> போற்றிடுவேன் என்று ஏதோவொரு பாடலைப் பாடுவது வழக்காகிவிட்டது.
> இரண்டும் இணையாகாது.
இன்று தமிழறிந்த தமிழர்களை கை விட்டு எண்ணிவிடலாம்.அதனால் தங்களுக்கு தெரிந்ததை
செய்கிறார்கள். தமிழறிந்தவ்ர்கள்தாம் இவைகளை எடுத்துச் சொல்லி மாற்ற முயல வேண்டும்
>
> மதச்சார்பின்மை என்று சொல்லி தன்மதமறுப்பைவிட அயன்மதப்பொறையை வளர்ப்பதுதான்
> முக்கியம். அதுதான் உண்மையான முயற்சி.
ஈசுவர அல்லா தேரே நாமென்று கூறிய காந்தி வணங்கியது இராமனை, வளர்த்தது 'இந்து' மதத்தை.
'என் மதமும் சம்மதமென்றவரும்' வளர்த்தது சைவத்தை,
' மதங்களிடையே வேறுபாடில்லை மனிதஃனிடம்தான் வேற்றுமையென்று கூறிய விவேகானந்தர்
வளர்த்ததும் இந்து மதமே.
மதங்ளைப் பற்றி நன்கு உணர்ந்தவர்களே இப்படியென்றால் தனக்கென்று தகுதியான அரசைக்கூட
தேர்தெடுக்க முடியாத பேதைத் தமிழனிடம் இதை எதிர்ப் பார்க்க முடியுமா?!!
> இந்த மதச்சார்பின்மை ஏமாற்றலால் தமிழன் தன் மிகப் பழம் பண்பாட்டுக்கூறுகளை
> இழந்துகொண்டிருக்கிறான். இவ்வாறு இழப்பது இந்து மதம் என்ற சூழலில்
> வளரும் தமிழன்மட்டுந்தான்.
> இப்படி மதச்சார்பின்மை பேசிக் கார்த்திகையை மறந்து பொங்கலை ஆதரவின்றித்
> தூக்குவதுதான் சிறந்ததென்றால் மற்ற மதத் தமிழர்களும் பொங்கலை மட்டுமே
> தம்முடைய ஒருதனிப்பண்டிகையாகக் கொண்டாடவேண்டும். ....அது நியாயமா இல்லையா?
உண்மைதான் ஆனால் அறிந்தவர்கள் தெரிந்தவர்களே இப்படி ஐயங்கள் எழுப்பி முட்டுக் கட்டை
போட்டுக் கொண்டிருந்தால்
--வெட்டு--
> >கார்த்திகை தீபத்தை தமிழர் விழாவென்று நிலைனாட்டுதலில் மகிழ்ச்சியே அதற்காக >
> இதுகாறும் கொண்டாடி வரும் தமிழர்
> >திரு நாளாகிய பொங்கல்
> > திரு நாளை புறக்கணிக்க வேண்டுவதில்லை யென்பது என் தாழ்மையான எண்ணம்.
>
> மீண்டும் *நான்* சொல்லவேண்டிய சொற்கள்: :-)
> பொங்கலைத் தமிழர் திருநாள் என்று நாட்ட முயல்வது மிக்க மகிழ்ச்சியே.
> ஆனால் கார்த்திகையை மெதுவாகப் புறக்கணிப்பது பொருந்தாது.
புறக்கணிக்கப் படுகிறதென்பது பொருந்தாது. அதற்காகா எந்த முயற்சியும் மேற்கொள்ளப்
படவில்லை யென்பதே உண்மை. பழி ஒருவிடம் பாவம் திராவிடக் கட்சிகளின் மேல்.
இதில் என்ன நியாயம்??
> ......
> > >
> > > இந்தத் தமிழ்ச்சங்கங்களும் மற்ற தமிழறிஞர் பெயர்வழிகளும் கார்த்திகைத் தீபத்தைக்
> > > காக்கும் வழியை நடத்துவது நலமாகும். தீபாவளி விழா என்னும் தலைப்புத் தொடரில்
> > > கார்த்திகைத் தீபம் என்னும் தொடரையும் தொடுக்கும் மரபை முதலில் கொணரலாமே.
> >
> > நீங்களே இதை தொடக்கி வைக்களாமே.
>
> இந்த நீங்கள் என்பதில்தான் நம் தலைவலியே.
> தமிழ்ப்பண்பாடு அவரவர் குடும்பப் பொறுப்பு. இந்தச் சங்கம் மன்றம் கட்சி யெல்லாம்
> இரண்டாம் படிதான்.
தமிழன் பொறுப்புள்ளவனாகவிருந்தால் தமிழ் இன்று நிலைகுன்றி தலைக் குனிந்து நிற்குமா?
சூடு சுரணையற்ற இனமாகிவிட்டது தமிழினம் அதனால் பொறுப்புகளைப் பற்றி விவாதிக்காமல்
தன்னால் முடிந்ததை தமிழுக்குத் தருவோமென்று
இந்தப் பொங்கல் திருநாளில் ,
தமிழர் பெரு நாளில் உள்ளுவோமா?
ஓங்குக தமிழர்,
வாழ்க தமிழ் இவ்வையம் முள்ளவரை
அன்புடன்,
பிலிப்
ஆங் காங்.
> இது ஒரு பண்டிகை....அவரவர் வீட்டில் நிகழவேண்டியது.
> அவரவர்கள் அடுத்தமுறை கார்த்திகைத் தீபம் வரும்போது அதற்குத் தக்க
> மரியாதையோடு தீபாவளி அளவாவது கொண்டாடுவதுதான் வழி...
>
> > வாழ்த்துகள்
> >
> > அன்புடன்,
> > பிலிப்
> > ஆங் காங்.
> >
> >
>
> ---------------------------------------------------------------------------------
> For archives click
> http://groups.yahoo.com/group/agathiyar/messages
> ---------------------------------------------------------------------------------
>
>
>
> Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/