From poo@... Sun Jan 13 03:59:17 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 11:59:17 -0000
Received: (qmail 26753 invoked from network); 13 Jan 2002 11:59:17 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 11:59:17 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 11:59:17 -0000
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in (unknown [203.199.227.60]) by giasmd01.vsnl.net.in (Postfix) with ESMTP id ACF37174; Sun, 13 Jan 2002 17:33:36 +0530 (IST)
Message-Id: <4.3.0.20020113150451.00e189f0@...>
X-Sender: poo/202.54.6.1@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Sun, 13 Jan 2002 15:19:48 +0300
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com
Subject: azhagi
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 14724

அன்பிற்குரிய இணையத்தாருக்கு,

நல்ல தமிழ் எழுதக் கூடியவர்களே "வசனி"த்துக் கொண்டிருக்கும் இந்த நாளில், "அழகி" என்ற திரைப்படம்
பற்றி ஒரு விளம்பரம் பார்த்தேன்; படித்தேன்; என் உள்ளம் மகிழ்வுற்றது.

அதில் "கதை, திரைக்கதை, உரையாடல், ஒளிஓவியம், நெறியாள்கை - தங்கர்பச்சான் " என்று
எழுதியிருந்தது.

இந்த "உரையாடல்" என்ற சொல்லை எத்தனை பேர் திரைப்படத்துறையில் பயன்படுத்திருக்கிறார்கள்?
தமிழுக்கு நல்ல காலம் வந்துற்றதோ?

இன்னும் ஒரு சிறப்பு "நெறியாள்கை" என்றசொல். "இயக்குநர்" என்ற விவரம் கெட்ட, பொருளற்ற
மொழிபெயர்ப்பு வேண்டாம் என்று நான் எப்பொழுதுமே சொல்லிவருவது உண்டு. (அது operator என்பதற்கு
மட்டுமே பொருத்தமான சொல்.) நெறியாளர் என்பதே director என்ற சொல்லுக்குப் பொருந்தும்.

நெறியாளர் தங்கர் பச்சானை நண்பர் இளங்கோவன் அவருடைய சிலம்பு மடல் பொத்தக விழாவில் அறிமுகப்
படுத்தினார். அவர் தன் உரையால் என்னைக் கவர்ந்தார். அப்பொழுது இந்தச் சொல்லை நான் கூறியதாக ஞாவகம்.

இனிய நினைவுகள். தங்கர் பச்சானைப் போல நாலு பேர் ஒவ்வொரு துறையிலும் இருந்தால் போதும்.
நல்லதமிழ் துலங்கிவிடும். அவர் வளரட்டும்.

அவருடைய அழகியைப் பார்த்துவிட்டுப் பின் எழுதுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.