From naga ganesan@... Sun Jan 13 06:06:44 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 14:06:44 -0000
Received: (qmail 46610 invoked from network); 13 Jan 2002 14:06:44 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 14:06:44 -0000
Received: from unknown (HELO n28.groups.yahoo.com) (216.115.96.78) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 14:06:43 -0000
Received: from [216.115.96.151] by n28.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 14:06:31 -0000
Date: Sun, 13 Jan 2002 14:05:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Pongalo Pongal
Message-ID: In-Reply-To: <000601c19c00$76abfb00$2789063d@thiru>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1606
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.226.121
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14725
அன்புக்குரிய கவிஞரே,
மெல்லத் தமிழினிச் சாகும் என்றந்தப் பேதை உரைத்தான் என்றார் மகாகவி.
அதை உணராமல் நம் நண்பர் சிலர் பேசுவதுண்டு. உறைக்குமுகத்தான்,
"வெல்லத் தமிழினி வெல்லும்" என்று பறையறைந்தவரே! வணக்கம்.
கவிதை கண்டேன்;
புத்தாண்டுக் கவிதை பூரிக்கச் செய்தது.
நன்றி,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Kr. Thiruvarasu" wrote:
> நா. கணேசன் அவர்களுக்கும்
> இணையத் தமிழர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து!
>
> எங்கள் நாட்டில் (மலேசியா) தைப்பிங் எனும் நகரத்திலுள்ள
> "தமிழர் முன்னேற்றக் கழகம்" எனும் அமைப்பு இவ்வாண்டு
> பொங்கல் வாழ்த்திதழை உருவாக்கி அன்பர்களுக்கு விடுத்தது.
>
> அதில் தங்கத் திருக்குறள் நூலில் வந்த உழவுக் காட்சியோடு
> 1981ஆம் ஆண்டு வெளிவந்த "முதல் மலர்" எனும்
> என் இசைப்பாடல் தொகுப்பிலிருந்து ஒரு பாடலையும் இணைத்துள்ளது.
> அதை இங்கே தருகின்றேனே!
>
> புத்தாண்டு
>
> நாட்கள் நடந்து மாதங்களாக
> மாதங்கள் நடந்தால் ஆண்டாகும்!
> புதிய ஆண்டாகும்! - நாட்கள்
>
> கடமைகள் நமது கடனாகும்! - அதைக்
> காலத்தில் முடிப்பது பலனாகும்!
> திடுமென வருமென நினையாது - நாம்
> தினம்தினம் முயல்வது முறையாகும்! - நாட்கள்
>
> மலர்ந்த மலரினிக் குவியாது! - அது
> மறுபடி மலர்வதும் முடியாது!
> பிறந்த நமக்கது தெரியாது - என்ற
> பேச்சுக் களால்வரும் பயனேது? - நாட்கள்
>
> முடிந்த ஓராண்டு திரும்பாது! - இன்று
> பிறந்தது மீண்டும் கிடைக்காது!
> முடிந்ததை நாளைக்கு ஒதுக்காது - இன்று
> முடித்திடு உடனே தயங்காது! - நாட்கள்
>
> கரு.திருவரசு,
> "வெல்லத் தமிழினி வெல்லும்"