From naga ganesan@... Sun Jan 13 06:39:58 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 14:39:58 -0000
Received: (qmail 55117 invoked from network); 13 Jan 2002 14:39:58 -0000
Received: from unknown (216.115.97.171) by m2.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 14:39:58 -0000
Received: from unknown (HELO n32.groups.yahoo.com) (216.115.96.82) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 14:39:58 -0000
Received: from [216.115.96.150] by n32.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 14:39:57 -0000
Date: Sun, 13 Jan 2002 14:39:56 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: The mansion in EjamAn movie
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1432
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.226.121
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14727


நான் பார்த்த திரைப்படங்களைக் ஒருகைவிரல் விட்டு எண்ணிவிடலாம்.
ஆனால், திரைப்படம் எடுத்த சிலர் (கோவை மாவட்டத்தில் இஇருந்து)
எனக்கு உறவினர்கள்கூட உண்டு. இஇப்பொழுது DVD ஊடகத்தால்
சில பழைய திரைப் படங்களைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்கிறது.
பாரதி, கப்பலோட்டியதமிழன், தெனாலி, .... வாங்கிவிட்டேன்.

-----------------------------------

ரஜனிகாந்த் அவர்களின் எஜமான் என்ற படம் கொஞ்ச நேரம் பார்க்கமுடிந்தது.

அதில் வரும் வீடு சமத்தூர் வாணவராயர்கள் அரண்மனை.
சமத்தூர் பொள்ளாச்சி அருகே உள்ளது. தமிழ் இலக்கியத்துக்கும்
அந்த மனைக்கும் சம்பந்தம் உண்டு. வீட்டுக்கு முன்னர்
எப்போதும் எழுத்தாணியும் ஓலையும் தொங்கும்.
அதில் உதவி நாடி வரும் புலவர் தம் தேவையை எழுதுவர்
என்று கொங்குமண்டல சதகப் பாடல் உள்ளது.
நேரில் கேட்கத் தயங்குவர். அதனால் இந்த ஏற்பாடு.
இதுபற்றி, கி. வா. ஜ. அவர்கள் ஒருகதை எழுதியிருக்கிறார்.
தமிழில் எங்கும் இப்படி ஓர் அரிய கருத்தும் பாடலும் இல்லை
என்பார் கி. வா. ஜ.

வாணவராயர் மாவலிவாணன் என்று முன்னர் ஆறகழூர் என்ற
ஊரில் வாழ்ந்தனர். பாண்டியர் அழிவுற்றபின் பழனிப் பக்கம்
இருந்து, கோபணமன்றாடி உதவியால் சமத்தூர் சேர்ந்தனர்.
கோபணன் பற்றி முன்னர் எழுதியிருக்கிறேன்.
அவர்முன்னோர் பாண்டிய தளபதியாய் சிங்களப்படையை
நாசம் செய்தது கல்வெட்டுக்களாய்ப் பேரூரில் பிற இடங்களில்
உண்டு. கோபணன் மீதெழுந்த ஒருதுறைக்கோவை
அழிந்துவிட்டது. ஒருபாடல் கொங்குமண்டல சதகத்தில்
தப்பி மிஞ்சிஉள்ளது. சிங்களர் பம்பிட .... எனத் தொடங்கும்.

அன்புடன்,
நா. கணேசன்