From naga ganesan@... Sun Jan 13 07:14:45 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 15:14:45 -0000
Received: (qmail 90639 invoked from network); 13 Jan 2002 15:14:45 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 15:14:45 -0000
Received: from unknown (HELO n1.groups.yahoo.com) (216.115.96.51) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 15:14:45 -0000
Received: from [216.115.96.111] by n1.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 15:14:27 -0000
Date: Sun, 13 Jan 2002 15:13:41 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: PongalO Pongal!
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 982
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.24.48
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14728

பாரதி கலை மன்றம், ஹூஸ்டன், டெக்சாஸ்
தமிழ்ச் சாரல், ஜனவரி 2002 இதழிலிருந்து:

பொங்கலிடும் கன்னிகையே
---------------------------------

(இயற்றியவர்: மோகன்)

கத்தூரி மஞ்சளிலே கண்டாங்கிச் சேலைகட்டி
மண்பானை ஏந்திவரும் சின்னாத்தா! -என்
மனத்தை மயக்குகிற மாயமென்ன சொல்லாத்தா!

வாழையடி வாழையாக வம்சமெலாம் வளர்ந்திடவே
வாழைக்கன்று நட்டுவந்த சின்னாத்தா! - உன்
வார்த்தை எல்லாம் தேனொழுகும் செல்லாத்தா!

புதுநெல்லு புதுநாத்து புத்தரிசி பொங்கலிட
பூசைபோட வந்துநின்ற சின்னாத்தா! - உன்
புன்சிரிப்பில் பூமலரும் பூவாத்தா!

வருசமெல்லாம் வயல்வரப்பில் வாடிநிற்கும் விவசாயி
நன்றி சொல்லும் திருநாளே சின்னாத்தா! - அவன்
வாழ்ந்துநிற்கக் கும்மியடி பொன்னாத்தா!

பூகேட்டால் முத்துதிரும் விதைபோட்டால் பொன்விளையும்
பொன்னான தமிழ்மண்ணே சின்னாத்தா! - நல்லாப்
போற்றியொரு படையலிடு கண்ணாத்தா!

தித்திக்கும் கற்கண்டும் சிவந்துவரும் பால்சேர்த்து
பொங்கலிடும் கன்னிகையே சின்னாத்தா! - மனுசன்
வாழ்க்கையிலே பொருள்சேர்க்கும் தங்காத்தா!