From perichandra@... Sun Jan 13 08:27:28 2002
Return-Path: X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 16:27:28 -0000
Received: (qmail 14150 invoked from network); 13 Jan 2002 16:27:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m6.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 16:27:27 -0000
Received: from unknown (HELO n33.groups.yahoo.com) (216.115.96.83) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 16:27:27 -0000
Received: from [216.115.96.139] by n33.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 16:27:26 -0000
Date: Sun, 13 Jan 2002 16:27:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: azhagi
Message-ID: In-Reply-To: <4.3.0.20020113150451.00e189f0@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3025
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra" X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14730
--- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
> அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
>
> நல்ல தமிழ் எழுதக் கூடியவர்களே "வசனி"த்துக் கொண்டிருக்கும் இந்த நாளில்,
அன்புள்ள இராம.கி.
மங்கலம் பொங்க வாழ்த்துகள் !
நான் நல்ல தமிழ் எழுதுகிறேனோ இல்லையோ ஆனால் வசனிப்பு என்று எழுதினேன் நான்.
எழுதுவதன் ஆழம் தெரிந்தே எழுதினேன். ஏற்கனவே சிலவற்றை விளக்கி எழுதுவதாகச்
சொல்லியிருந்தேன். அந்த நிலுவையே இன்னும் தீரவில்லை. எனவே இதுவும் நிலுவையில்.
:-)
அதற்குள்
நிலுவையில் இருப்பதை இப்போதே முன் வை என்று...
என்னை வையாதீர்கள்,...
அதாவது வசை பாடாதீர்கள்...அத்தாவது வசனிக்காதீர்கள்...
அடடா நிலுவையில் ஒன்று தீர்ந்ததா...!
எப்படியோ அந்தச் சொற்பிறப்புக் கசிந்து இப்படி எதிர்பாராத கசனம் ஆகிவிட்டதே!
பழையன கழிந்து புதியன புகும் போகிநன்னாளில்
களையவேண்டிய புதிய மாசுகளைப் போக்கிப் பழைய செந்தமிழ் பொலிய
என் எதிர்பாராத இந்தச் சொற்பிறப்பியல் காணிக்கை!
கவனிக்க: வடமொழி கடன்வாங்கவில்லை வச் = பேசு என்ற வேரை என்பதை அறிக.
அது கடன் என்பது நடுநிலையாகாது.
வொசி என்றால் இலத்தினில் பேச்சு.
அருணகிரிநாதர் ஒட்டக்கூத்தர் போன்று பெயர் தெரிந்தவர்களும்
பெயர் பதியாத பெயர் தெரியாத பாமரத் தமிழ்மக்களும் பலமொழிக்குடும்பங்களாகப் பிரிந்த
வேர்களையும் குழம்பாமல் இரத்தத்தைச் சொட்டி உறுதியோடு போற்றி வந்துள்ளார்கள்..
மாட் ரூலன் என்னும் மொழியியலார் சொல்லியுள்ள படி மொழி மாறுவதன்
காரணங்களில் இரண்டு அடிப்படை:
1. ஒலிப்புச் சோம்பல் 2. மாற்றம்வேண்டும் என்பதற்காகவே மாறுவது.
அவர் தமிழரின் மொழிமாற்றத்திற்கே உரித்தான இன்னொரு காரணத்தைச் சேர்க்கவில்லை.
ஏனெனில் நமது மரபு ஒருதனி; அதனால் நமது குழப்படியும் ஒருதனி!
3. பிறர் தமதென்று எதையும் சொல்லியோ சொல்லாமலோ வழங்கினால்
அதை ஆராயாமல் அவரது என்று கைவிடல் :-)
இந்தக் குழப்படி செம்மையைக் காக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் விளைந்துதான்.
ஆனால் முதலுக்கே மோசம் செய்வது.
> "அழகி" என்ற திரைப்படம்
> பற்றி ஒரு விளம்பரம் பார்த்தேன்; படித்தேன்; என் உள்ளம் மகிழ்வுற்றது.
>
> அதில் "கதை, திரைக்கதை, உரையாடல், ஒளிஓவியம், நெறியாள்கை - தங்கர்பச்சான் "
என்று
> எழுதியிருந்தது.
>
> இந்த "உரையாடல்" என்ற சொல்லை எத்தனை பேர் திரைப்படத்துறையில்
>பயன்படுத்திருக்கிறார்கள்?
இப்படிக் கூட்டுத் தொடர்களைப் புழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாது.
உரையாடல் என்றால் பொருட்சிறப்பே இல்லை.
மேலே விரித்தவாறு வசனம் பழஞ்செந்தமிழ்.
நாம் இதுபோலும் வேர்களைத் தொலைத்துவிட்டுப் பின்னர் வடமொழியென்று
மலங்குகிறோம்.
விலாசம் என்பது ஒரு நல்ல சான்று.
வடமொழி அகராதி வி + லஸ் (= ஒளிறு) என்று பிறப்புக் காட்டும்.
ஆனால் தமிழில் விலாசம் என்பதற்குள்ள பொருள் வழக்கங்கள் பல
வடமொழியில் கிடையாது.
வில் = ஒளிறுதல், மின்னுதல் ("டாலடித்தல்").
"பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட"
கல் > கலாபம்;
தட (வளைவு) > தடாகம்; குளம், குட்டை, குடம், கூடு, குடை எல்லாம் வளைவு என்று
பொருள்தான்.
தட்டு > தடாரி, தடாரம் (தாளக் கருவி);
பர் > பராய் > பலாசு> பலாசம் = முருக்க மரம்