From perichandra@... Sun Jan 13 08:35:46 2002
Return-Path:
X-Sender: perichandra@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 16:35:45 -0000
Received: (qmail 8849 invoked from network); 13 Jan 2002 16:35:45 -0000
Received: from unknown (216.115.97.172) by m3.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 16:35:45 -0000
Received: from unknown (HELO n29.groups.yahoo.com) (216.115.96.79) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 16:35:45 -0000
Received: from [216.115.96.130] by n29.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 16:35:45 -0000
Date: Sun, 13 Jan 2002 16:35:43 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: azhagi
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 4022
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "perichandra"
X-Originating-IP: 66.56.76.69
X-Yahoo-Group-Post: member; u=3157716
X-Yahoo-Profile: perichandra
X-Yahoo-Message-Num: 14731

--- In agathiyar@y..., "perichandra" wrote:
> --- In agathiyar@y..., Krishnan Ramasamy wrote:
> > அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
> >
> > நல்ல தமிழ் எழுதக் கூடியவர்களே "வசனி"த்துக் கொண்டிருக்கும் இந்த நாளில்,
>
> அன்புள்ள இராம.கி.
> மங்கலம் பொங்க வாழ்த்துகள் !
>
>...
> மேலே விரித்தவாறு வசனம் பழஞ்செந்தமிழ்.
> நாம் இதுபோலும் வேர்களைத் தொலைத்துவிட்டுப் பின்னர் வடமொழியென்று
> மலங்குகிறோம்.
>
> விலாசம் என்பது ஒரு நல்ல சான்று.
>
...
>
> அன்புடன்
> பெ.சந்திரசேகரன்.

தமிழர்கள் எதற்கெடுத்தாலும் சுருக்கத்தில்தான் போகிறார்கள்:
யாராவது நம் கூறுகளை நம்மைவிடக் கொஞ்சம் சிறப்பாகக் கொண்டாடினால் அல்லது
தவறாக வழங்கினாலோ அல்லது நம் மரபுக்கொவ்வாத புராணம் திரித்தாலோ
அதைக் கைவிடுவது வழக்கம் நமக்கு.
இப்படித்தான் மூன்றாந்தமிழின் இரண்டு உறுப்புகளான யோகம் + நாட்டியம்,
தமிழிசை, நல்ல புராணங்கள் என்று கைவிட்டுச்
சுருங்குகிறோம்.
இதுபோல் தான் கார்த்திகையை ஒதுக்கிப் பொங்கலை மட்டும் தூக்குவதைச்
சுட்டினேன். இப்படிபோனால் பொங்கலும் மிஞ்சாது என்பதை நாம் நினைக்கவேண்டும்!
ஏனெனில் இது ஒரு தனிச் செயலன்று. அது ஒரு போக்கு:
ஏதாவது குழப்பத்தால் சுருங்கிக்கொண்டே போகும் போக்கு.
சிதைவென்னும் சறுக்கலில் சறுக்கும் போக்கு.
அதைச் சுட்டச் சொற்களுக்கு மீளுவோம்.
சொல்லியலில் நாம் பல அமைப்புகளை வடமொழியென்று மயங்கிக் கைவிடுவதும்
தொழுவாடு...
மேற்காட்டிய விலாசம், தடாரம் போன்ற அமைப்புகள் நல்ல காட்டு.

கலா என்ற பெயர் நாம் வடமொழி கலை என்றால்தான் தமிழுரு என்று பேதுறுவோம்.
ஆனால் பலா, மரா, குரா, நறா, விலா (எலும்பு), தடா (பானை), மிடா (பெரும்பானை),
நிலா ஆகிய அமைப்புகளை ஒப்பிட மறந்து கலா என்ற நல்ல அமைப்பை ஒதுக்கித்
தமிழ்மொழியின் மிளிர்ச்சியை மிடுக்கை ஒலிசார்ந்த பொருட்குறிப்பு என்னும் கருவியை
இழக்கிறோம்.
பாருங்கள் வேர்ச்சொல்லோடு ஆ என்று ஒரே ஓர் எழுத்தை மட்டும் கோத்து எவ்வளவு
சுருக்கான மிடுக்கான பேசப்புழங்க எளிய சொல்லைப் படைத்தனர் பாமரத் தமிழர்!
நாமோ நாலு சொற்களைக்கோத்து நாலுமுழம் நீட்டி நாலே நாளில் நம் முன்னோர் நினைவைத்
தொடர்ச்சியை நறுக்க நாடுகிறோம்.

சூழல்சார்ந்த பொருட்குறிப்பு ஒலிக்குறிப்பை அடிப்படையாகக் கொண்டது.
எல்லாச் சொற்களும் ஒரே சில வேர்களையோ சொல்லமைப்புகளையோ கொண்டு
இருந்தால் விரைவில் ஒரு சொல்லைக் கேட்டவுடன் பொருட்குறிப்புத் தோன்றாது.
ஆனால் நம் மக்கள் அப்படிச் செய்யவில்லை.

அதை விளக்கப் பாமரர்கள் வெட்சிப்பூவிற்கு இட்ட பெயரைப் பார்ப்போம்:
சேதாரம்:

otl cEtAram cEtAram 03 scarlet ixora
அது வெட்சிதான் என்று நிறுவ:
otl veTci veTci 1. scarlet ixora, m. sh., ixora coccinea ;

சேதாரம் பிறந்ததெப்படி?
சே = சிவப்பு; து என்பது பண்டம், ஒரு குணமுடையது என்பதைச் சுட்டும் விகுதி;
எனவே சே+து = சேது = சிவந்தது; சேதாம்பல் = செவ்வாம்பல்.
ஆரம் என்று ஒலிநிறைவுடைய ஒட்டைச் சேர்த்துப் புதுச்சொல்லை ஆக்கினர் பாமரர்:
சேது + ஆரம் = சேதாரம் = வெட்சிப்பூ.
ஆரம் = என்றால் ஆர்ந்தது = பொருந்தியது, நிறைந்தது, பெரியது என்று பொருள்.
கூடாரம் என்று தெரியும். வீடாரம் என்றும் சொல்லுண்டு!
otl vITAram vITAram 1. camp; 2. house

பாருங்கள் கூடு என்ற சொல்லோடு ஆரம் என்ற இசைவான ஒட்டைச் சேர்த்துப்
பாசறை என்ற உருவத்தைக் கண்முன் நிறுத்துகிறார்கள் பாமரர்கள்!
அதேபோல் வீடாரம் என்று பாசறைக்கு! அதை நாம் இக்காலத்திலும் மாளிகை
அல்லது அரேபியாவின் செட்டா விமான நிலையத்தின் கவினிய பாய்க்கூடார அமைப்பிற்குக்
கூடப் புழங்கலாம்!

அதேபோல் நாடாரம் என்ற சொல் புழங்கலுக்கு ஏவல் காத்துநிற்கிறது.
காடாரம், கானாரம் என்று செடியியலார் ஒரு வகைக் காட்டுக்கு வழங்கலாம்.
இதை விரித்தால் நெஞ்சு வலிக்கும். நாம் கையில் கிட்டிய ஆட்சியில் எவ்வெவ்வளவு
வாய்ப்புகளை நழுவவிட்டோம் என்று.


எனவே நாம் வசனத்தை உரையாடல் என்று ஆராயாமல் மாற்றியதற்குப் போய் மெய்சிலிர்த்துக்
கொண்டு கொண்டாடுவதை விடுத்து
நாள் கிழமை போன்ற ஏற்கனவே இருக்கும் கருத்துகளுக்கு ஏற்கனவே இருக்கும்
தமிழ்ச்சொற்களைப் புழங்குகிறார்களா படத்தில் என்று பார்ப்பதுதான் நெடுநோக்கு.
அடுத்துப் புதிய கருத்துகளைச்சுட்டும் கணினி என்ற சொல்லை அவர் படத்தில் வழங்குகிறார்களா
என்று பார்ப்போம்.

அன்புடன்
பெ.சந்திரசேகரன்.