From ramaninaidu@... Sun Jan 13 08:50:05 2002
Return-Path: X-Sender: ramaninaidu@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 16:50:05 -0000
Received: (qmail 49185 invoked from network); 13 Jan 2002 16:50:05 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 16:50:05 -0000
Received: from unknown (HELO smtp015.mail.yahoo.com) (216.136.173.59) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 16:50:05 -0000
Received: from unknown (HELO ramani) (203.199.234.112) by smtp.mail.vip.sc5.yahoo.com with SMTP; 13 Jan 2002 16:49:19 -0000
Message-ID: <008001c19c52$2717b140$70eac7cb@ramani>
To: , , , , "jaya chitra" , "Veena Gurubatham" , "sur sadhana" , "Haritha Moosani" , "saravanan sulur" , , Subject: thiruppavai 30 tamil
Date: Sun, 13 Jan 2002 22:07:02 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Ramani Naidu" X-Yahoo-Group-Post: member; u=8803348
X-Yahoo-Profile: ramaninaidu
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 14734
திருப்பாவை - நாள் முப்பது - பாடல் முப்பது
வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறை கொண்டவாற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்டெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவரெம்பாவாய்.
திருப்பாவையை நிறைவு செய்யும் பாடலாக அமைந்த முப்பதாம் பாடல் இப்பாடல்களைப் பக்தியோடு பாடுவோர் அடையும்நலன்களைச் சொல்கிறது. இருபத்தொன்பதாம் பாடல் பாவை நோன்பை நிறைவு செய்யும் பாடலாக அமைந்திருக்கிறது என்பதை முன்னர் கண்டோம்.
ஆண்டாள் நாச்சியாரோடு பாடல்களைப் பாடியவருக்கும் பின்னர் இப்பாடல்களைப் பாடும் அனைவருக்கும் திருவருள் கிடைக்கும் என்ற உறுதியோடு பாடல் நிறைவுறுகிறது.
வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சொல்லிப் பாடல் ஆரம்பமாகிறது. இறைவனுக்குச் செய்யும் எப்பிரார்த்தனையும் பிராட்டியாகிய இலக்குமி வழியாகச் செய்யும் போது நிச்சயம் நிறைவேறுகிறது என்பது வை?ணவர்கள் நம்பிக்கை. பாற்கடலை அமிர்தத்துக்காகக் கடைந்த போது தோன்றியவள் இலக்குமி. அதனாலேயே வங்கக் கடல் கடைந்த வைபவம் பாடலில் சிறப்பிக்கப்படுகிறது. மேலும் பாற்கடலைக் கடைவதற்கு வேண்டி வராகமாக நின்றவர் பாவையர் நோன்பைத் தம் பரிசில் கொண்டு நிறைவேற்றத்தான் போகிறார் என்பதற்காகவே வங்கக் கடல் கடைந்த மாதவன் என்று சொல்லிப் பாடல் துவங்குகிறது.
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் எனும் போது திருந்திய வடிவமும் தீர்மானமான பக்தியும் கொண்டவர்கள் என்பதைக்குறித்தார்.
இருபத்தொன்பதாம் பாடலில் குறித்த எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்குமான பறையாக எங்கும் திருவருள் கிடைக்கும் என்று அறுதியிடுகிறது முப்பதாம் பாடல்.
நாச்சியார் தோன்றிய ,வில்லிபுத்தூர்அணிபுதுவை என்று விளக்கம் பெறுகிறது. பெரியாழ்வாரும் நாச்சியாரும் ஆபரணமாகத் தோன்றிய ஊர் என்று கொள்க. அந்தணருக்குத் தாமரை மாலையிட்டுச் சிறப்புச் செய்வதுண்டு. பெரியாழ்வாரை பட்டர்பிரான் என்று சொல்வதற்குக் காரணங்களும் உண்டு.
பல்லாயிரம் அந்தணர்கள் கூடிய சபையில்வேதத்துக்குப் பொருளுரைத்துக் கிழியறுத்தவர் என்பதால் அவர் பட்டர்களுக்குப் பிரான் ஆகிறார். மேலும் தன் மகளை இறைவனுக்கே மணம் செய்து வைத்த பெரும் பெருமைக்குரியவர் என்பதாலும் அவர் பட்டர்களுக்குப் பிரான் ஆகிறார்.
நாச்சியார் தம்மை கோதை என்று பெயரிட்டுக் குறித்துக் கொள்கிறார். வடமொழியில் கோடா என்று குறிப்பதும் தமிழில் கோதை என்று குறிப்பதும் சற்றே வேறுபட்ட பொருளில் என்று கொள்ள வேண்டும். தமிழ்ச்சொல் அழகிய பெண் என்று மட்டுமே பொருள் பெறும். வடமொழிச் சொல்லோ தெய்விகப் பாடல்களைப் பாடியவள் என்று பொருள் பெறுகிறது.
சங்கத் தமிழ் என்பதும் இருவகைப் பொருள் பெறுகிறது. பாண்டிய மன்னர்கள் முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததால் சங்கத் தமிழ். மேலும் சங்கமிருப்பார் போல வந்து தலைப்பெய்த என்ற தொடரில் வரும் கூடி வந்து வணங்கியதைக் குறிப்பதாகவும்கொள்ளலாம்.
ஆழ்வார் இலக்கியத்தில் தம் பெயர் சொல்லிப் பாடலை முடிப்பது ஒரு வழக்கம். நம்மாழ்வார் தம்மைக் குருகூர்ச் சடகோபன்என்பார். அவ்வாறே நீண்ட பாடல் தொடரில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தாம்பாடியதாகக் குறிப்பிடும் ஆழ்வார் அப்பாடல்களைச் சொல்வதால் இறைவன் அருள்கிடைக்கும் என்று உறுதி சொல்வார்கள். நாச்சியாரும் அந்த வழக்கத்தின்படி தம்பெயரைச் சொல்லித் திருப்பாவைப் பாடல் தொடரை முடிக்கிறார். இந்தியக் கலையில் இந்த வழக்கம் முத்ரா எனப்படும். ஓவியரோ சிற்பியோ தம் படைப்பில் தம் பெயரைப் பதித்து வைப்பதும் இவ்வகைத்தே. பெயர் குறிப்பிடாத இடத்தில் தம்மை வெளிப்படுத்தும் ஏதோ ஒருவகைக் குறிப்பை விட்டுச் செல்வதும் உண்டு.
இந்தப் பாடலுடன் திருப்பாவை முப்பது பாடல்களுக்குமான விளக்கவுரை நிறைவு பெறுகிறது. இந்த மாதம் முழுக்கப் பாடல்களையும் விளக்கத்தையும் படித்துப் பார்த்துஉற்சாகம் தந்து வாழ்த்திய உலகத் தமிழ் அன்பர் அனைவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.
கையும் உரையும் கருத்தும் உனக்கே அடிமை
செய்யும்படி நீ திருத்தினாய் - ஐயா
திருவிண்ணகராளா சிந்தனையிலுமெண்ணேன்
பெருவிண்ணகராளும் பேறு.
[Non-text portions of this message have been removed]