From naga ganesan@... Sun Jan 13 09:32:47 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 17:32:46 -0000
Received: (qmail 50750 invoked from network); 13 Jan 2002 17:32:46 -0000
Received: from unknown (216.115.97.167) by m4.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 17:32:46 -0000
Received: from unknown (HELO n16.groups.yahoo.com) (216.115.96.66) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 17:32:46 -0000
Received: from [216.115.96.90] by n16.groups.yahoo.com with NNFMP; 13 Jan 2002 17:31:53 -0000
Date: Sun, 13 Jan 2002 17:32:38 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Maari worship
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5930
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.229.63
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 14739
--- In agathiyar@y..., Shaboo wrote:
--- "era.murugan_achwin" wrote:
>> Does 'Ellammaa' originate in 'ellaiamma'?
>
>இதற்கான விளக்கம் (காலமான) பேராசிரியர். அ.கா.அ அப்துல் சமது
>எழுதிய " இஸ்லாம் தமிழுக்கு வந்த மதமா ? அல்லது சொந்த மதமா ? "
>என்ற கட்டுரையில் படித்ததாக நினைவு ( 6 ஆண்டுகளுக்கு முன்) தேடிப் பார்த்து
>கிடைத்தவுடன் தருகிறேன்.
>=====
>அன்புடன்
<சாபு
அன்புநண்பருக்கு,
வணக்கம். மகமதியருக்கும் மாரியம்மனுக்கும்
ஒரு விசேடத் தொடர்பு என்றுமே உண்டு.
தமிழண்ணல் அவர்களின் கண்ணகி வழிபாட்டு
நோன்பு தொடங்குவது பற்றிய அருமையான
கட்டுரையை அண்மையில் திரு. மணிவண்ணன்
தகுதர எழுதுருவில் தந்திருந்தார். வாசித்தீர்களா?
அதே தமிழண்ணல் அறுபதாம் ஆண்டு விழா மலரில்
மாரியம்மன் வழிபாடு - மகமதிய மக்கள் தொடர்பு
ஒரு கட்டுரை உள்ளது. பேரா. சமது அவர்கள்
கட்டுரையைத் தரவேண்டுகிறேன். படிக்கவேண்டும்.
எங்கள் ஊர் சூலக்கல் மாரியம்மன் கோயில்
கும்பாபிடேகத்தின் போது நான் ஒரு நூலை
வெளியிட்டேன். அதை எப்படிக் கண்டுபிடித்தேன்
தெரியுமா? G. U. போப் அய்யர் அவர்களின்
தமிழ்நூல் பட்டியலை சுமார் 20 ஆண்டு முன்னர்
படித்தபோது தட்டுப்பட்டது. கோயில் தானிகர்,
மேளக்காரர், பண்டாரத்தார் போன்றோரிடம்
விசாரித்தபோது தெரியவே iஇல்லை என்றனர்.
பிறகு லண்டன் பிரிட்டிஷ் ம்யூசியத்தில்
பெரும்பாடுபட்டு iஇந்த நூலைப் பிடித்து
வெளியிட்டேன்.
ஆழியாற்றங்கரையில், சித்தூர் போகும்பாதையில்
அமைந்த அழகிய ஊர் அம்பராம்பாளையம்.
ஆழியாற்றுக்கு ஆம்பராவதி என்றும் பேர்,
எனவே அம்பராம் பாளையம். அங்கு
மறைதிரு. மதார்சா ராவுத்தர் சமாதி உள்ளது.
தாயத்து போன்றன அளிப்பார்கள்.
அவர் சூலக்கல் அம்மனைப் பாடிய நூல்
என்று G. U. போப்பையர் தொகுப்பால் கண்டேன்.
iஇந்த ஊர்களையெல்லாம் நம் நண்பர்
திரு. K. M. சுலைமான் நன்கறிவார்கள்.
அம்பராம்பாளையம் ஜமால்சா ராவுத்தர் குமாரர்
மதார்சா ராவுத்தர் பாடிய
சூலக்கல் மாரியம்மன் அம்மானை
அவையடக்கம்
[,...]
ஆடுமயில் ஏறிவரும் ஐயனையும் போற்றிசெய்தேன்
போற்றுங் கவிவாணர் புலவோர் சமூகத்தில்
கற்றிலா ஏழை சொன்ன கவியிற் குறைபாடு
அனேகம் iஇருந்தாலும் அம்மாள் சரிதமென்று
அருமை பெருமையுடன் அங்கீ கரிப்பார்கள்.
[...]
எங்களூர் ராவுத்தரவர்கள் பாடிய சிறுநூல்களை
நான்பிரதிதேடி அச்சிட்ட திகதி: 29.5.1994
எல்லாம் pdf கோவைகளாக்க வேண்டும்.
TSCII 1.7 எழுதுரு வெளிவரட்டும்.
-----------------------------
வால்டர் 'பேர்செர்விசு (Fairservis) என்னும்
தொல்லியல் நிபுணரின் புத்தகம் படித்துக்
கொண்டிருந்தேன். பேர்செர்விசு சிந்துசமவெளி
நாகரிகம் திரவிடருடையது என்று எழுதியுள்ள
நூல். அவர் பாகித்தானத்தில் பல ஆண்டுகள்
தொல்பொருள் அகழாய்வு நடாத்தியவர்.
சிந்தி மொழியிலிருந்து iஇந்தியா முழுக்க
வழங்கிவரும் பீர் என்ற சொல்மூலம் தெரிவதில்லை
என்று எழுதியிருக்கிறார். ஸூபி குருக்களுக்கு
வழங்கும் பீர் என்னும் சொல் திராவிடச்
சொல்லே என்ற முடிபு எனக்குத் தோன்றுகிறது.
பிராகுயி மொழியில் பிர் என்ற மழைபொழிவதாம்!
பிழிதல்/பொழிதல் என்னும் சொல்லோடு
தொடர்புடையதே பீர் என்னும் சொல்.
சூபிகளுக்கு வழங்கும் சொல் திரவிடச்
சொல்லே. வடநாட்டில் திரவிட மொழிகள்
ஆரிய மொழிகளால் உட்கொள்ளப்பட்டுவிட்டன.
பொழிதல்/பிழிதல்/பிளிறுதல் போன்றன பிர்/பீர் என்று
பிராகுவியில் iஇன்றும் வழங்கிவருகிறது.
iஇதுவே சூபிகளுக்கு வழங்கும் பீர் என்னும்
அடைச்சொல் என்று நான் கருதுகிறேன்.
அருள் என்ற சொல்லுடன் பீர் என்பதன்
பொருளைச் சிந்திக்கலாம். அருள் அருவி,
ஆர்வம் போன்றவற்றுடன் தொடர்புற்றது.
அருள் பீர் (பிழி/பொழி) iஇரண்டும் ஒருபொருட்பன்மொழி.
மாரியம்மன் வடமொழி மகாபாரதம் முதற்கொண்டு
iஇந்தியாவின் அனேக மாநிலங்களில் விளங்கி
வருபவள். அவளுடைத் தொடர்புகொண்ட
தேவதாசிகள் வரலாறு நெடியது. மார்
என்பதிலிருந்து பெற்ற பெயர் மாரி ஆகலாம்.
மாதர் கொங்கையில் iஇருக்கும் மாயமந்திர
சக்திகளைத் தமிழரும், பண்டைத் தமிழ் iஇந்திய
iஇலக்கியங்கள் வெகுவாக மதித்தன.
மாரின் ஆற்றலை விளக்கும் மகத்தான
காவியம் தானே சிலப்பதிகாரம்?
மழை பெய்யவோ, படுமழை நிற்கவோ
பெண்டிர் ஊரில் நடுநிசியில் அம்மணமாக
சுற்றுவது 20ஆம் நூற்றாண்டிலும்
சில கிராமங்களில் நிகழ்ந்திருக்கிறது.
பெண் மாருக்கும், வளமை( மழை)க்கும் மாயத்
தொடர்பு உள்ளது சிந்து சமவெளியில் வாழ்ந்த பழந்தமிழரும்
மெசோபொடாமியாவிலும் நம்பினர். iஇம்மக்கள்
வணிகத் தொடர்பால் பிணைக்கப்பட்டவர்கள்.
வணிகன், பணம் என்னும் சொற்கள் தமிழே,
அவற்றை iஇருக்கு வேதத்தில் பார்க்கலாம்.
சுமார் 3500 ஆண்டுகளுக்கும்
முற்பட்ட Elam (ஈழம்??!!) நாட்டுப் பெண்தெய்வச்
சிலைகளை அலகிட்ட்டேன். அவை உள்ள சுட்டி:
http://groups.yahoo.com/group/S_India/message/38
http://groups.yahoo.com/group/S_India/message/39
அவற்றைப் பாருங்கள்:
நம் மாரி iஇந்த மெசொபடாமியா பெண்தெய்வம்
போன்றவள் ஆவாள்.
iஇனானா என்னும் சுமேரியத் தெய்வத்தின்
கோயிலில் தேவகணிகை மாதரார் பலர்
iஇருந்து வழிபாடு, நடனம் என்று பற்பல
கலைகளை வளர்த்தனர் என்பது வரலாறு.