From mmanivannan@... Sun Jan 13 15:44:33 2002
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 13 Jan 2002 23:44:24 -0000
Received: (qmail 55597 invoked from network); 13 Jan 2002 23:44:23 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 13 Jan 2002 23:44:23 -0000
Received: from unknown (HELO falcon.prod.itd.earthlink.net) (207.217.120.74) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 13 Jan 2002 23:44:23 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by falcon.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16PuIY-0007YB-00; Sun, 13 Jan 2002 15:44:22 -0800
Message-ID: <003d01c19c8c$7f60f660$0200a8c0@...>
To: ,
References: <005601c19c50$a1abeb80$0200a8c0@...>
Subject: Re: A viewer's impressions of "Paanchaali Sabatham" Drama...
Date: Sun, 13 Jan 2002 15:46:16 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
Reply-To: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 14744

சான் ஃபிரான்சிஸ்கோப் பகுதி வானொலியில் "குறள் நேரம்" இவழங்கும்
திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பாராட்டுரை.

------
இன்றய பொங்கல் முத்தமிழ் விழா முடிந்து வந்த கையோடு இந்த பாராட்டுக்
கடிதத்தையும் அனுப்பிவிடவேண்டுமென்று உடனடியாக எழுதியனுப்புகிறேன்.

இயல், இசை, நாடகம் இத்தோடு இறுதியில் மெல்லிசையையும் சேர்த்து செவிக்கும்
கண்ணுக்கும் பெருவிருந்து அளித்த தமிழ் மன்றத்தின் முயற்சியைப் பாராட்டியேயாக
வேண்டும்.

பட்டிமன்றத்தில் ஓரிருவரது வாதங்கள் சுவாரசியமாக இருந்தது என்றாலும்,
காரசாரமான வாத எதிர்வாதங்கள் இடம்பெறவில்லை. (நேரக்குறைவு ஒரு பெரிய
காரணமாக இருந்திருக்கலாம்). ஆனால் இடையிடையே இடம்பெற்ற நடுவரது
விமரிசனங்கள் நன்றாக அமைந்திருந்தன.

நாடகம்; இதற்காக 30க்கும் மேற்பட்ட அன்பர்கள் மெனக்கெட்டு செய்த முயற்சிகள்
வீண்போகவில்லை. இன்னார்தான் சிறப்பாகச் செய்தார் எனக் குறிப்பிட்டுச் சொல்ல
இயலாத அளவுக்கு, ஒரு நல்ல கூட்டு முயற்சி. முதல் முயற்சியே இத்தனை நன்றாக
இருந்தது என்றால், இது போன்ற இனி அமையும் நிகழ்சிகள் இன்னும் அருமையாக
இருக்கும். பாரதியின் பாடல் வரிகளையே பாத்திரங்களின் வசனமாக்கி, நல்ல
தமிழில் அதனை வெளிக்கொணர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். ஒரே
ஒரு முறை வசனம் பேசிய துச்சாதனன், விகர்ணன் போன்ற பாத்திரங்களாகட்டும்,
முழுதும் பேசிய சுயோதனன், சகுனி, யுதிட்டிரன், பாஞ்சாலி ஆகியோராகட்டும்,
அனைவரும் சிறிது கூட பிழையின்றி பேசியது பாராட்டுக்குறியது. சகுனியாகத்
தெரிவு செய்யப்பட்டவர், அதற்கு கனகச்சிதமானப் பொருத்தம்! துரியோதனனின்
வசன வெளிபாடுகள் அருமை. மேடையிலும் மற்றும் திரைக்குப் பின்னால் இருந்தும்
இதற்கு துணை புரிந்த அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

மணியன் இராகவன் அவர்களின் பாட்டு மிகமிக அருமை. திருவாசகத்தை அவர்
பாடிய போது, பலரும் மனம் கரைந்திருப்பர் என்பது உறுதி. அவர் புல்லாங்குழலும்
வாசித்து அசத்தி விட்டார். திருப்பாவை அளித்த சுவேதாவும் நன்றாகப் பாடினார்.

அதன் பின் நடந்த மெல்லிசை நிகழ்ச்சியிலும் பலரது திறமை மிளிர்ந்தது. "பாடாத
பாட்டெல்லாம்" என்ற PB.ஸ்ரீனிவாசின் பாடல் பாடிய முரளி அவர்கள்தான் என்னை
மிகவும் கவர்ந்தவர். ( நான் கடைசி வரை இருக்க இயலவில்லை)

குறை என்று சொல்வதானால், அவ்வப்போது தகராறு செய்த ஒலிவாங்கியை
மட்டுமே குறை சொல்ல முடியும்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்புடன்,
பா. இராதாகிருஷ்ணன்
------