From harikris@... Thu Jan 24 04:48:08 2002
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 12:48:07 -0000
Received: (qmail 92954 invoked from network); 24 Jan 2002 12:48:07 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 12:48:07 -0000
Received: from unknown (HELO smtp01.vsnl.net) (203.197.12.7) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 12:48:06 -0000
Received: from harikris ([203.199.240.182]) by smtp01.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GQG0W103.DA3 for ; Thu, 24 Jan 2002 18:18:01 +0530
Message-ID: <004201c1a4d5$717ea8c0$65f0c7cb@...>
To: References: <3.0.3.32.20020124131624.00756a04@...>
Subject: Re: [agathiyar] Re: Arjunanin peyargal
Date: Thu, 24 Jan 2002 18:17:39 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15151
தலைவரே,
ம்ஹூம். இது கட்டுப்படியாகாது. கொஞ்ச நேரம் விட்டால் பெயர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போகும். இப்போதுதான் எல்லேயின் எல்லைப்படி குசேலருடைய புத்திர ரத்தினங்களின் எண்ணிக்கையைத் தொட்டிருக்கிறது. பேசாமல் மஹாபாரதத்தில் அந்தக் குறிப்பிட்ட இடத்தையே (சோம்பேறித்தனத்தை மூட்டை கட்டிவிட்டு) எடுத்தேன். இதோ -
"இந்த வார்த்தைகளைக் கேட்டு உத்தரன் வியப்படைந்தான். அவன் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ச்சி அடைந்தன. இமை கொட்டாமல் அர்ச்சுனனையே பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் மெதுவாக 'அர்சுனனுக்குப் பத்துப் பெயர்கள் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றை முறைப்படிச் சொன்னால் நான் நம்புவேன்,' என்று கூறினான். அந்த நேரத்திலும் அவன் மனத்தை விட்டுச் சந்தேகம் நீங்காமல் இருந்தது.
"உடனே அர்ச்சுனன், 'விராட குமாரா! என்னுடைய பத்துப் பெயர்களையும் கூறுகின்றேன். கேள். அர்ச்சுனன், பல்குணன், ஜிஷ்ணு, கிரீடி, சுவேதவாகனன், பீபத்சு, விஜயன், பார்த்தன், சவ்யசாசி, தனஞ்சயன் என்பவையே அவைகள். இவை யாவும் எனக்கு இந்திரனால் சூட்டப்பட்டவை' என்றான்.' (மஹாபாரத மொழிபெயர்ப்பு, வர்த்தமானன் வெளியீடு.)
ஜிஷ்ணு என்ற பெயருக்கு விளக்கமாக 'தனக்கும் தன் சகோதரர்களுக்கும் இழுக்கு நேராமல் போரில் ஈடுபடுபவன்' என்றிருக்கிறது. விஷ்ணுவின் பெயர்களில் ஒன்று? பாரதியின் வடமொழிப் பாடலில் இந்தப் பெயர் வருகிறது -
கீதையில் கண்ணன் அர்ஜுனனை, குடாகேசா, பாரத, பரந்தப, கெளந்தேயா என்றெல்லாம் அழைக்கிறான். அந்தப் பெயர்களைத் தொகுத்தால் (நம்பப்படுகின்ற) 108 என்ற எண்ணிக்கை கிடைக்குமோ என்னவோ? இன்னொரு முயற்சி. அதையும் செய்துவிட்டால் போகிறது. (பாரதியை மிகவும்ஈர்த்த பாத்திரம் அர்ஜுனன். மொத்தம்28 இடங்களில் - பாஞ்சாலி சபதம் நீங்கலாக - அர்ஜுனனைப் பற்றிய குறிப்பு பாரதி பாடல்களில் வருகிறது. இளமை, வீரம், அறிவுக் கூர்மை என்று எதை நினைத்தாலும் பாரதிக்கு அர்ஜுனன் நினைவு வந்துவிடும். "விளையு மாண்பு யாவையும் பார்த்தன்போல் விழியினால் விளக்குவாய் வாவாவா" என்பது போல. இன்னொரு முறை கவனமாக எண்ணி உறுதிப்படுத்துகிறேன்.)
எல்லே சுவாமின்! அந்த 27 எந்த இடத்தில்கிடைத்தது என்று நினைவிருக்கிறதா?
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, January 24, 2002 10:46 AM
Subject: Re: [agathiyar] Re: Arjunanin peyargal matrum 'Eyan' (was) Is Tamil a National language of India?