From naga ganesan@... Thu Jan 24 05:13:46 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 13:13:46 -0000
Received: (qmail 20241 invoked from network); 24 Jan 2002 13:13:45 -0000
Received: from unknown (216.115.97.167) by m11.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 13:13:45 -0000
Received: from unknown (HELO n20.groups.yahoo.com) (216.115.96.70) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 13:13:45 -0000
Received: from [216.115.96.155] by n20.groups.yahoo.com with NNFMP; 24 Jan 2002 13:03:37 -0000
Date: Thu, 24 Jan 2002 13:13:44 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Thamizhil KaLiDasar PadaippukaL
Message-ID: In-Reply-To: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2048
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.27.71
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15153
--- In agathiyar@y..., "nchokkan" wrote:
> அன்பு அகத்தியர்களுக்கு,
>
> கவி காளிதாசரின் படைப்புகள் எவை எவை தமிழாக்கப்பட்டிருக்கின்றன என்று அறி
> யலாமா ?
>
> சமீபத்தில் அவருடைய சாகுந்தலம் (சி. ஏ. பாலன் மொழிபெயர்ப்பு), அஜவிலாபம்
> (வடுவூர் நாராயணன் மொழிபெயர்ப்பு) ஆகிய இரண்டு நூல்களையும் படித்தேன், பிரம்மி
> ப்பூட்டும் படைப்புகள் ! அற்புதமான வர்ணனைகளும், மிகச்சிறந்த உவமைகளும்,
> உணர்ச்சிமயமான பாத்திரப்படைப்புகளும் நினைத்து நினைத்து மகிழத்தக்கவை !
>
> அவருடைய மற்ற நூல்களையும் வாசிக்க விரும்புகிறேன் தமிழில் அல்லது ஆங்கிலத்தி
> ல் அவை கிடைக்கும் விபரம் தெரிவித்தால் மகிழ்வேன்,
>
நண்பருக்கு,
வணக்கம்.
தமிழில் பன்னெடுங்காலமாக, காளிதாசன் படைப்புகள்
வந்திருக்கின்றன.
ஈழநாட்டுமன்னர் அரசகேசரி 17ஆம் நூற்றாண்டில் 2000+ விருத்தங்களில்
ரகுவம்மிசம் பாடியுள்ளார். இங்கொன்று கவனிக்கவேண்டும்:
ரகுவம்சம் பாரத தேசத்தைப் பிரதட்சணமாய் ராமன் வலம் வருவதுபோல
அமைத்துப் பாடியது. பழைய பாண்டிய மன்னர்கள் சிங்களரை
வென்ற பின்னர் தம்மை இரண்டாம் ராமன் என்று கல்வெட்டுகளில் குறிப்பர்.
ஹிந்து ராஜ்ஜியம் நிறுவியபின்னர், யாழ்ப்பாணத்தில்
ரகுவம்சம் பாடினமை பொருத்தமே.
மறைமலையடிகள் சாகுந்தலத்தை மொழிபெயர்த்தார்.
அவரது ஒரு மகளுக்கு சகுந்தலை என்ற பெயர் (நினைவிலிருந்து).
கொங்குநாட்டில் உருவான சீவக சிந்தாமணியின்
அழகால் கட்டுண்டு, ஒரு மகளுக்குச் சிந்தாமணி என்று
பெயர் இட்டதாக அவரே எழுதியிருக்கிறார்.
லிப்கோ கம்பெனியில் சில காளிதாச நாடகங்களை
வடமொழி மூலத்துடன் அச்சிட்டுள்ளனர். ஸ்ரீரங்கம்
வாணி பிரஸ்ஸிலும் அச்சிட்டனர்.
சரியாக அறிய, முன்னர் சென்னைப் பல்கலையில்
சமற்கிருதப் பேரா. வே. ராகவன் எழுதிய கட்டுரையில்
பார்க்கணும். தமிழுக்கு உ. வே. சா. போல, வடமொழிக்கு
திருவாரூர் வே. ரா. அவர் பயிற்றிய வெள்ளைக்காரர் அனேகர்.
அவர் மகன் பெயர் காளிதாஸ். மகள் நந்தினி ரமணி.
ஹரி குறிப்பிட்ட ம்யூசிக் அகாதமி நிகழ்ச்சி ஒன்றில்
நந்தினி செக்ரட்டரி என்றிருந்தது.
பாலசரஸ்வதியும் குடும்பத்தாரும் வெளியில் புகழ்பெறக்
காரணகர்த்தா வே. ராகவன். அவர்கள் எல்லோரும் ஆரூரார்.