From cbose@... Thu Jan 24 08:34:46 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 16:34:46 -0000
Received: (qmail 98439 invoked from network); 24 Jan 2002 16:34:46 -0000
Received: from unknown (216.115.97.172) by m12.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 16:34:46 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 16:34:46 -0000
Received: from vsnl (unknown [203.199.230.232]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id CECE7232 for ; Thu, 24 Jan 2002 22:09:19 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020123195736.0079ad30@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Wed, 23 Jan 2002 19:57:36 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: ThirumOhUr - and Narasingam.
In-Reply-To: <3.0.3.32.20020123115647.00773fe4@...>
References: <001401c1a3b3$a4edb5c0$a1bd1b42@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15164

அன்புள்ள டாக்டர் ஜேபி,

இந்த திருமோகூர் என்பதுவும் இன்னொன்றுநினைவிற்கு வருகிறது. யானைமலை ஒத்தக்கடையில் இருந்து
கிழக்காகச் செல்லும் சாலையில் சென்றால் திருமோகூர் வருகிறது. மேற்காகச் செல்லும் சாலையில் சென்றால்
நரசிங்கம் என்று ஒரு கிராமம் உள்ளது. செல்லும் வழியில் தான் ஆனைமலை என்று அழைக்கப்படும் மலை
குறுக்கிடுகிறது. மலையின் கிழக்குப் பக்கத்திலிருந்து மேற்குப் பக்கம் செல்கிறோம். அந்த மேற்குப்
பகுதியில் அருமையான கோவில், குளம் எல்லாம் உள்ளன. அந்த கோவில் மலையைக் குடைந்து கட்டி
இருக்கிறார்கள். மலையைக் குடையும்போதே அதில் தூண், கர்ப்ப கிரகம், சிலை, பீடம் ஆகியவைகள்
அமையும்படி செதுக்கி உள்ளனர். அதாவது சிலை என்றும் படிகள் என்றும் பீடம் என்றும் தனியே செதுக்கி
வைக்காமல் அப்படியே பாறையைச் செதுக்கும்போதே அவற்றை உருவாக்கி உள்ளனர்.

இந்த மலையின் மேலேறிச் சென்றால் நடு மலையில் சமணர்கள் தங்கி இருந்த இடம் குகையாக உள்ளது. அங்கு
அவர்கள் படுத்து உறங்க அவர்கள் செதுக்கிய வழுவழுப்பான படுக்கைகள் நான்கு உள்ளன. பழைய தமிழ் மொழி
அல்லது வேறு மொழியில் எழுத்துக்களில்செய்திகள் உள்ளன.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை.

At 11:56 AM 1/23/02 +0800, you wrote:
>At 06:14 PM 1/22/02 -0800, you wrote:
>><ஜேபி சொன்னார்?
>><வெட்டு>
>>அந்தக்கோயிலை அங்கிருந்து 20 மைல்களுக்கு அப்பால்
>>உள்ள ஒரு குன்றிலிருந்து அடியோடு பெயர்த்து எடுத்துக்கொண்டு
>>வந்து திருமால் கோயிலுக்குள் வைத்துக்கட்டியிருக்கிறார்கள். ஏற்கனவே
>>அக்கு இருந்த கோயில். அதன் அடித்தள அடையாளங்கள் இருக்கின்றன.
>>
>>ஏன் அப்படிச் செய்தார்கள் என்பதற்கு உரிய காரணமும்
>>அக்கோயிலின் இன்னொரு பகுதியில்தான் இருக்கின்றது(ன).
>>அந்தக் காரணமும் திருக்கோஷ்டியூர் மர்மங்களில் இன்னொன்றாக