From aysh@... Thu Jan 24 08:57:43 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 24 Jan 2002 16:57:43 -0000
Received: (qmail 61716 invoked from network); 24 Jan 2002 16:57:42 -0000
Received: from unknown (216.115.97.167) by m10.grp.snv.yahoo.com with QMQP; 24 Jan 2002 16:57:42 -0000
Received: from unknown (HELO webmail2.maa.sify.net) (202.144.76.18) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 24 Jan 2002 16:57:41 -0000
Received: (qmail 14146 invoked from network); 24 Jan 2002 22:15:31 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.16) by 202.144.76.18 with SMTP; 24 Jan 2002 22:15:31 +0530
To: Subject: RE: [agathiyar] Re: titles formed from songs
Date: Thu, 24 Jan 2002 22:31:06 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.6.32.20020124132843.0079ad30@...>
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15167
எழுதி முடித்த கதைக்குப் பெயர் வைப்பது ஒரு சந்தோஷமான விஷயம்.
(சிலர் பெயர் வைத்துவிட்டு எழுத ஆரம்பிப்பார்கள்).
என் கதைகளுக்குச் சுருக்கமான பெயர்களேவைப்பது வழக்கம்.
வினைத்தொகை (ஊறுகாய்க் கம்பெனியில் வேலை பார்க்கும் பையன் பற்றியது),
ஆழ்வார் (பழைய நினைவுகளில் ஆழ்ந்து போன கோர்ட் ரிட்டையர்ட் அமீனா அய்யங்கார் )
சரசு (ஜமீந்தாருக்கு வைப்பாட்டியான பெண்) போல.
சமீபகாலமாக பழைய மோஸ்தாரில் 'அண்ணன் அண்ணி கதை', 'கணக்கன் கதை',
'அரண்மனைக் கதை' என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஜெயகாந்தன் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலைத் தினமணி கதிரில்
எழுத ஆரம்பித்தபோது அதற்குப் பெயர் 'காலங்கள் மாறும்'. திடீரென்று வேறு ஏதோ
கதைக்கு இந்தப் பெயரை வைத்துவிட்டு, அப்புறம் இதற்குத்தான் இன்னும் பொருத்தம்
என்று மாற்றினார்.
ஒரு சுவாரசியமான விஷயம் - புகழ் பெற்ற, பெறப் போகும் எல்லா எழுத்தாளர்களுமே
'வீடு' அல்லது 'மனை' என்று ஒரு கதை எழுதியிருக்கிறார்கள்.
சிறப்புப் பெற்ற இலக்கியங்களில் உள்ள முத்திரை பெற்ற வாசகங்களையும் மக்கள் மனதில் இடம் பிடித்த
பாடல் வரிகளையும் இலக்கியப் படைப்புகளுக்குத் தலைப்புகளாக வைப்பதுவும் ஒருஇலக்கிய மரபுதான்.
[Non-text portions of this message have been removed]