From arull@... Fri Jan 25 07:21:54 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 25 Jan 2002 15:21:52 -0000
Received: (qmail 94887 invoked from network); 25 Jan 2002 15:21:52 -0000
Received: from unknown (216.115.97.172) by m10.grp.snv.yahoo.com with QMQP; 25 Jan 2002 15:21:52 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 25 Jan 2002 15:21:52 -0000
Received: from tm.net.my (sja-115-35.tm.net.my [203.106.115.35]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQI00I5B2NPPR@...> for agathiyar@yahoogroups.com; Fri, 25 Jan 2002 23:21:51 +0800 (SGT)
Date: Fri, 25 Jan 2002 23:21:33 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C5177FD.5B04D549@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15193
திருச்சிற்றம்பலம்
திருமுறைத்தியானம்
ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்
ஜனவரி 25.
திருநாவுக்கரசர் சுவேதாரண்யேஸ்வரர்-
பிரமவித்யாநாயகி
திருவென்காடு "வேதப்பொருளே!வெண்காட!போற்றி"
ஊன்நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே
வான்நோக்கும் வழியாவது நினைமினோ
தான்நோக்கும் தன் அடியவர் நாவினில்
தேன்நோக்கும் திருவெண்காடு அடை நெஞ்சே.
நெஞ்சமே! உலகியலில் கிடைக்கப் பெறும் நிலையற்ற
இன்பத்தை அடையவேண்டி, அதற்காகப் பல வழிகளிலும்
உழன்று அலையாமல், வீடுபேற்றை அடையத்தக்க வழிகளை
நினைந்து, அதை அடைவதற்கான நற்செயல்களில் உன்னை
ஈடுபடுத்திக் கொள்வாயாக!
வழிபடும் அடியார்களின் நாவில் தேனாய் இனிக்கும்
தன்மையனான சுவேதவனநாதரை அடைக்கலம் புகுவ
தொன்றே ஆன்மாவுக்கு உய்வாகும்.
திருச்சிற்றம்பலம்
ஓதுவார்
பினாங்கு.