From arull@... Fri Jan 25 16:19:56 2002
Return-Path: X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 00:19:56 -0000
Received: (qmail 99212 invoked from network); 26 Jan 2002 00:19:55 -0000
Received: from unknown (216.115.97.167) by m12.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 00:19:55 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 00:19:55 -0000
Received: from tm.net.my (sja-179-27.tm.net.my [202.188.179.27]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQI00JD6RL5DD@...> for agathiyar@yahoogroups.com; Sat, 26 Jan 2002 08:19:54 +0800 (SGT)
Date: Sat, 26 Jan 2002 08:20:08 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com" Message-id: <3C51F638.F8550304@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார் X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15201
திருச்சிற்றம்பலம்
ஜனவரி 26
சுந்தரர் - திருவெண்காடு
சுவேதாரண்யேஸ்வரர் - பிரமவித்யாநாயகி
"வெண்காட்டில் மேவுகின்ற மெய்ப்பொருளே போற்றி"
படங்கொள் நாகம் சென்னி சேர்த்திப்பாய் புலித்தோல் அரையில் வீக்கி
அடங்கார் ஊர் எரியச்சீறி அன்று மூவர்க்கு அருள் புரிந்தீர்
மடங்கலானைச் செற்று உகந்தீர், மனைகள்தோறும் தலை கையேந்தி
விடங்கராகித் திரிவது என்னே! வேலைசூழ் வெண்காடனீரே.
திருவெண்காட்டுத் தலத்தில் வீற்றிருக்கும் பெருமானே!
படமெடுத்தாடும் பாம்பையணிந்து, புலித் தோலை
உடுத்திக் கொண்ட பிரானே! திரிபுராதிகளை அழித்து அருள்
செய்த முதல்வனே! பெருங்கருணையாளனாகிய நீவிர்
கபாலத்தைக் கரங்களில் ஏந்தி வீடுகள் தோறும் திருவடி நோவ
நடந்து (பிட்சாடனராகி) வந்து பலி ஏற்றதுதான் யாது
காரணமோ? அறியேன்.
உன் கருணைத் திறத்தின் மேன்மையை எளியேனுக்கு
உணர்த்தியருள்வீராக!