From eramurug@... Sat Jan 26 03:02:40 2002
Return-Path: X-Sender: eramurug@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 11:02:40 -0000
Received: (qmail 82923 invoked from network); 26 Jan 2002 11:02:39 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 11:02:39 -0000
Received: from unknown (HELO web14804.mail.yahoo.com) (216.136.224.220) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 11:02:39 -0000
Message-ID: <20020126110239.2443.qmail@...>
Received: from [210.214.131.176] by web14804.mail.yahoo.com via HTTP; Sat, 26 Jan 2002 03:02:39 PST
Date: Sat, 26 Jan 2002 03:02:39 -0800 (PST)
Subject: kamil Zvelebil
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <20020126075815.79367.qmail@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=72502673
X-Yahoo-Profile: eramurug
X-Yahoo-Message-Num: 15214
கமில் ஸ்வெலபில் பற்றிய மடல்களைப் படித்துக் கொண்டிருக்கும்போது, அவர்
சரஸ்வதி பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளையும், அவரை அண்மையில்
மறைந்த தோழர் ரகுநாதன் பேட்டி கண்டதையும் படிக்க வாய்ப்புக் கிட்டியது.
கமில் எழுதிய 'தமிழின் வட்டார மொழிகள்' கட்டுரையிலிருந்து :
('சரஸ்வதி' - ஜனவரி 1952 இதழ்)
1) தமிழ்ச் சமூகத்தின் மிக முற்பட்ட வரலாற்றுக் காலத்தில் அதாவது
பழந்தமிழ்க் காலம் என்று நாம் குறிப்பிடக் கூடிய காலத்தில், அனேகமாக
வரையறுக்கப் பட்ட பல (பதின் மூன்று?) சிறு பிரதேசங்களாகத் தமிழ்ச்
சமூகம் பிரிவுண்டு கிடந்தது. இச்சிறு பிரதேசங்களில் வேறு வேறு பிரதேச
மொழிகள் பேசப்பட்டன.
2) மதுரையை மையமாகக் கொண்டு இந்த மிகப் பழங்காலத்திலேயே பாண்டிய
நாட்டில் பேசப்பட்ட மொழியை அடிப்படையாகக் கொண்டு ஒரு செப்பமான
மொழி உருவாகி வந்தது. இதன் கட்டுத் திட்டங்கள், இடைக்கால
உரையாசிரியர்கள் காலத்திலிருந்தே சங்கம் என்று அழைக்கப்பட்ட (கூட்டம்,
அவை, மதச் சங்கம், கல்லூரி என்று பொருள்படும் சொல்லால் குறிக்கப்பட்ட)
ஒரு இலக்கிய, கலாசார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டன.
3) அது நிலைத்த 'இலக்கிய' மொழியாகச் செந்தமிழ் என்ற நிலையை
அடைந்த பிறகு மக்களால் பேசப்படவில்லை. அது இலக்கியத்துக்கே உரிய
மொழியாகி விட்டது.
4) சில ஜாதியினர் பேசும் தமிழ் மொழிவகை அந்தச் சாதிக்கே
உரியதாக இருக்கிறது. அந்த மொழி பண்டைய மொழி என்று
கருதப்படுவதற்குரிய தன்மைகள் சிலவற்றைக் காப்பாற்றி வருகிறது. ஒருவேளை
இது சில குடிகளின் (tribes) மொழி வழக்கத்தின் மிச்சமாக இருக்கலாம்.
கமிலை ரகுநாதன் கண்ட நீண்ட பேட்டியிலிருந்து ('சரஸ்வதி' - ஏப்ரல்
1958)
1) தமிழும் சமஸ்கிருதமும் பரஸ்பரம் ஒன்றால் ஒன்று வளம் அடைந்துள்ளன.
தமிழிலிருந்து சமஸ்கிருதம் ஏராளமாகக் கடன் வாங்கி இருக்கிறது. அதே
போல் சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் மொழியும் கடன் பெற்றிருக்கிறது.
2) இரண்டு மொழிகளும் ஒருமித்த பண்பாடு உடையவை. ஒரே கலாசாரத்தைப்
பிரதிபலிக்கின்றன. அழகியல் தத்துவம் இரண்டுக்கும் பொது.
'தமிழில் முதல் நாவல்' என்ற கமிலின் கட்டுரையிலிருந்து - 'சரஸ்வதி'
ஜனவரி 1959
முதன் முதலாகத் தோன்றிய தமிழ் நாவல் 'கமலாம்பாள் சரித்திரம்'
வெளிவந்து அறுபது ஆண்டுகளுக்கு மேலாகிறது. இந்த நாவலின் ஆசிரியரான
திரு.ராஜமய்யர் தான் உண்மையிலேயே தமிழில் சிறந்த நாவல்
இலக்கியத்துக்கு வித்திட்டவர் ஆவார். பிரதாப முதலியார் சரித்திரம் என்ற
பெயரில் 1879-ல் வெளிவந்த சில அசட்டுக் கதைகளின் தொகுப்பைச்
சரியான நாவல் என்ற கணக்கில் சேர்த்துக் கொள்ள முடியாது.
----------------------------------------
தமிழ்ச் சூழலில் இப்படித் துணிச்சலாகக் கருத்துக்களைக் கூற
செக்கோஸ்லோவேகியரான கமில் ஸ்வலபில் ஆகவோ, ஜப்பானியரான
நொபொரு கரோஷிமாவாகவோ (சோழர் காலத்துச் சமூகச் சூழல், நில
மானியம் பற்றிய ஆய்வுகள்) இருப்பது முக்கியம். இவர்களின் கருத்துக்கள்
விவாதத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும் முன் யாரும் இவர்களின் மரபணுக்களில்
கைபர் கணவாயின் வரைபடம் பதிந்திருக்கிறதா என்று தேட மாட்டார்கள்.
அன்புடன்,
இரா.முருகன்
__________________________________________________
Do You Yahoo!?
Great stuff seeking new owners in Yahoo! Auctions!
http://auctions.yahoo.com