From naga ganesan@... Sat Jan 26 06:57:41 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 14:57:41 -0000
Received: (qmail 17233 invoked from network); 26 Jan 2002 14:57:41 -0000
Received: from unknown (216.115.97.172) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 14:57:41 -0000
Received: from unknown (HELO n26.groups.yahoo.com) (216.115.96.76) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 14:57:40 -0000
Received: from [216.115.96.45] by n26.groups.yahoo.com with NNFMP; 26 Jan 2002 14:45:41 -0000
Date: Sat, 26 Jan 2002 14:57:39 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Vijaya VElAyudham - Re: [agathiyar] Re: Book buying habit
Message-ID:
In-Reply-To: <3.0.6.32.20020125115040.0079ca10@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2571
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.229.16
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15220

--- In agathiyar@y..., "Dr.P.Chandra Bose" wrote:
> விஷயத்துக்கு வாங்க. கோவணம் தமிழ்ச் சொல்லா?

கோவணம்/கோமணம் தமிழ்ச் சொல்லே. இiது பற்றிய கட்டுரையைப்
பின்னர் தருகிறேன். இiதிலிருந்து வடமொழி ஆக்கிக்கொண்டது
கௌபீனம்.

தலைவிதிவசம் - 1) தலைவிதி வசம் 2) தலைவி திவசம்
எங்கோமணம் வீசுது: 1) எங்கோ மணம் வீசுது 2) எங்கோமணம் வீசுது
iஇந்த உதாரணங்கள் பழைய தமிழ் இiலக்கணங்களில் ஆளப்பட்டுள்ளன.

-------------------------------------------------

சொந்தச் சேதி:

சாது சாமி சொல்லி என் தாத்தா-பாட்டி பழனி மலையில்
18ஆம்படி சேரவினாயகர் கோயிலைப் புதுப்பித்தார்கள் (1930களில்)
சேர ராசா கட்டியது பழனி முருகன் ஆலயம். அவர் கட்டிய
கணேசர் கோயில் கீலமாக, புதிதாகக் கட்டுதலை விட
இiதைச் சரிசெய்க என்றார், கும்பாபிடேகத்தின் போது
வெளிவந்த மலரை வெளியிடணும். அதில் கவிராட்சச
கு. நடேசனார் பாடிய சாதுசுவாமிகள் நவரத்ன மாலை
அழகானது. கு. நடேசர் மொழிபெயர்த்த சங்கரர் சுலோகங்கள்
அனேகம். முருகன் மீது மயில்விடுதூது பாடினார்
அது திருச்செந்தூர் கோயில் வெளியீடாக
அ. உத்தண்டராமன் IAS வெளியிட்டார்.
கவிராட்சசர் என்ற பெயர் கச்சியப்பமுனிவருக்கு
வழங்கிற்று. கடைசி காலத்தில் கொங்குநாட்டில்
வாழ்ந்து பேரூர்ப்புராணம் பாடியளித்தவர்,

தமிழில் இiரு மயில்விடுதூது உண்டு. ஒன்று மறைந்துவிட்டதோ
என்று அஞ்சுகிறேன். இiப்போது புகழாய் விளங்கும்
கந்தசஷ்டி கவச ஆசிரியர் தேவராயசாமியின்
பாட்டனார் மடவிளாகம் தே. லட்சுமண பாரதி
பாடிய சிவமலை மயில்விடுதூது அழகானது என்று
கேள்விப்பட்டிருக்கிறேன், பார்த்ததில்லை.
மடவிளாகம் இதற்போது பாற்பதி/பாப்பினி
என்று காங்கயம் அருகே வழங்குகிறது.
சிவமலை திருப்புகழ் காண்க.
சிவமலை காங்கேயத்தின் ஒருபகுதி ஆயிற்று.

சாது சுவாமி மடம் பழனி விஞ்ச் ஆபீசுக்கு எதிரே.
சாது சாமி தொண்டை நாட்டார், வள்ளலாரைத் தொடர்ந்து
கொங்குநாட்டில் அன்னதானத்தை பெருவாரியாக
நிருமாணித்தவர். வசதியான குடும்பங்களில்
வருடத்துக்கு இத்தனை மூட்டை என்று அரிசி பெற்று
பழனியில் மதிய சாப்பாடு 1920-30-களிலிருந்து சத்துணவு
வழங்க வைத்தவர். இiன்றும் சாதுசாமிகள்
மடதிலிருந்தே அதிகாலை, பள்ளியறை சாத்த மலையாண்டிக்கு
பூசைச் சாமான்கள் போகும்.

நான் சிறுவனாக இiருந்தகாலத்தில் பார்த்தது:
மலைமேல்
கடைசியாக பள்ளியறை பூசை விமரிசையாக நடக்கும்.
வேடுவனாக முருகன் அலங்காரம். தேனும், வள்ளியின் தேனும் தினைமாவும்
சாது சாமி மடத்தில் இiருந்து படைப்பர். பிறகு
கட்டளைதாரருக்கு காலையில் இiருந்து பழனியாண்டி
கட்டிய கௌபீனம் வழங்குவர். கொங்குநாட்டில்
எல்லா வீட்டுப் பூசையறையில் மலையாண்டி
கோவணம் இiருக்கும். iஇதையே சாண்டோ தேவர் அவர்கள்
வைத்திருந்திருக்கிறார்.

அன்புடன்,
நா. கணேசன்