From aj@... Sat Jan 26 09:17:06 2002
Return-Path:
X-Sender: aj@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 17:17:05 -0000
Received: (qmail 24742 invoked from network); 26 Jan 2002 17:17:05 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 17:17:05 -0000
Received: from unknown (HELO omail.emirates.net.ae) (194.170.163.236) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 17:17:04 -0000
Received: from pmail.emirates.net.ae by omail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with ESMTP id <0GQK00DMW2L5EK@...> for agathiyar@yahoogroups.com; Sat, 26 Jan 2002 21:15:05 +0400 (GST)
Received: from asif ([217.165.121.240]) by pmail.emirates.net.ae (Sun Internet Mail Server sims.4.0.2000.10.12.16.25.p8) with SMTP id <0GQK00EA52NROY@...> for agathiyar@yahoogroups.com; Sat, 26 Jan 2002 21:16:40 +0400 (GST)
Date: Sat, 26 Jan 2002 21:00:45 +0400
Subject: Re: [agathiyar] A Surprise - My New Book
X-Sender: aj@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <1.5.4.32.20020126170045.00690310@...>
MIME-version: 1.0
X-Mailer: Windows Eudora Light Version 1.5.4 (32)
Content-type: text/plain; charset="iso-8859-1"
Content-transfer-encoding: quoted-printable
From: Asif Meeran
X-Yahoo-Group-Post: member; u=31404947
X-Yahoo-Profile: asifmeeran
X-Yahoo-Message-Num: 15228

முருகன் அண்ணாச்சி,

>இதையெல்லாம் தம்பி ஆசிப் சொல்லறதே இல்லையே.. டிவியிலேயா
>வானொலியிலா? ஆசிப் வாப்பா பழைய கிரிக்கெட் வீரரா? ஆசிப்
>எப்படி? அப்புறம் நீங்க?

சிதம்பரத்துல (தில்லை சிதம்பரம் இல்லை சென்னை சிதம்பரம்) டெஸ்டோ
ஒரு நாள் போட்டியோ நடந்தா தமிழில் வர்ணனை தருவது தகப்பனாரின்
பகுதி நேர வேலைகளில் ஒன்று. ;-)

இம்முறையும் வர்ணனை செய்ததாக அறிகிறேன்.
அவர் முன்னாள் ஆட்டக்காரர் இல்லை..சொல்லப் போனால் அவரது
பெயரில் தமிழகத்திற்காக ஆடியவரோடு இவரை நினைத்துக் குழம்பிப்
போனவர்கள் அதிகம். அதுபற்றி என் தகப்பனாரிடம் கேட்டால்," அவருக்குக்
கிரிக்கெட் தெரிந்த அளவுக்குத் தமிழ்தெரியாது.எனக்கு வைஸ் வெர்சா" என்பார்.
ஆட்டக்காரர் இல்லாவிட்டாலும் ஆட்டத்தின் நுணுக்கங்கள் புரிந்தவர்.

நான் கல்லூரியில் ஆஃப் ஸ்பின்னர் என்று பெயர் பண்ணிக் கொண்டு எப்போதாவது
பந்து வீசுவேன்..குருவி உட்கார பனங்காய் விழுந்த மாதிரி 'இவனெல்லாம் பந்து வீசி
நான் விளையாடவா'ன்னு எவனாவது வெறுத்துப் போய் அவுட்டாகிப் போவாங்க.
கேட்டா நான் சரியான் சமயத்துல 'பிரேக்' கொடுத்தென்னு ஒரே பேருதான். ;-)
மூன்றாவது ஆட்டகாரனாக இறங்கி ஒரு ஓரமா பந்தை ராவிக் கொண்டிருப்பதும் உண்டு.
(50 பந்து ஆடி ஐந்து ரன் எடுத்தாலே அதிகம்தான் ;-) இருந்தும் என்னையும் அணியில்
வைத்திருந்தார்கள்.அப்படின்னா அணியோட லட்சணத்தைப் பார்த்துக்கங்கய்யா

அன்புடன்,
ஆசிப் மீரான்


"டமில் ஒழிப்போம்
தமிழ் வளர்ப்போம்"