From arull@... Sat Jan 26 12:24:21 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 26 Jan 2002 20:24:21 -0000
Received: (qmail 24969 invoked from network); 26 Jan 2002 20:24:20 -0000
Received: from unknown (216.115.97.167) by m6.grp.snv.yahoo.com with QMQP; 26 Jan 2002 20:24:20 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 26 Jan 2002 20:24:20 -0000
Received: from tm.net.my (sja-81-100.tm.net.my [203.106.81.100]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GQK00H7ABBPMN@...> for agathiyar@yahoogroups.com; Sun, 27 Jan 2002 04:24:14 +0800 (SGT)
Date: Sun, 27 Jan 2002 04:23:53 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3C531059.8B67B3E5@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
Content-type: text/plain; charset=x-user-defined
Content-transfer-encoding: 8BIT
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
X-Yahoo-Message-Num: 15234

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

ஜனவரி 27

திருஞானசம்பந்தர்

ஆரண்ய சுந்தரேஸ்வரர் - அகிலாண்டநாயகி

கீழைத்திருக்காட்டுப்பள்ளி

"கீழ்த்திருக்காட்டுப்பள்ளியாய் போற்றி"

பிறையுடையான் பெரியோர்கள் பெம்மான் பெய்கழல்
நாடொறும் பேணி எத்த
மறையுடையான் மழுவால் உடையான் வார்தரு மால்கடல்
நஞ்சமுண்ட
கறையுடையான் கனலாடு கண்ணால் காமனைக் காய்ந்தவன்
காட்டுப்பள்ளிக்
குறையுடையான் குறட்பூதச் செல்வன் குரைகழலே கைகள்
கூப்பினோமே.

பிறையைச் சடையிலணிந்த பெரியோன், நாளும்
மலரடிகளை அடியவர்கள் துதித்துப் போற்ற வேதவடிவமாகி
விளங்கும் திறலோன், மழு ஏந்திய கரத்தன், கடல்
நஞ்சையுண்ட கண்டத்தன், நெற்றியிலுள்ள (அக்கினிக்)
கண்ணால் காமனை எரித்த கருணையாளன் - திருக்காட்டுப்
பள்ளித் தலத்தில் வீற்றிருக்கின்ற ஆரண்ய சுந்தரேஸ்வரரின்
மலரடிகளைக் கையாரத் தொழுது கண்ணாரக் கண்டு மனமாரத்
துதித்தால் கனிவான அருள் பெற்றுக் காலமெலாம் நாம்
நலமாக வாழ்வோம்.

அகிலாண்ட நாயகன் அல்லலின்றிக் காப்பான்.

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.