From harikris@... Sat Jan 26 18:58:50 2002
Return-Path:
X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 02:58:49 -0000
Received: (qmail 76804 invoked from network); 27 Jan 2002 02:58:48 -0000
Received: from unknown (216.115.97.172) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 02:58:48 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 02:58:47 -0000
Received: from harikris ([203.199.240.170]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GQKTLT03.7MJ; Sun, 27 Jan 2002 08:28:41 +0530
Message-ID: <000201c1a6de$c9424ac0$aaf0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com"
Cc:
References:
Subject: Re: [agathiyar] kOvalan heroes
Date: Sun, 27 Jan 2002 08:28:02 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan"
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15239



கோவலர் என்ற சொல்லை இடையர் (கோபாலர்) என்ற பொருளில் இளங்கோவடிகளே ஆண்டிருக்கிறார்.

தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
குழல்வளர் முல்லையில் ***கோவலர்*** தம்மொடு
மழலைத் தும்பி வாய்வைத் தூத

(அந்திமாலைச் சிறப்புசெய் காதை அடிகள் 13-16)

கணவரைப் பிரிந்திருந்த மகளிர் மாலையின் வரவால் துயரெய்தவும், சேர்ந்திருந்தோர் மகிழ்வெய்தவும், முல்லைப் பண்ணை இபுல்லாங்குழலில் சைத்தவாறு இடையர்கள் வீடு திரும்பவும், பெண்கள் குழலில் இருக்கும் முல்லையில் வண்டுகள் வாய்வைத்தூதவும்....

குழல்வளர் முல்லை என்பது சிலேடை. புல்லாங்குழலில் ஒலிக்கும் முல்லைப்பண் மற்றும்மங்கையர் குழலில் இருக்கும் முல்லைப்பூ.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். இளங்கோவடிகள் பாத்திரங்களின் தன்மைகளை நேரடியாகச் சொல்ல மாட்டார். உய்த்துணர வைப்பார். (நாக. இளங்கோவன் போன்ற சிலம்பு விற்பன்னர்கள் இருக்கும் அவையில் ஊசி விற்க நான் தயாரில்லை. சிலம்புமடல்களில் மிகப் பெரும்பான்மையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை.)

குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல
iளிவாய் வண்டினொடு iன்னிள வேனிலொடு
மலய மாருதம் திரிதரு மறுகில்....
(இந்திர விழவூர் எடுத்த காதை)

பாணர்களோடும் பரத்தர்களோடும் திரிகின்ற வழக்கத்தை உடைய கோவலனைப்போல, மலய மாருதம் வண்டுகளோடும் இளவேனிலோடும் திரிந்தது என்னும் இடம் கோவலனுடைய பாத்திரத்தில் வெகு முக்கியமான ஒரு பகுதியைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். இதைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?இ ளங்கோவன் போன்றோர் விளக்க வேண்டும்.

இன்னும் பல ஐயங்கள் உண்டு.

ஹரி கிருஷ்ணன்.


----- Original Message -----
From: naga_ganesan
To: agathiyar@yahoogroups.com
Sent: Sunday, January 27, 2002 5:34 AM
Subject: [agathiyar] kOvalan heroes




கோவலன் என்ற iஇளங்கோ அடிகள் தேர்ந்தது
கண்ணபிரானை முன்னிட்டுத்தான்.

பரிபாடல் 3:
பொன் கண் பச்சை பைங் கண் மாஅல்
iஇட வல குட வல கோவல காவல

ஆகவே,
கண்ணபிரானைக் கோவலன் என்று அழைப்பது சங்க
iஇலக்கியத்திலேயே உண்டு

http://groups.yahoo.com/group/CTamil/message/299
http://groups.yahoo.com/group/CTamil/message/216

கண்ணபிரான் மாதரிடம் (மணம் ஆன/ஆகாதவர்கள்) கிருஷ்ணலீலை
புரிந்ததை நமது தமிழ்நாட்டுப் பிறந்த மகாகாவியங்கள் வர்ணிக்கின்றன.
iஇதனைத் தத்துவார்த்தமாகப் பார்க்கவேண்டும் என்று பழைய ஆசார்யர்கள்
எழுதியுள்ளனர். ஆழ்வார்கள் பாடலில் மாதிரிக்கு:
http://groups.yahoo.com/group/agathiyar/message/10074

காவலர், பாவலர், நாவலர் என்பதுபோலக் கோவலர்.
வடமொழியில் கோபாலர் என்பது கோவலரின்
மாற்றமாக இiருக்கலாம்.

கோவலன் என்று பேர் வைத்தாலே பிரச்சினை.
சரவணபவன் (ராச)கோவாலு கதை நேற்றுக் கேட்டேன். :-)

அன்புடன்,
நா. கணேசன்



[Non-text portions of this message have been removed]