From cbose@... Sat Jan 26 21:01:22 2002
Return-Path:
X-Sender: cbose@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 05:01:22 -0000
Received: (qmail 76902 invoked from network); 27 Jan 2002 05:01:20 -0000
Received: from unknown (216.115.97.172) by m4.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 05:01:20 -0000
Received: from unknown (HELO giasmd01.vsnl.net.in) (202.54.6.1) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 05:01:19 -0000
Received: from vsnl (unknown [203.199.230.151]) by giasmd01.vsnl.net.in (Postfix) with SMTP id 99E0ACEFA for ; Sun, 27 Jan 2002 10:35:53 +0530 (IST)
Message-Id: <3.0.6.32.20020127103621.0081fe70@...>
X-Sender: cbose@... (Unverified)
X-Mailer: QUALCOMM Windows Eudora Light Version 3.0.6 (32)
Date: Sun, 27 Jan 2002 10:36:21 +0500
To: agathiyar@yahoogroups.com
Subject: parotta & ilakkiyam
In-Reply-To: <20020126075815.79367.qmail@...>
References: <20020126073942.14715.qmail@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: "Dr.P.Chandra Bose"
X-Yahoo-Group-Post: member; u=24653376
X-Yahoo-Profile: cbosetn
X-Yahoo-Message-Num: 15241

அன்புள்ள முருகன்,

உங்கள் கடிதத்தினைப் படித்துவிட்டு பசிஎடுத்ததால் புரோட்டா வாங்க ஒரு சாலையோரக் கடைக்குச்
சென்றேன். (மனைவி ஊரில் இல்லை) தேவைக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு காத்திருந்த போது புரோட்டா குழு
எனக்குப் பின்னால் எதனையோ பார்க்காததைப் பார்த்தது மாறி பார்த்தது. " மாசா மாசம் சனிக்கிழமை
இந்த கூட்டம் என்ன பண்ணுதுயா?" என்று running commentary வேறு. என்ன என்று திரும்பிப் பார்த்தால்
தாடிக்குள் முகத்தையும் ஜிப்பாவுக்குள் உடம்பையும் வைத்துக் கொண்டு என் நண்பர் ஒருவரும் அவருடன் ஒரு
பஞ்சாயத்திற்கான ஐந்து பேரும். தாடிக்காரர் திருப்பூர் கிருஷ்ணன்.

தெருமுனையில் இவர்கள் நின்று கதைக்கத்தொடங்கியவுடன் நானும் ஒரு கை சேர எண்ணி கிருஷ்ணனை
அணுகினேன். தலைவலி காரணமாக கருப்பு அடிக்காததாலும் புதிதாய்க் கண்ணாடி போட்டதாலும் சிறிது நேரம்
தடுமாறி பின் நினைவலைகளில் இருந்துஎன்னைத் தோண்டி எடுத்து உடன் இருந்த மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்தினார். அதில் ஒரு இளைஞர் என்னைக் கவர்ந்தார். அவர் நான் எங்கோ மலேசியாவில் அல்லது
சிங்கப்பூரில் இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கும், பெண்ணின் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும்
அகத்தியர்களில் ஒருவர்.

அணிந்துரை, மதிப்புரை, சிறப்புரை எழுதலாம் என்று நீங்கள் ஆற்றுப் படுத்தும் லாவண்யா தான். இலக்கியச்
சிந்தனை கூட்டம் முடிந்து வந்து கொண்டிருந்தனர். இந்த கூட்டம் எங்கோ நடப்பதாக நான் இதுகாறும் எண்ணிக்
கொண்டிருந்தேன். ஆனால் நம்ம பேட்டையிலேயே கூடி கூடிக் கலைந்தது இன்று தெரிய வந்தது. அவசியம் அடுத்த
மாதம் வர வேண்டும் என்று அவர்களும் வருவேன் என்று நானும் பேசிக் கொண்டோம்.

மற்ற நண்பர்களுக்கு நானும் லாவண்யாவும் அகத்தியம் மற்றும் பிற தமிழ் மடலாடுங் குழுக்களைப் பற்றிக்
கூறினோம். கணிப்பொறியில் தமிழில் எழுதவருமா? தமிழ் தட்டச்சு தெரியாமலேயே? என்றெல்லாம்
கேள்வி எழுப்பிய நண்பர்களுக்கு சின்ன வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது சாலைக்கு மேலாகச்
செல்லும் மேம்பாலத்தின் அடுத்த கீழ்புறத்திலிருந்து சுடிதார் அணிந்த பெண்ணொருத்தி அங்கிருந்து
கோபத்திலேயே என்னை எரித்துவிடுவது போல் பார்ப்பது தெரிந்தது.

" இதோ ஐந்து நிமிடத்தில் அப்பா வந்துவிடுவேன். இங்கேயே காத்திரு" என்று என்வண்டிக்குக் காவலாக
விட்டுவிட்டு வந்த என் பெண் பாரதி தான் அந்த கோபத்தின் காரணம். அப்புறம் தான் மகளோடு வந்ததும்
புரோட்டாவிற்கு ஆர்டர் கொடுத்ததும் நினைவிற்கு வர புரோட்டாவை வாங்கிக்கொண்டு தாவிச் சென்று என்
மகளை அடைந்தேன். வண்டியை கிளப்பும் போது என் மகள் சொன்னாள்

" எப்படித்தான் 25 வருஷமா அம்மா உங்களோட குடும்பம் நடத்துறாங்களோ. பிரண்ட்ஸ் இண்டர்நெட் தமிழ் னா
இப்படியே குடும்பமே மறந்து போகுது "

என்ன செய்வது வாங்கிக் கட்டிக் கொண்டேன்.

1) குழுக்களில் பங்கேற்கும் நண்பர்கள் தங்கள் பெயரை எழுதும்போது தங்களின் ஊர்ப் பெயரையும் எழுதினால்
என்ன? எழுதினால் லாவண்யாவைச் சிங்கப்பூரியாக எண்ணி இருக்கமாட்டேனே.

2) இப்படி கணிப்பொறி வழியே மட்டும் சந்தித்து நேரில் பார்க்காமல் இருக்க வேண்டுமா? அதுவும் ஓர்
ஊர்க்காரர்கள். இன்னும் இரா முருகனும், யோகியாரும் எப்படி இருப்பார்கள் என்று கற்பனையில் தான் பார்த்துக்
கொண்டிருக்கிறேன். ( Those unheard are always sweeter ) அகத்தியத்தின் சென்னை குழு
ஏதாவது ஒரு நாளில் கூடக் கூடாதா?

முடிவெடுங்கள் பெரியவர்களே.

மிக்க அன்புடன்
பெ.சந்திர போஸ்
சென்னை

At 11:58 PM 1/25/02 -0800, you wrote:
>
>--- Shaboo wrote:
>>
>> --- "era.murugan achwin" wrote:
>>
>> >
>> > ஆமா, இணையத்தில் ஜேய்பி புத்தகத்துக்கு நம்ம லாவண்யா அருமையான
>> வாசக
>> > மதிப்புரை எழுதியிருந்தாரே .. படிச்சீங்களா?
>>
>> படித்தேன் ரசித்தேன். பேசாம இவர் அணிந்துரை, மதிப்புரை சிறப்புரை
>> எழுத
>> தொடங்கிடலாம்:-))
>
>