From aysh@... Sat Jan 26 22:43:37 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 06:43:37 -0000
Received: (qmail 87025 invoked from network); 27 Jan 2002 06:43:36 -0000
Received: from unknown (216.115.97.167) by m9.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 06:43:36 -0000
Received: from unknown (HELO webmail4.maa.sify.net) (202.144.76.20) by mta1.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 06:43:35 -0000
Received: (qmail 19990 invoked from network); 27 Jan 2002 12:00:29 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.149) by 0 with SMTP; 27 Jan 2002 12:00:29 +0530
To: Subject: RE: [agathiyar] parotta & ilakkiyam
Date: Sun, 27 Jan 2002 12:16:59 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: <3.0.6.32.20020127103621.0081fe70@...>
Importance: Normal
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15242
போஸ் சாரே,
அட ஆண்டவா .. லாவண்யா பொண்ணு, அதுவும் சிங்கப்பூர் பொண்ணுன்னு நினைச்சீங்களா? (கூடவே 'என்ன
நம்ம இரா.மு வழியறாரேன்னு வேறே நினைப்பு..) சொக்கன் நாகன் நம்ம பக்கத்துப் புள்ளாண்டன் தான் பரந்த
பார்வை உடைய அவர் பெண்களூரில் 'பிராட்விஷன்' நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.
நிச்சயம் சந்திப்போம். இரண்டு முறை நண்பர் வாஞ்சி வீட்டில் சந்தித்து விருந்து சாப்பிட்டிருக்கிறோம்.
கனடா வெங்கட், ப்ரீமாண்ட் மணிவண்ணன், அட்லாண்டா சந்திரா வந்தபோது.. சிங்கை பழனியைத் தான் இங்கே
சந்திக்க முடியாமல் அங்கே போய்ப் பார்த்தேன். எங்க பேட்டை அண்ணாச்சி சாபுவை ஒரு பத்து நிமிட்
பார்த்தேன் - அடுத்த தடவை உக்கார்ந்து விலாவாரியாப் பேசணும்..
ஹரியும் வீராவும் நங்கநல்லூரார்கள். யோகியார் நீலாங்கரை. அவரை இன்று ஒரு திருமண விழாவில்
எதிர்பார்த்து அவருடைய மற்றைய ரிசர்வ் வங்கி நண்பர்களுடன் காத்திருந்தேன்.. வரக் காணோம். இளங்கோவன்
எங்கே இருக்கிறார்?
ஆழ்வார்ப்பேட்டையில் எந்தப் புரட்டாக் கடையைச் சொல்கிறீர்கள்? அம்புஜம்மாள் தெரு முனை ஓட்டலா? அங்கே
சைவப் புரட்டா தானே கிட்டும்? (அதை எல்லாம் புரட்டா என்று சொல்வதை விடப் புரட்டு என்று தான் சொல்ல
வேண்டும் :-)
எனக்குத் தெரியாமல் சாப்பாட்டுக் கடையா? 'ஜாரிக்கணும்'
அன்புடன்,
இரா.முருகன்
anbudan,
EraMurukan
-----Original Message-----
From: Dr.P.Chandra Bose [mailto:cbose@...]
Sent: Sunday, January 27, 2002 11:06 AM
To: agathiyar@yahoogroups.com
Subject: [agathiyar] parotta & ilakkiyam
அன்புள்ள முருகன்,
உங்கள் கடிதத்தினைப் படித்துவிட்டு பசி எடுத்ததால் புரோட்டா வாங்க ஒரு சாலையோரக் கடைக்குச்
சென்றேன். (மனைவி ஊரில் இல்லை)
1) குழுக்களில் பங்கேற்கும் நண்பர்கள் தங்கள் பெயரை எழுதும்போது தங்களின் ஊர்ப் பெயரையும் எழுதினால்
என்ன? எழுதினால் லாவண்யாவைச் சிங்கப்பூரியாக எண்ணி இருக்கமாட்டேனே.
2) இப்படி கணிப்பொறி வழியே மட்டும் சந்தித்து நேரில் பார்க்காமல் இருக்க வேண்டுமா? அதுவும் ஓர்
ஊர்க்காரர்கள். இன்னும் இரா முருகனும், யோகியாரும் எப்படி இருப்பார்கள் என்று கற்பனையில் தான் பார்த்துக்
கொண்டிருக்கிறேன். ( Those unheard are always sweeter ) அகத்தியத்தின் சென்னை குழு
ஏதாவது ஒரு நாளில் கூடக் கூடாதா?
முடிவெடுங்கள் பெரியவர்களே.
[Non-text portions of this message have been removed]