From mmanivannan@... Sun Jan 27 00:24:27 2002
Return-Path:
X-Sender: mmanivannan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 08:24:27 -0000
Received: (qmail 42616 invoked from network); 27 Jan 2002 08:24:26 -0000
Received: from unknown (216.115.97.171) by m11.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 08:24:26 -0000
Received: from unknown (HELO snipe.prod.itd.earthlink.net) (207.217.120.62) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 08:24:26 -0000
Received: from cpe-24-221-181-57.ca.sprintbbd.net ([24.221.181.57] helo=MMVHOME.earthlink.net) by snipe.prod.itd.earthlink.net with smtp (Exim 3.33 #1) id 16Ukba-0002We-00 for agathiyar@yahoogroups.com; Sun, 27 Jan 2002 00:24:02 -0800
Message-ID: <00b701c1a70c$31b0c8c0$0200a8c0@...>
To:
References:
Subject: Re: [agathiyar] parotta & ilakkiyam
Date: Sun, 27 Jan 2002 00:25:34 -0800
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="x-user-defined"
Content-Transfer-Encoding: quoted-printable
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2919.6600
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2919.6600
From: "Mani M. Manivannan"
Reply-To: "Mani M. Manivannan"
X-Yahoo-Group-Post: member; u=51199710
X-Yahoo-Profile: mani m manivannan
X-Yahoo-Message-Num: 15248

இரா. முருகன் எழுதினார்:

>இரண்டு முறை நண்பர் வாஞ்சி வீட்டில் சந்தித்து விருந்து சாப்பிட்டிருக்கிறோம்.
>கனடா வெங்கட், ப்ரீமாண்ட் மணிவண்ணன்,அட்லாண்டா சந்திரா வந்தபோது..

ஐயா, நான் ஃபிரிமாண்டை விட்டுக் குடிபெயர்ந்து இரண்டரையாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஒவ்வொரு கடிதத்திலும் கையொப்பத்தின் கீழ் "நூவர்க்", "நூவர்க்" என்று எழுதிக் கொண்டிருக்கிறேன். நமது கலியாணசுந்தரனார்தான் அதைக் கண்டு கொள்ளாமல் ஃபிரிமாண்டு மணிவண்ணன் என்றுபறைசாற்றிக் கொண்டிருக்கிறார் என்றால் நீங்களுமா?

அப்படி என் பெயருக்கு முன் ஒரு ஊர் பெயர் போட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் அது அமெரிக்காவில் உள்ள எந்த ஊர்ப் பெயரும் இருக்காது. அவ்வப்போது, ஏதாவது கிறுக்கினால், நான் என் பிறந்த ஊர்ப் பெயரைப் போட்டுக் கொண்டு "நாமக்கல் கணிஞன் மணிவண்ணன்" என்று சொல்லிக் கொள்வதுண்டு. புலம் பெயர்ந்த ஊர்ப் பெயரைப்போடுவதென்றால், நான் பாட்ஸ்டாம் மணிவண்ணனா, சாண்டா பார்பரா மணிவண்ணனா, எல்லே மணிவண்ணனா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியிருக்கும்! வேண்டாமையா, போட்டால் பிறந்த ஊரைச் சொல்லி அடையாளம் காட்டுங்கள். இல்லையேல் மணி மு. மணிவண்ணன் என்றே சொல்லி விடுங்கள். அந்தப் பெயரையும் சொந்தம் கொண்டாட யாரும் இன்னும் வரவில்லைதானே?

:-))).

அன்புடன்,

மணி மு. மணிவண்ணன்
நூவர்க், கலி., அ.கூ.நா.

"இந்த ஆண்டில் இன்இறேல் இனிவரும் ஆண்டில்
சந்திப்போம் யாழ்ப்பாணத்தில்"