From naga ganesan@... Sun Jan 27 09:20:57 2002
Return-Path:
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 17:20:57 -0000
Received: (qmail 94978 invoked from network); 27 Jan 2002 17:20:57 -0000
Received: from unknown (216.115.97.171) by m5.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 17:20:57 -0000
Received: from unknown (HELO n11.groups.yahoo.com) (216.115.96.61) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 17:20:57 -0000
Received: from [216.115.96.117] by n11.groups.yahoo.com with NNFMP; 27 Jan 2002 17:20:56 -0000
Date: Sun, 27 Jan 2002 17:20:55 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kOvalan heroes
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5683
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.27.113
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15262

--- In agathiyar@y..., "Hari Krishnan" wrote:
> கோவலர் என்ற சொல்லை இடையர் (கோபாலர்) என்ற பொருளில் இளங்கோவடிகளே
ஆண்டிருக்கிறார்.
>
> தாழ்துணை துறந்தோர் தனித்துயர் எய்தக்
> காதலர்ப் புணர்ந்தோர் களிமகிழ்வு எய்தக்
> குழல்வளர் முல்லையில் ***கோவலர்*** தம்மொடு
> மழலைத் தும்பி வாய்வைத் தூத
>
> (அந்திமாலைச் சிறப்புசெய் காதை அடிகள் 13-16)
>
> கணவரைப் பிரிந்திருந்த மகளிர் மாலையின் வரவால் துயரெய்தவும், சேர்ந்திருந்தோர்
>மகிழ்வெய்தவும், முல்லைப் பண்ணை புல்லாங்குழலில் இசைத்தவாறு இடையர்கள்
>வீடு திரும்பவும், பெண்கள் குழலில் இருக்கும் முல்லையில் வண்டுகள் வாய்வைத்தூதவும்....
>
> குழல்வளர் முல்லை என்பது சிலேடை. புல்லாங்குழலில் ஒலிக்கும் முல்லைப்பண்
>மற்றும் மங்கையர் குழலில் இருக்கும் முல்லைப்பூ.
>

நன்றி, கவிஞரே. கோவலர் முல்லைநில மக்கள் என்று
iஇளங்கோ ஆள்வது அரிய சான்று. iஇடைநில மக்கள்
கோவலர் என்று பலவிடங்களில் சங்க iஇலக்கியம், சிலம்பு பேசும்.

ஆனால், பரிபாடல் மூன்றிலேயே, கண்ணபெருமானைக்
கோவலன் என்று சொல்கிறது. கோவலன் = கண்ணன் என்று
கிடைப்பது iஇதாலேயே.

> இiது ஒரு பக்கம் இருக்கட்டும். iஇளங்கோவடிகள் பாத்திரங்களின் தன்மைகளை
> நேரடியாகச் சொல்ல மாட்டார்.

சிலம்பு பற்றி வந்திருக்கின்ற நூல்களைப் படிக்கவேணும்.
கோவலன் என்ற கதைநாயகன் பேர் கண்ணபிரானை
நினைவுறுத்தவே என்பது புலனாகிறது. அறிஞர்கள்
அதுபற்றி எழுதியிருக்கின்றனரா? எனப் பார்க்க வேண்டும்.

சில அரசியல் காரணங்கள் வேறு. அது நாம் கோவலனை
அடையாளம் காணத் தடைநிற்க விடலாமா?

கோமணம் > கௌபீநம் என்று தெளிந்தோம்.
கோ = கோத்தல். ஆநிரையைக் கோப்பாகக்
கோத்து மேய்ப்போர் கோவலர், நாவலர், பாவலர்,
காவலர் போல.

கோவலன் என்ற சொல் தமிழ் நாட்டை விட
வடநாட்டில் பெருவாரியாக வழங்கும். விருந்தாவனக்
கண்ணன் மதுராபுரியில் கோபஸ்த்ரீகளுடன்
விளையாடுபவன். கோவல என்பது பலருக்கு
கோயல என்று வழங்கும் Goel என்னும் வடநாட்டார்
தமிழ்ப் பெயரைக் கண்ணனால் கொண்டோர்.
கோவல/கோயல, ஒப்புப் பார்க்க: கோவில்/கோயில்.

>உய்த்துணர வைப்பார். (நாக. iஇளங்கோவன்
> போன்ற சிலம்பு விற்பன்னர்கள் இருக்கும் அவையில் ஊசி விற்க நான் தயாரில்லை.
>சிலம்பு மடல்களில் மிகப் பெரும்பான்மையும் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை.)
>
> குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
> திரிதரு மரபின் கோவலன் போல
> iளிவாய் வண்டினொடு iன்னிள வேனிலொடு
> மலய மாருதம் திரிதரு மறுகில்....
> (இந்திர விழவூர் எடுத்த காதை)

ஞானும் iஇதையே சொல்லியிருக்கிறேன்:
http://groups.yahoo.com/group/CTamil/message/299 பாருங்கள்:
<<<
Kovalan, the Cilampu epic hero, was after many parastrIs.
The sandal breeze from Malaya-Potiyil is compared to
Kovalan who roams among the bards and town vezyAs.

kural vAyp pANaroTu nakarap parattaroTu
tiritaru marapin2 kOvalan2 pOla
iLi vAy vaNTin2oTu in2 iLavEn2iloTu
malaya mArutam tiritaru maRukil - cil. 5:200-203

Kovalan was aptly named after Krishna, and his parattai
is mAdhavi. There are instances in both Sankrit and Tamil
when mAdhavi, usually gaertneras, refers to mullai jasmines.
http://groups.yahoo.com/group/CTamil/message/216

Actually, Cilampu has explicit lines where both interpretations
1) as a pastoral flower and 2) as the courtesan dancer
for mAdhavi are true:

kAtal kozunan2aip pirintu alar eytA
mAtark koTug kuzai mAtavi tan2n2OTu
il vaLar mullai mallikai mayilai - Cil. 15:189-191
>>>

காதல் கொழுநனைப் பிரிந்து அலர் எய்தா
மாதர்க் கொடுங் குழை மாதவி தன்னொடு
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை

இங்கும் சிலேடையையே இளங்கோ அடிகள்
கையாள்வார்: மாதவி = 1) கோவலன் (கண்ணன்/கதாநாயகன்)
விரும்பும் கணிகை 2) முல்லை நிலத்தில் வளரும்
குருக்கத்தி மலர்.

என்றும் கண்ணனின் அடிமை,
நா. கணேசன்

>
> பாணர்களோடும் பரத்தர்களோடும் திரிகின்ற வழக்கத்தை உடைய
> கோவலனைப் போல, மலய மாருதம் வண்டுகளோடும் இளவேனிலோடும்
> திரிந்தது என்னும் இடம் கோவலனுடைய பாத்திரத்தில் வெகு முக்கியமான
> ஒரு பகுதியைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். இதைப் பற்றி
>அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?இ ளங்கோவன் போன்றோர் விளக்க வேண்டும்.
>
> இன்னும் பல ஐயங்கள் உண்டு.
>
> ஹரி கிருஷ்ணன்.
>
>
> ----- Original Message -----
> From: naga_ganesan
> To: agathiyar@y...
> Sent: Sunday, January 27, 2002 5:34 AM
> Subject: [agathiyar] kOvalan heroes
>
>
>
>
> கோவலன் என்று iஇளங்கோ அடிகள் தேர்ந்தது
> கண்ணபிரானை முன்னிட்டுத்தான்.
>
> பரிபாடல் 3:
> பொன் கண் பச்சை பைங் கண் மாஅல்
> iஇட வல குட வல கோவல காவல
>
> ஆகவே,
> கண்ணபிரானைக் கோவலன் என்று அழைப்பது சங்க
> iஇலக்கியத்திலேயே உண்டு
>
> http://groups.yahoo.com/group/CTamil/message/299
> http://groups.yahoo.com/group/CTamil/message/216
>
> கண்ணபிரான் மாதரிடம் (மணம் ஆன/ஆகாதவர்கள்) கிருஷ்ணலீலை
> புரிந்ததை நமது தமிழ்நாட்டுப் பிறந்த மகாகாவியங்கள் வர்ணிக்கின்றன.
> iஇதனைத் தத்துவார்த்தமாகப் பார்க்கவேண்டும் என்று பழைய ஆசார்யர்கள்
> எழுதியுள்ளனர். ஆழ்வார்கள் பாடலில் மாதிரிக்கு:
> http://groups.yahoo.com/group/agathiyar/message/10074
>
> காவலர், பாவலர், நாவலர் என்பதுபோலக் கோவலர்.
> வடமொழியில் கோபாலர் என்பது கோவலரின்
> மாற்றமாக இiருக்கலாம்.
>
> கோவலன் என்று பேர் வைத்தாலே பிரச்சினை.
> சரவணபவன் (ராச)கோவாலு கதை நேற்றுக் கேட்டேன். :-)
>
> அன்புடன்,
> நா. கணேசன்