From naga ganesan@... Sun Jan 27 09:23:38 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 17:23:37 -0000
Received: (qmail 12522 invoked from network); 27 Jan 2002 17:23:37 -0000
Received: from unknown (216.115.97.172) by m2.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 17:23:37 -0000
Received: from unknown (HELO n10.groups.yahoo.com) (216.115.96.60) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 17:23:37 -0000
Received: from [216.115.96.145] by n10.groups.yahoo.com with NNFMP; 27 Jan 2002 17:23:37 -0000
Date: Sun, 27 Jan 2002 17:23:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Maruda maram (was: arjunanin peyarkaL)
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5468
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 209.144.27.113
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15263
இ10 பேர்களைக் கவனித்தீர்களானால்:
ஒருபேர் மாத்திரம், மாறுகிறது.
அது கிருஷ்ணன் என்ற பேரே.
அர்ஜுனன் கருப்புவண்ணன் என்பதற்கு
தேரில் iஇரண்டு கண்ணன்கள் என்ற மகாபாரத
வாக்யத்தை வைத்துச் சொல்வார்கள்.
இiல்லை, இiல்லை அது வடமொழி இiலக்கணப்படி.
அர்ஜுன என்றால் வெள்ளை என்றே பொருள்
(அர்ஜென்டீனா - வெள்ளி கிடைக்கும் நாடு).
என்றும் கேட்டிருக்கிறேன்.
நார்வே நாட்டு ஜார்ஜ் வான் சிம்சன் அர்ஜுனன்
வெள்ளைச்சாமி என்றும், ஆல்'ப்ரெட் ஹில்டிபிடல்
அர்ஜுனன் நிறம் கருப்பு என்றும் ஆய்வுக்
கட்டுரைகள் எழுதியுள்ளனர். தனி மடல்களில்
எனக்கு பெரிதாக விளக்கினர்: என் மண்டைக்கு
அது முழுக்க ஏறவில்லை.
-----------------------------
ஸ்ரீசைலம் (தேவாரத்தில் திருப்பருப்பதம்) முன்னர்
ஒரு மருத மரத்தைத் ஸ்தல விருட்சமாகக் கொண்டிருந்திருக்கலாம்.
வெள்மருதீசன் என்பதை "மல்லிகார்ஜுனன்" என்று
வடமொழி மொழி பெயர்த்திருக்கிறது.
வெண்மருத மரம் அர்ஜுன மரம்.
வெள்-/மல்- என்பது ம்-/வ்- திரவிட மொழியியல்பு:
மீசை/வீசை (இரண்டு நாள் முன்னர் சில உதாரணங்கள் கொடுத்தேன்).
இiந்த வெண்மை மல்லிகை என்று ஆன பிறகு,
அம்பாளுக்கு ஸ்ரீசைலத்தில் பிரமராம்பிகை என்று
பேர்கட்டிவிட்டனர். சௌந்தர்யலகரியில் பாருங்கள்.
மல்லிகையாக மலரும் இறைவனைச் சுற்றிச்சுற்றி
வரும் வண்டாக அம்பாள் விளங்குகிறாள்!
இது இலக்கிய மரபுக்கு நேர்மாறு.
சங்க இலக்கியம் பார்த்தால் தெரியும்: ஆண்தான் வண்டு,
பெண் தேன் தரும் மலர். அளி = வண்டு, அளியன் வண்டாக
சோதரியை நாடி வருவோன் (மலையாளம்).
இiதேபோல, தமிழ் நாட்டில் மாயவரத்தில் நடந்திருக்கிறது.
ஹிந்து சமய உயர்நிலைமையில் அம்பாள் வழிபாடு
ஆக நாள் ஆகியிருக்கிறது. தேவாரத்தில் அம்பாளை
வருணிக்கும் பகுதிகள் யாவும் அவளது அங்க அவயவ
அழகை, அவள் பேச்சை, குழலை, விழியை, கையை,
வருணிப்பதாம். மயிலாடுதுறைத் தேவாரத்தில்
பழைய பதிப்பிலெல்லாம் "அஞ்சொலாள்" என்றே
உள்ளது. அதை மதுரவாசுகி/வசனாம்பா/'பாஷிணி
என்று மொழிபெயர்க்க வேணும். அஞ்சொலாள்
என்பதை அஞ்சலாள் ஆக்கி பின்னர் அபயாம்பா
பண்ணியிருக்கின்றனர்!!! ஆனால், வேறோர் அம்பாள்
பேருக்கு நேர்ந்ததுக்கு இது பரவாயில்லை:
மறைக்காடு (இதன் பழையபெயர் மரைக்காடு = மான்வனம்)
(வேதாரண்யம்) அம்பாள் யாழைப் பழித்த மொழியாள்
வீணாவாத விதூஷணி. யாழைப்பழித்தாள் வாழைபழத்தம்மன்
ஆகி வாழைப்பழம் படையல்!!! (தொ. மு. பா, ரா. பி. சே நூல்கள்).
வெண்மருதீசம் > மல்லிகார்ஜுனம் ஆனதற்கு ஒப்பு:
iஇடைமருது -> மத்தியார்ஜுனம், புடைமருது (நெல்லை மாவட்டம்) -> புடார்ஜுனம்
என்று மொழி பெயர்த்தமை காண்க.
---------------
சங்ககாலத்தில் தலைவன் வள நாட்டில், பெரிய வீட்டில்
ஆடல் பாடலுடன் கணிகையர் பரஸ்திரீகளுடன்
இன்பம் துய்ப்பது மருதத்திணையாகக் கொள்ளப்படும்.
இiந்த மருத மரம் சின்ன அழகற்ற வெண்பூக்கள் பூக்கும்
வெண்மருது(அர்ஜுன) அன்று. சங்க கால மருத மரம்
"பூவரசு" மரம் ஆகும். நீர்வளம் மிகுந்த இiடம், ஆற்றோரம்
போன்றவற்றில் வளரும். சிவந்த பெரிய அழகுடைப் பூக்கள்,
விவரமாக அறிய, பி. எல். சாமி, சங்க இலக்கியத்தில் செடிகொடி விளக்கம்
காண்க.
கொங்கு நாட்டுப் பழமொழியில் இiதுண்டு:
இiதையே தமிழ்ச் சினிமாவைக் கிராமத்துக்கு
எடுத்துப் போனவர்கள் பயன்படுத்தினார்கள்.
"பூவரசம் பூப் பூத்தாச்சு, பொண்ணுக்குச் சேதியும் வந்தாச்சு".
மருதமரம் பற்றி இiன்னுமொன்று:
ஸ்ரீமத் கண்ணபிரான் கந்தருவர்களாக iஇருந்தவர்கள்
மருத மரமாக, அவர்களைக் கொன்றார் என்று
வரும். கந்தருவர் (கந்தற்பர்) தமிழில் இசைகூட்டும்
யாழோர் என்று மொழிபெயர்ப்போம் (தொல்காப்பியம்).
தலைவன் தலைவி அல்லது பரத்தையருடன் கூடத்
துணைசெய்வது பல நூறு பாடல்களில் பாணருக்கும்
விறலிக்கும் உள்ள தொழில் என சங்க இலக்கியங்களில்
மருதத் திணையில் வரும். எனவே தான் ஆழ்வாரும்,
பின்னர் நம் தமிழ்நாட்டில் எழுந்த பாகவதமும்,
யாழோர் (கந்தருவர்) மருத மரம் ஆனார்கள்
என்று பாடும். மது, கைடப வதம் மகாவிஷ்ணு
செய்தமைக்கும், கிருஷ்ணர் காந்தர்வ-மருத மரம்
ஒசித்தற்கும் ஒப்புமை உள்ளது.
மது-கைடப வதம்:
http://groups.yahoo.com/group/CTamil/message/172
இ
மாதவி பேர்க்காரணம்
http://groups.yahoo.com/group/CTamil/message/216
கிருஷ்ணனும் கோபியரும்
கோவலனும் மாதவியரும் போல,
http://groups.yahoo.com/group/CTamil/message/299
மருத மரமும் தமிழும் வடமொழியும் பிணைந்துள்ளது.
அன்புடன்,
நா. கணேசன்
--- In agathiyar@y..., "Narayan Swaminathan" wrote:
> அன்பின் ஹரி :
>
> நீங்க சொன்னதுதான் சரி.
> ஹி, ஹி, அச்வினி, பரணி சமாசாரத்தை
> நினைத்துக் கொண்டு இருபத்தி ஏழுன்னு
> சொல்லிட்டேன் போல இருக்கு.
>
> அர்ஜுன பல்குந பார்த்த கிரீடி ச்வேதவாஹன
> பீபத்ஸு விஜய க்ருஷ்ண சவ்யஸாசீ தநஞ்சய
>
> என்பன அர்ஜூனனின் பத்து பெயர்கள்.
>
>
> தெய்வத்தின் குரல் ஆறாவது தொகுதியில் ஸெளந்தர்ய லஹரி பற்றி
> காஞ்சிப் பெரியவர் சொல்லும்போது இதையும் சொல்கிறார்.
>
> சவ்யஸாசீ பத்தி தனியா ஒரு இழையே போடும் அளவுக்கு சொல்லியிருக்கிறார்.
> சாதாரணமாக வில்லை இடக்கையில் பிடித்து வலக்கையால் நாண் தொடுப்பார்கள்.
> வலக்கையால் வில்லைப் பிடித்து இடக்கையாலும் நாண் தொடுக்க வல்லவனுக்கு
> சவ்யஸாசீ என்ற பெயராம். Lefthander அல்ல, ambidextrous.
>
> சுவாமிநாதன்
> லாஸ் ஏஞ்சலஸ்
> ==============================
>
> <ஹரி சொன்னார்>
> <வெட்டு >
> "உடனே அர்ச்சுனன், 'விராட குமாரா! என்னுடைய பத்துப் பெயர்களையும் கூறுகின்றேன்.
கேள். அர்ச்சுனன், பல்குணன், ஜிஷ்ணு, கிரீடி, சுவேதவாகனன், பீபத்சு, விஜயன், பார்த்தன்,
சவ்யசாசி, தனஞ்சயன் என்பவையே அவைகள். இவை யாவும் எனக்கு இந்திரனால்
சூட்டப்பட்டவை' என்றான்.' (மஹாபாரத மொழிபெயர்ப்பு, வர்த்தமானன் வெளியீடு.)
> <வெட்டு >
>
> <குட்டு >
> எல்லே சுவாமின்! அந்த 27 எந்த இடத்தில் கிடைத்தது என்று நினைவிருக்கிறதா?
>
> அன்புடன்,
> ஹரி கிருஷ்ணன்.
--- End forwarded message ---