From harikris@... Sun Jan 27 10:48:28 2002
Return-Path: X-Sender: harikrishnan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 27 Jan 2002 18:48:27 -0000
Received: (qmail 66440 invoked from network); 27 Jan 2002 18:48:27 -0000
Received: from unknown (216.115.97.171) by m3.grp.snv.yahoo.com with QMQP; 27 Jan 2002 18:48:27 -0000
Received: from unknown (HELO smtp03.vsnl.net) (203.197.12.9) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 27 Jan 2002 18:48:26 -0000
Received: from harikris ([203.199.240.168]) by smtp03.vsnl.net (Netscape Messaging Server 4.15) with SMTP id GQLW7T00.IR4 for ; Sun, 27 Jan 2002 22:22:41 +0530
Message-ID: <006b01c1a753$a6180240$a8f0c7cb@...>
To: "Agathiyar@Yahoogroups.Com" References: <3.0.3.32.20020127214624.0075ba4c@...> <3.0.3.32.20020127221159.00774090@...>
Subject: Re: Kacchi and Kalinggam
Date: Sun, 27 Jan 2002 22:05:30 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
X-eGroups-From: "Hari Krishnan" From: "Hari Krishnan" X-Yahoo-Group-Post: member; u=35460435
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 15264
குப்பாயம் பாரதி பாட்டில் கூட வருகிறது. (தைக்கு நற் குப்பாயம் - பாஞ்சாலி சபதம்.)
ஏன் தலைவா,
மழவரங்க பூபதி பெயரா பட்டமா?
கள்ளிக்கேன் முள்வேலி கழுதைக்கேன் கடிவாளம் கறுப்பில் லாத
உள்ளிக்கேன் பரிமளங்கள் உவர்நிலத்துக் கேன்விதைகள் ஒடிந்து போகும்
சுள்ளிக்கேன் கோடாலி துடைப்பத்துக் கேன்கவசம் சும்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்க பூபனெனும் பட்டம் தானே
என்று ராமச்சந்திர கவிராயர் கிண்டல்பண்ணுகிறார். (இந்தப் பாட்டை மீ.ப. சோமசுந்தரம் அந்தக் காலத்தில் கல்கியில் எழுதிய கட்டுரையில் சொல்லியிருந்தார். சோமுவும் கட்டுரை எழுதுவதுபோல் - சொல்லாமல் சொல்லி - கிண்டல்தான் பண்ணியிருந்தார். எந்தச் சந்தர்ப்பத்தில் தெரியுமா? வேண்டாம். அதைச் சொன்னால் எம்ஜிஆர் ரசிகர்களின் சாபத்துக்கு ஆளாவேன்.....
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
(ரொம்பத் தாங்க முடியாதவங்க மட்டும் காதை கிட்ட கொண்டாங்க.... அப்போது பாரத் பட்டம் கொடுக்கப்பட்டிருந்தது.....)
----- Original Message -----
From: jaybee
To: agathiyar@yahoogroups.com
Sent: Sunday, January 27, 2002 7:41 PM
Subject: Re: Kacchi and Kalinggam - Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
ஆம்.
ஒரு வசைக்கவி இருக்கிறது. மழவரங்க பூபதி என்பவன்மீது
பாடப்பட்டது.
'தொப்பாரம் கீழே மயிர்' என்று சிலேடையாக முடியும்.
முழுப்பாட்டையும் தேடிப்பார்க்கவேண்டும்.
பாவம். 'பாட்டு வாங்கிக்கட்டிக்கொள்வது' என்பார்களே
அது அந்த ஆளுக்கு நன்றாகப் பொருந்தும்.
அந்தத் தனிப்பாடலில் 'குப்பாயம்' வருகிறது.
மாணிக்கவாசகரின் பாடல் ஒன்றில்கூட 'குப்பாயம்'
இருக்கிறது.
அன்புடன்
ஜெயபாரதி
[Non-text portions of this message have been removed]