கண்ணகிக்கு தான் இழைத்த துயர்களை நினைத்து வருந்தி,
அவளைப் போற்றி, சிலம்பை எடுத்துக் கொண்டு புறப்படும்போது
தன் கண்களில் பனித்த கண்ணீரைக் கண்ணகியிடம் காட்டக் கூடாதென்று
அதை அடக்க முடியாமல் அடக்கிக் கொண்டு,
**பசுக்கள் பல நிறைந்த ஆயர் வீடுகளைக்கடந்து**
தளர்வுற்ற நடையுடன் செல்கிறான்.
இங்கு கோவலர் என்று குறித்தது இடையர் என்ற
பொருளிலேயே வருகிறது.
ஆனால்,
இன்னொரு இடத்தில் முற்றிலும் மாறுபட்டபொருளைத் தருகிறார்,
அல்லது சிந்திக்க விடுகிறார் இளங்கோவடிகளார்.
மதுரை எரிந்து கொண்டிருக்க,
கண்ணகியின் பின் நின்ற மதுராபதித் தெய்வம்,
கோவலனின் முற்பிறப்பு பற்றி கூறும் இடம் சிந்திக்கத் தக்கது.
"முந்தைப் பிறப்பிற் பைந்தொடி! கணவன்
வெந்திறல் வேந்தற்குக் **கோத்தொழில்** செய்வோன்
பரதன் என்னும் பெயரன்அக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்
ஒற்றன் இவன்எனப் பற்றினன் கொண்டு...."
(கட்டுரை காதை, அடிகள் 152-156)
கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார்.
அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன்.
அப்படிக் கோத்தொழில் செய்தவன் பெயர் பரதன். **அக்கோவலன்** (அதாவது கோத்தொழில்
செய்பவன்---154 வது அடியைக் கவனிக்க) குறைகள் உடையவனானதால் சங்கமன் என்ற வணிகனை ஒற்றன் என்று
பிடித்துக் கொண்டு போய் கொலைசெய்யக் காரணமாயினன். (ஆதலால் சங்கமனின் மனைவி நீலி இட்ட சாபமே
கோவலனின் கொலைக்குக் காரணம் ...என்று கதை போகும்)
ஆகவே, இங்கு "கோத்தொழில்" செய்பவன்"கோவலன்" என்ற பொருள்படி,
முந்தைய பிறப்பை மிகுதியாகப் பேசும்இளங்கோவடிகளார்,
முற்பிறப்பில் பரதன் என்னும் பெயர் கொண்டு கோத்தொழில் செய்தமையால்
சிலம்பில் தன் கதை நாயகனுக்கு கோவலன் என்று பெயரிட்டிருக்கக் கூடும்
என்று கருதுகிறேன்.
ந.மு.வே.நாட்டார் அவர்கள் தன் உரையில்
"பரதன் என்னும் பெயரன்அக் கோவலன்" = "கோவலனாகிய பரதன் என்னும் பெயரினையுடைய அவன்" என்று
குறித்திருப்பது ஆயத்தக்கது.
இக்கருத்தின் நோக்கில்
"கோத்தொழில் செய்பவன் = அரச வினை செய்பவன் = கோவலன்" = பரதன்.
அப்பரதனின் பின்னாற் பிறப்பிற்கு அடிகளார் கோவலன் என்றே பெயர் சூட்டியிருக்கிறார்.
இது தங்களாலும், நமது இணைய அறிஞர்களாலும் அலசப் படவேண்டும்
என்று கேட்டுக் கொள்கிறேன்.
கோவலர் என்று வரும்போது பன்மையில் பெயரைக் குறிப்பதாகவும்,
கோவலன் என்று வரும்போது ஒருமையில் வினையைக் குறிப்பதாகவும்
இங்குக் காணப்படுவதையும் இன்னும் பார்க்கவேண்டும்.
கோவலன் என்ற சொல் பெயரைக் குறிப்பிட்டு (இடையன்),
ஒருமையிலும் வரலாம்...ஆனால் அந்த மாதிரி பொருளில்
சிலம்பில் எங்கேனும் உளதா என்று இன்னும் தடவ வேண்டும்.
>(அந்திமாலைச் சிறப்புசெய் காதை அடிகள் 13-16)
>
>கணவரைப் பிரிந்திருந்த மகளிர் மாலையின் வரவால் துயரெய்தவும், சேர்ந்திருந்தோர் மகிழ்வெய்தவும்,
முல்லைப் பண்ணை இபுல்லாங்குழலில் சைத்தவாறு இடையர்கள் வீடு திரும்பவும், பெண்கள் குழலில் இருக்கும்
முல்லையில் வண்டுகள் வாய்வைத்தூதவும்....
>
>குழல்வளர் முல்லை என்பது சிலேடை. புல்லாங்குழலில் ஒலிக்கும் முல்லைப்பண் மற்றும் மங்கையர் குழலில் இருக்கும்
முல்லைப்பூ.
>
>இது ஒரு பக்கம் இருக்கட்டும். இளங்கோவடிகள் பாத்திரங்களின் தன்மைகளை நேரடியாகச் சொல்ல மாட்டார்.
உய்த்துணர வைப்பார்.
அப்படித்தான் நானும் கருதுகிறேன்.
>(நாக. இளங்கோவன் போன்ற சிலம்பு விற்பன்னர்கள் இருக்கும் அவையில் >ஊசி விற்க நான் தயாரில்லை.
>சிலம்பு மடல்களில் மிகப் பெரும்பான்மையும் படிக்கும் வாய்ப்புக் >கிட்டியதில்லை.)
விரைவில் அதைத் தங்களுக்குக் கிடைக்கச் செய்கிறேன்.
>குரல்வாய்ப் பாணரொடு நகரப் பரத்தரொடு
>திரிதரு மரபின் கோவலன் போல
>iளிவாய் வண்டினொடு iன்னிள வேனிலொடு
>மலய மாருதம் திரிதரு மறுகில்....
>(இந்திர விழவூர் எடுத்த காதை)
>
>பாணர்களோடும் பரத்தர்களோடும் திரிகின்ற வழக்கத்தை உடைய கோவலனைப்போல, மலய மாருதம்
வண்டுகளோடும் இளவேனிலோடும் திரிந்தது என்னும் இடம் கோவலனுடைய பாத்திரத்தில் வெகு முக்கியமான ஒரு
பகுதியைக் காட்டுகிறது என்று நினைக்கிறேன். இதைப் பற்றி அறிஞர்கள் என்ன சொல்கிறார்கள்?இ
ளங்கோவன் போன்றோர் விளக்க வேண்டும்.
இளங்கோவடிகள், தன் உவமைகளால் நம்மைப் பித்துப் பிடிக்க வைக்கும்
இன்னொரு இடம். விரிவாக பின்னொரு பொழுது.
நன்றி.
வணக்கம்.
அன்புடன்
நாக.இளங்கோவன்
>ஹரி கிருஷ்ணன்.
>
>
> ----- Original Message -----
> From: naga_ganesan
> To: agathiyar@yahoogroups.com
> Sent: Sunday, January 27, 2002 5:34 AM
> Subject: [agathiyar] kOvalan heroes
>
>
>
>
> கோவலன் என்ற iஇளங்கோ அடிகள் தேர்ந்தது
> கண்ணபிரானை முன்னிட்டுத்தான்.
>
> பரிபாடல் 3:
> பொன் கண் பச்சை பைங் கண் மாஅல்
> iஇட வல குட வல கோவல காவல
>
> ஆகவே,
> கண்ணபிரானைக் கோவலன் என்று அழைப்பது சங்க
> iஇலக்கியத்திலேயே உண்டு
>
> http://groups.yahoo.com/group/CTamil/message/299
> http://groups.yahoo.com/group/CTamil/message/216
>
> கண்ணபிரான் மாதரிடம் (மணம் ஆன/ஆகாதவர்கள்) கிருஷ்ணலீலை
> புரிந்ததை நமது தமிழ்நாட்டுப் பிறந்த மகாகாவியங்கள் வர்ணிக்கின்றன.
> iஇதனைத் தத்துவார்த்தமாகப் பார்க்கவேண்டும் என்று பழைய ஆசார்யர்கள்
> எழுதியுள்ளனர். ஆழ்வார்கள் பாடலில் மாதிரிக்கு:
> http://groups.yahoo.com/group/agathiyar/message/10074
>
> காவலர், பாவலர், நாவலர் என்பதுபோலக் கோவலர்.
> வடமொழியில் கோபாலர் என்பது கோவலரின்
> மாற்றமாக இiருக்கலாம்.
>
> கோவலன் என்று பேர் வைத்தாலே பிரச்சினை.
> சரவணபவன் (ராச)கோவாலு கதை நேற்றுக் கேட்டேன். :-)
>
> அன்புடன்,
> நா. கணேசன்
>
>
>
>[Non-text portions of this message have been removed]
>
>
>
>To Post a message, send it to: tamil-ulagam@eGroups.com
>
>To Unsubscribe, send a blank message to: tamil-ulagam-unsubscribe@eGroups.com
>
>Your use of Yahoo! Groups is subject to http://docs.yahoo.com/info/terms/
>
>
>
>
----------------------------------------------------------------------------
-------------
தமிழர்க்கழகு தமிழெழுதல்
----------------------------------------------------------------------------
-------------