From anbudan ananth@... Sun Jan 27 19:15:05 2002
Return-Path:
X-Sender: anbudan ananth@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 03:15:05 -0000
Received: (qmail 56994 invoked from network); 28 Jan 2002 03:03:31 -0000
Received: from unknown (216.115.97.171) by m4.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 03:03:31 -0000
Received: from unknown (HELO n7.groups.yahoo.com) (216.115.96.57) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 03:03:31 -0000
Received: from [216.115.96.45] by n7.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 03:02:06 -0000
Date: Sun, 27 Jan 2002 21:28:52 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: thaippUsam
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1047
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "anbudan ananth"
X-Originating-IP: 64.228.129.214
X-Yahoo-Group-Post: member; u=35116172
X-Yahoo-Profile: anbudan ananth
X-Yahoo-Message-Num: 15276

கொஞ்ச நஞ்ச மேனு மென்றன் நெஞ்சி லுன்னை நானி ருத்தப்
பஞ்சு போன்ற மென்ப தங்கள் பதியாயோ?

குன்றி டித்த வீர வேலை யென்றன் கோர பாவ மென்னும்
குன்று பாறு மாறு செய்யக் குறியாயோ?

வஞ்ச மோடு வானில் மேவும் மஞ்சு மாரி யீந்தி டாது
கஞ்ச மென்ற தன்மை கொள்ள லழகாமோ?

வந்து தாளில் வீழ்ந்த பின்னும் வாரி நீய ணைத்தி டாமல்
வாட வைத்தல் வள்ளல் செய்யும் செயலாமோ?

தஞ்ச மென்று கெஞ்சு வோரின் மிஞ்சி நின்ற தாப மிற்றுப்
பிஞ்சு போகு மென்ற சொல்லும் பிழையாமோ?

சங்க ரன்கு னிந் திருந்து தங்க ரம்கு வித்து வேண்ட
தந்த வேத மென்றெ னக்கு மருளாயோ?

அஞ்ச ரக்கர் வாட்ட நானு மஞ்சி யுன்னைக் கூவிக் கூவிக்
கெஞ்சி னாலு முன்றன் நெஞ்ச முருகாதோ?

குஞ்ச மென்று கூந்த லாடும் வஞ்சி மார்ப ணைந்த கந்த!
குஞ்ச ரத்தன் கொஞ்சு தம்பிப் பெருமாளே!

- அனந்தநாராயணன்