From jaybee@... Sun Jan 27 22:14:14 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 06:14:14 -0000
Received: (qmail 55081 invoked from network); 28 Jan 2002 06:14:14 -0000
Received: from unknown (216.115.97.171) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 06:14:14 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 06:14:13 -0000
Received: from user (sp-103-17.tm.net.my [210.186.103.17]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GQM00HKGXBNF8@...> for agathiyar@yahoogroups.com; Mon, 28 Jan 2002 14:14:13 +0800 (SGT)
Date: Mon, 28 Jan 2002 14:20:03 +0800
Subject: Kebaya and Portuguese - Re: Kacchi and Kalinggam - Re: [agathiyar] Re: parotta & ilakkiyam
In-reply-to: <20020128052017.38490.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020128142003.0078f3f8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020127214624.0075ba4c@...>
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 15286
At 09:20 PM 1/27/02 -0800, Shaboo wrote:
>
>--- jaybee wrote:
>> At 05:23 AM 1/27/02 -0800, you wrote:
>
>> 'கபாய்' என்ற சொல் மீனாட்சியம்மன்பிள்ளைத்தமிழில் வருகிறது.
>> கபாய் என்பது போர்த்துகீசிய 'கபாயா' என்னும் பெண் சட்டை.
>>
>> அன்புடன்
>>
>> ஜெயபாரதி
>
>பெரியவரே,
>
> மலாய்ப் பெண்கள் அணியும் 'சரோங் கெபாய்' இந்த போர்த்துக்கீசிய
>மொழியிலிருந்து வந்ததுதானோ ?
>
>=====
>அன்புடன்
>
>சாபு
ஆமாம். மலாயாவின் மலாய்க்காரர்களின் வரலாற்றில் ஐந்து
கட்டங்கள் உண்டு. அவற்றில் இரண்டாவது கட்டமாகிய மலாக்கா
பேரரசுக் காலத்தையே அவர்களின் பொற்காலமாகக் கருதுகின்றனர்.
மலாக்காவைப் போர்த்துக்கிசியர்கள் கைப்பற்றிய பின்னர் ,
அவர்களுடைய கலாசாரக்கூறுகளில் சில இங்கு வந்து சேர்ந்துகொண்டன.
அவற்றில் இந்த கெபாயாவும் ஒன்று. Kamis என்ற பெண்கள் சட்டையும்
இருக்கிறது.
மலாய்க்காரர்களிடையே தற்சமயம் பிரபலமாக விளங்கும்
'ஜோகெட்' (Joget) என்னும் நடனம் அவர்களுடைய கலாசார
நடனங்களில் ஒன்றாகிவிட்டது. அது போர்த்துக்கீசியர்கள் ஆடிய நடனம்.
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மலாக்காவில்குடியேறிய போர்த்துக்கீசிய
வம்சாவளியினர் இன்றும் உள்ளனர். அவர்களை 'Serani' என்று
அழைப்பார்கள். அவர்கள் இன்னும் அந்த மூல போர்த்துகீசிய நடனத்தை
ஆடிக்கொண்டுதான் இருக்கின்றனர். அவர்களுடைய 'Jingli Nona,
Jingli Nona' என்றொரு பாட்டு மிகவும் பிரபலமானது. அது
போர்த்துகீசிய மொழியில் உள்ளது.
இந்த ஜிங்கிலி நோனாவும், ஜோகெட்டும், சிலோனீஸ் பைலா
எனப்படும் நடனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. ஏனெனில்
ஒரே மூலத்தைக் கொண்டவை. ஒரே தாள அமைப்புக் கொண்டவை.
ஒரே தாளத்தை இசைத்துக்கொண்டு 'Jingli Nona'-வையோ,
'Harum Harum Bunga Kasturi'-யையோ, 'Meet me tonight in
the Moon-light'-டையோ, 'சின்னமாமியே உன் சின்ன மெகளெங்கே -
பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ'-வையோ பாடிவிட
முடியும். அந்த rhythm தாளக்கட்டு ஒரேதாகத்தான் இருக்கும்.
இன்னும் கொஞ்சம் இழுத்துப்பார்ப்போமே. கோவாவில்
ஒரு நடனம் ஆடுவார்கள். அதுவும் இதே மூலம்தான்.
இன்னு சற்று எட்ட......
Lambada -வுக்கும் இந்தச் சாயல் உண்டு.
அதெல்லாம் சரிதான் 'பெரியவரே' என்று விளித்திருக்கிறீர்கள்.
இந்த லம்பாடா-கிம்பாடாவெல்லாம் எங்காவது எந்தப் பெரியவராவது
சொல்லக் கேட்டதுண்டா?