From naga ganesan@... Mon Jan 28 00:26:39 2002
Return-Path: X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 1 3); 28 Jan 2002 08:26:38 -0000
Received: (qmail 21463 invoked from network); 28 Jan 2002 08:26:38 -0000
Received: from unknown (216.115.97.172) by m8.grp.snv.yahoo.com with QMQP; 28 Jan 2002 08:26:38 -0000
Received: from unknown (HELO n30.groups.yahoo.com) (216.115.96.80) by mta2.grp.snv.yahoo.com with SMTP; 28 Jan 2002 08:26:38 -0000
Received: from [216.115.96.178] by n30.groups.yahoo.com with NNFMP; 28 Jan 2002 08:26:08 -0000
Date: Mon, 28 Jan 2002 01:09:22 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: kOvalan heroes
Message-ID: User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3612
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan" X-Originating-IP: 216.88.65.166
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 15288
> --- In agathiyar@y..., Elangovan N wrote:
> > மதுரை எரிந்து கொண்டிருக்க,
> > கண்ணகியின் பின் நின்ற மதுராபதித் தெய்வம்,
> > கோவலனின் முற்பிறப்பு பற்றி கூறும் இடம் சிந்திக்கத் தக்கது.
> >
> > "முந்தைப் பிறப்பிற் பைந்தொடி! கணவன்
> > வெந்திறல் வேந்தற்குக் **கோத்தொழில்** செய்வோன்
> > பரதன் என்னும் பெயரன்அக் கோவலன்
> > விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின்
> > ஒற்றன் இவன்எனப் பற்றினன் கொண்டு...."
> >
> > (கட்டுரை காதை, அடிகள் 152-156)
> >
> > கோத்தொழில் என்றால் 'அரச வினை' என்கிறார் நாட்டார்.
> > அதாவது அரசனின் ஏவல்களைச் செய்பவன்.
> >
> > அப்படிக் கோத்தொழில் செய்தவன் பெயர் பரதன். **அக்கோவலன்**
> >(அதாவது கோத்தொழில் செய்பவன்---154 வது அடியைக் கவனிக்க)
> > குறைகள் உடையவனானதால் சங்கமன் என்ற வணிகனை ஒற்றன் என்று
> > பிடித்துக் கொண்டு போய் கொலைசெய்யக் காரணமாயினன்.
> >(ஆதலால் சங்கமனின் மனைவி நீலி இட்ட சாபமே
> > கோவலனின் கொலைக்குக் காரணம் ...என்று கதை போகும்)
> >
> > ஆகவே, இங்கு "கோத்தொழில்" செய்பவன் "கோவலன்" என்ற
> >பொருள்படி, முந்தைய பிறப்பை மிகுதியாகப் பேசும்
> >இளங்கோவடிகளார், முற்பிறப்பில் பரதன் என்னும் பெயர்
> >கொண்டு கோத்தொழில் செய்தமையால் சிலம்பில் தன் கதை
> >நாயகனுக்கு கோவலன் என்று பெயரிட்டிருக்கக் கூடும்
> > என்று கருதுகிறேன்.
>
<<<<
சங்க iஇலக்கியத்துள் கோவலன் என்றால் கண்ணபெருமான் என்ற
பொருளில் பாடல் சிறந்துவிளங்குவது போலவே,
iஇங்கும் ஒருவகையில் கண்ணபிரான் தொடர்பு உள்ளதை
இiளங்கோ அடிகள் காட்டியிருக்கிறார்.
நம் கோவலனுக்கு முந்தைப் பிறப்பில் இiருந்த
கோவலன் யார்?
வெந்திறல் வேந்தற்குக் **கோத்தொழில்** செய்வோன்
என்பார் இளங்கோ அடிகள்.
ஈண்டு அந்த வேந்தனின் பெயரைக் காண்போம்:
"வடிவேல் தடக்கை வசுவும் குமரனும்"
என்னும் அடிகளில் மன்னன் பெயர் "வசு"
என்று அடிகளார் குறித்துள்ளார்.
அமாவாசை என்று ஓர்பெயர் உடைய தேவகியும்
வசுதேவர் தந்தையாகவும் பெற்றெடுத்த குழந்தை
கண்ணபிரான். அதனால், வசுகுமாரன் வாசுதேவன்
என்று அறியப்பட்டான்.
கோக்கும் தொழில் செய்வோர் கோவலர் - முல்லை
நில இடையர். "வசு என்னும் ராசாவுக்கு
கோத்தொழில் செய்யும் கோவலன்"
என்பது பூடகமாக கண்ணபிரானையும் குறிக்கிறது
என்று கருதுகிறேன். ஏனைப் பொருளையும்தான்.
குடவல iஇடவல கோவல காவல - பரிபாடல்.
>>>>
நம் கோவலனுக்கு முந்தைப் பிறப்பில்
பரதன் என்ற பெயர் ஏன் இளங்கோ வைத்தார்
என்று சொல்லணும்னு நினைத்தேன். எண்ண ஓட்டம்,
"மாடியில் போய் கம்ப்ய்யுட்டரிலேயே இருந்தா
எப்படி? மளிகைச் சாமான் வாங்குங்க" -மனைவி
அடுக்களையிலிருந்து. எனவே, மறந்துவிட்டேன்.
------
பரதன் என்ற பெயரை ஓர்க.
ராமாவதாரம் க்ருஷ்ணாவதாரத்துக்கு முந்தையது.
ராமனின் தம்பி பரதன். பலராமனின் தம்பி
கோவலன் (கண்ணபிரான்).
எனவேதான் பரதனின் அடுத்த பிறப்பு நம்
கோவலன் என்ற நாய்கன் என்றார் அடிகள்.
மேலும் முந்தைப் பிறப்பில் வசு என்பவனுக்குக்
கோத்தொழில் செய்தவன். வசு வின் மகன்
வாசுதேவன் (கோபாலன்) பிறந்ததும்
இiடம் மாறினான் அன்றோ?
அன்புடன்,
நா. கணேசன்
>
> > ந.மு.வே.நாட்டார் அவர்கள் தன் உரையில்
> > "பரதன் என்னும் பெயரன்அக் கோவலன்" = "கோவலனாகிய
> > பரதன் என்னும் பெயரினையுடைய அவன்" என்று
> > குறித்திருப்பது ஆயத்தக்கது.
> >
> > இக்கருத்தின் நோக்கில்
> > "கோத்தொழில் செய்பவன் = அரச வினை செய்பவன் = கோவலன்"
> > = பரதன். அப்பரதனின் பின்னாற் பிறப்பிற்கு அடிகளார்
> >கோவலன் என்றே பெயர் சூட்டியிருக்கிறார்.
> >
> > இது தங்களாலும், நமது இணைய அறிஞர்களாலும் அலசப் படவேண்டும்
> > என்று கேட்டுக் கொள்கிறேன்.
> >